சனி, 28 ஆகஸ்ட், 2010

ஒரு கட்டிடமும் இரு அய் ஏ எஸ்ம்

தெற்குகோவையில் நடக்கும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்துக்கும் அரசு போலவே மௌன சாட்சியாக விளங்கி வருகிறது ஒரு கட்டிடம் இந்திய செஞ்சிலுவை சங்க கட்டிடம் 
இரு மாதங்களுக்கு முன் கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடத்தின் முன் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்ததது . நடத்தியவர்கள் மாற்றுத்திரனாளிகள்
துக்ளக் எனும் பத்திரிக்கையில் முருகன் எனும் ஓய்வு பெற்ற அய் ஏ எஸ் அதிகாரி மாற்றுத்திரனாளிகளை கொச்சை படுத்தி எழுதியதை கண்டித்துதான் நடந்தது அந்த கண்டன ஆர்ப்பாட்டம் .
அய் ஏ எஸ் அதிகாரிகள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதற்கு முருகன் அய் ஏ எஸ் ஏ முன் உதாரணம் .
இன்று அதே கட்டடத்தில் உமா சங்கர் அய் ஏ எஸ் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்தியது ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் .
அய் ஏ எஸ் அதிகாரிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உமா சங்கரே அடயாளம் .
இன்றளவும் நிறைய நேர்மையான அதிகாரிகளை நீங்கள் காண நேரலாம் அவர்களில் இருந்து உமா சங்கரை அவரது போராட்ட குணம் வேறுபடுத்திகிறது.
மற்றவர்களிடம் நேர்மை இருக்கிறது அவர்களின் நேர்மை என்பது அவர்கள் அளவில் அவர்கள் இலஞ்சம் வாங்காமல் இருப்பது என்கிற அளவிலே இருக்கிறது .
நேர்மைக்கு பேர் பெற்ற கக்கன் ஒருமுறை அவர் அமைச்சராக இருக்கும் பொழுது சங்கர சாரியை பார்க்க போனாராம் கக்கன் கீழ் சாதி அதனால் அவரை நேராக பார்க்க மறுத்து சாரிக்கும் கக்கனுக்கும் இடையில் ஒரு பசு மாட்டை நிறுத்திவைத்து பார்த்தானாம் சங்கராச்சாரி . கக்கனின் போராட்டமில்லா நேர்மையால் அங்கு ஒரு பயனும் நிகழவில்லை மாறாக அவர் போராட தயாராக இருந்த்திருந்தால் . பசு மாட்டை நிறுத்த துணிவு வந்திருக்குமா அந்த எருமை மாடுகளுக்கு .
இதற்க்கு முன் 95 இல் அம்மையாரின் ஆட்சில் நடந்த சுடு காட்டு ஊழலையும் அம்பலப்படுத்திவர்தான் இந்த உமா சங்கர் .
இரு கழகங்களாலும் பழி வாங்கப்பட்டவர் தான் உமா சங்கர்.
உமா சங்கர் ஏன் பழி வாங்கப்பட்டார் ஒன்னுமில்லைங்க நம்ம விஜய் மதுர என்கிற படத்துல கலக்டர நடிசிருந்த்தாரு . நாமும் கை தட்டி விசிலடிச்சு ரசிசசோமே அதே வேலையத்தான் உமா சங்கரும் நிஜத்துல செஞ்சிருக்காரு .
ஒண்ணுமில்லிங்க வடிவேலு ஒரு படத்துல கிணத்த காணமேன்னு போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைன்ட் குடுப்பாரே. பார்க்கறதுக்கு கேணத்தனமா இருக்கும்
அதேதான் நிஜத்துலயும் நடந்ததது இவர் எல்காட் நிறுவன அதிகரியா இருந்த்த பொழுது எல்காட் நிறுவனத்துக்கு சொந்தமான 700 கோடி சொத்துக்கள காணோம்
அத தோண்ட போய்தான் இப்ப வேல போய் நிக்கறாரு உமா சங்கரு.
அதுக்காக அவர் சாதி சான்றிதழை அகழ்வாராய்ச்சி செய்திருக்கின்றனர் பெரியாரின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அரசு ."அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல்" பெரியாரின் வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது .
உமா சங்கர் எழுப்பியுள்ள கேள்வியெல்லாம் அவருக்கானது அல்ல மக்களுக்கானதே (சாதாரண குடிமக்கள் அரசு நிறுவன அதிகாரிகள் மேலோ அய் ஏ எஸ் அதிகாரிகள் மேலோ சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட சிக்கல் இருப்பதால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது மோசடியே என்கிறார் ) எனவே தன்னைப்பற்றிய C.B.I. விசாரணைக்கும் கூட தயாராகவே இருக்கிறார்.
நீதிக்காக போராடிய உமா சங்கரின் பணி நீக்கம் நமக்கு அறுதியிட்டுக்காட்டுவதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான் அது அதிகார வர்கம் என்றுமே மக்களுக்கானதல்ல அது என்று ஆளும் வர்க்க சேவைக்கே ................வாழ்க ஜனநாயகம்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

உடைக்கப்பட்ட நிலாக்கள்

சமீபத்தில் நண்பர் ஒருவர் தந்த உடைந்த நிலாக்கள் எனும் புத்தகத்தை வாசித்தேன்
பாக்கியா வெளியீடு

பா விஜயின் வரலாட்ட்று வாந்தி
கவிஞன் "மை" க்கு பதிலாக கய"மை" யை நிரப்பி எழுதியுள்ளார்.
நிறைய இடங்களில் வரலாற்றுக்கு தக்க வார்த்தையை மாற்றாமல் வார்த்தைக்கு தக்க
வரலாற்றை மாற்றியுள்ளார் .
புத்தகத்தின் இறுதியில் இவர் கூறியுள்ளார் வரலாறையும் கற்பனையையும் கலந்து எழுதியுள்ளதாக .
ஆனால் முழுவதும் கற்பனை செய்து ஒரு வரலாறை எழுதியுள்ளார் என்பதே உண்மை
முழு பொய்யை விட அரை உண்மை கொடியதே அதைதான் இப்புத்தகம் செய்துள்ளது

புதன், 25 ஆகஸ்ட், 2010

தேச பக்தர்கள் கவனத்திற்கு


மூன்று நாட்களுக்கு ஒரு இந்திய ராணுவ வீரன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு இறக்கிரானாம் .

கார்கில் போரின் போது குத்தாட்டம் போட்டு நிதி வசூலித்த தேசபக்தத நடிகர்களே  கலைஞர்களே .
கார்கிலுக்காக மேடை போட்டு கண்ணீர் சிந்திய மேட்டுக்குடி அப்பார்ட்ட்மென்ட் தேச பக்தர்களே
மக்களிடம் போர் பிரசாரத்தை எடுத்து சொல்லி உண்டியலில் காசு வாங்க மாணவர்களை மோட்டிவேட் செய்த மரியாதைக்குரிய தேசபக்தி ஆசிரியபெருமக்களே
உண்டியலில் தேசபக்தி வழிய வழிய காசு போட்ட வர்த்தகர்களே
எல்லாத்துக்கும் மேலாக தேசபக்தியின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்கலான சுயம் சேவகர்களே வாருங்கள் உங்களுக்கான தேவையும் வேலையும் வந்திருக்கிறது மீண்டும்.................................. . வருவீர்கள பக்தர்களே
முன்பு தெருவெங்கும் நீங்கள் துண்டேந்தி வந்த பொழுது நீங்கள் கூறினீர்களே அதே அதே காரணத்திர்க்காகதான் இப்பொழுதும் அழைக்கிறோம் வாருங்கள் நம் தேசத்தின் எதிரிகளால்  கொல்லப்பட்டவர்கள் இன்று தங்களை தாங்களே கொன்று கொண்டிருக்கிறார்களாம் . வாருங்கள் கார்கிலை பிரசாரம் செய்தது போலவே இதையும் பிரசாரம் செய்வோம்.  இந்தக்கொலைகளுக்கு யார் கரணம் அல்லது எது காரணம் என கண்டறிவோம் .
வருவீர்களா................. வரமாட்டீர் ..............
காரணம்  இவன் இறந்தால் எதிரிகள் உள்ளே நுழைந்து விடுவார்கள் அவ்வாறு நுழைந்தால் தங்கள் உடமைகள் இழந்துவிட நேரிடும் என்ற அச்சத்தால் எழுந்த அக்கரயும் பக்தியும் தான் கார்கிலில் உங்களை உந்தித்தள்ளியது .
மாறாக இப்பொழுது அவன் இறந்ததால் அதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை உங்களுக்கு..................................................அதனால் வரமாட்டீர்  தேசபக்தர்களே.
சிலது அழிந்துதான் சிலதுக்கு உரமாகின்றன எனும் பாரசீக பழமொழியின் அர்த்தம் புரிகிறது இப்போது ....................................................................................

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

சீமானும் சினிமா வர்த்தகமும்

2 ரூபா கடலை வாங்கி தின்ற பிறகு கடலை சுற்றிய பேப்பரை பார்த்தேன் .
வாரமலரின் கிசு கிசு பகுதி பிறவிப்பயனை அடைந்து விட்டோம் எனும் ஆவலில்
கிசு கிசுகளை படிக்க ஆரம்பித்தேன் . நான் படித்த கிசு கிசு உங்களுக்காக "சமீபத்தில் ஆதவன் நடிகர் நடித்த திரைப்படத்தின் விநியோக உரிமையும் நடிகரே வாங்கியுள்ளார் தன்னுடன் நடித்த இந்தி நடிகர் இலங்கை திரைப்பட விழாவில் கலந்து கொண்டதால் எங்கே தன் படம் திரையிடலில் பிரெச்சனை வந்துவிடுமோ என்று அஞ்சி பெரிய இடத்தை அணுகியுள்ளார் அவர்களும் பிரெச்சனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் விநியோக உரிமையை மட்டும் எங்களிடமே தந்து விடுங்கள் என்றார்களாம்" இந்த கிசு கிசு சீமான் சிறை செல்லும்முன் வந்த செய்தி
எனவே மாண்புமிகு பெரியோர்களே சீமானின் சிறை வாசம் யார்? யாருக்காகவோ? (இந்த யார் யாரோ யார் என்பது உங்களுக்கே தெரியுமென நினைக்கிறேன் நேரடியாக சுட்டிக்காட்ட நான் என்ன மக்கு ஐ ஏ எஸ் உமா சங்கரா? )வியாபார நலன் கருதி நடந்தேறியிருக்கும் அடக்குமுறை நாடகமே .

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

முதலாளி

போபால் ஊரே படுகொலை - ஆண்டர்சன் முதலாளி
தண்ட காரண்யா மக்கள் படுகொலை - வேதாந்த முதலாளி
ஈழம் ஒரு இனமே படுகொலை - டாட்டா அம்பானி மற்றும் சில இந்திய தரகு முதலாளி
அய்யய்யோ  பயங்கரவாதி  இல்ல இல்ல முதலாளி

வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது

உழைக்கும் வர்கத்தின் குரலில் மேட்டுக்குடி வார்த்தைகளை வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார் நடிகர் வடிவேலு சுதந்திர தின சிறப்பு டீல நோ டீலாவில்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம் எனும் பாடலுடன் அறிமுக உரை நிகழ்த்தி அடித்தரே ஒரு லக்சர் அத மட்டும் உத்தமபுறம் ,பாப்பாபட்டி, கீறிப்பட்டி மக்கள் கேட்ட ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது உனக்கு .
பிறகு பெற்ற சுதந்திரத்தை? பேணி பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி ஒரு பாடல் (5 லட்சம் வீரகளை! நிறுத்தியும் 3க்கு2 அளவுள்ள தேசிய கொடி ஏத்தமுடியல சுதந்திர தினத்தன்று காஷ்மீர்ல)
ஆனா அவர்களை புகழ்ந்து கொண்டே வந்ததவர் தன்னையும் அறியாமலோ அறிந்தோ ஒரு உண்மையை சொன்னார். அதாவது காஷ்மீரின் எலும்புருக்கும் பனிமலையில் அவர்கள் காவல் இருக்கவில்லையென்றால் நாம் நிமமதியாக தூங்க முடியாதாம் .உண்மை தான் ஆனால் நாம் என்பதில் இந்த தேசத்தின் பெரும்பான்மையான உழைக்கும் வர்கமாகிய நாங்கள் இல்லை
நீங்கள் தான் தூங்க முடியாமல் துன்பப்படுவீர்கள் .
"அவர்கள் 18,000 அடி உயரத்தில் மட்டுமல்ல அவர்கள் உங்கள் வீட்டு வாசலிலும் தான் நிற்கிறார்கள் அவர்கள் முன்னாள் ராணுவவீரர்கள் நேற்று நாட்டு எல்லைக்கு காவல் இன்று உங்கள் வீட்டு எல்லைக்கு காவல் இரண்டும் ஒன்றுதான் எனும் ரகசியம் அந்த ஏமாளிகளுக்கு புரியும் வரை நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்"
எனும் மருதையனின் வரிகள் மனதில் ஓடியது

ஒரு புன்னகையும் பல இளிச்ச வாயன்களும்

ராஜ் டிவி யில் இரவு ஒரு நிகழ்ச்சி சினிமா சினிமா .
அதன் கான்செப்ட் இதுதான் நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு பிரபலத்தின் முகத்திலிருந்து ஏதாவது ஒரு பகுதி காட்டப்படுகிறது . பிரபலங்களின் பிரபலமான பகுதியே காட்டப்படுகிறது உதரணமாக மாதவனின் புன்னகை நாசரின் மூக்கு போல
நண்பர் ஒருவர் மாதவனின் புன்னகை டிவியில் காட்டப்பட்டதும் ஆர்வம் மேலிட தான் ஏதோ ஜேம்ஸ் பான்ட் ரேஞ்சில ஏதோ கண்டுபிடித்து விட்டது போலவும் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த்தார் . அப்பொழுது டிவியில் இந்த புன்னகை யாருடையது என்று கண்டுபிடித்து போன் செய்பவர்களுக்கு பத்தாயிரம் ரூவா பரிசு என்று அறிவ்துக்கொண்டிருன்தனர் ஓர் யுவனும் யுவதியும்
விடுவாரா நண்பர் தன் அலைபேசியிலிருந்து அழைத்தார் சிறிது மணித்துளிகளுக்கு பிறகு தன் காதிலிருந்து போனை எடுத்தவர் போனையே ஒரு சோக பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் . விஷயம் கேட்டபொழுது தன்னிடம் 50 ரூவா பாலன்ஸ் இருந்ததாகவும் 5 செக்கேண்டில் அது திவால் ஆகிவிட்டதாகவும் கூறினார்
முதலாளித்துவ சமூக அமைப்பில் இது போன்ற சிலந்தி வலைகள் எல்லா தளங்களிலும் பின்னப்பெட்டிருக்கும் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
டிவியில் சினிமா சினிமா போலவே மெயிலிலும் சில சமயம் பரிசு அறிவுப்புகள் வரும்
அப்புறம் ஷேர் மார்க்கெட் எல்லாம் இருக்கு. ஆறாவது அறிவும் நம்மகிட்டதான் இருக்கு

சனி, 21 ஆகஸ்ட், 2010

பாதைகள் மாறட்டும்


ஜக்காதுக்களின் பிச்சைகளையும்.
தர்மங்களின் அதர்மங்களையும்.
இலவசங்களின் அயோக்கிய அரசியலையும்.
புறக்கணித்த கூட்டம் ஒன்று சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு பள்ளியில் சிறைவைக்கப்பட்டது அறுவத்தினாலாம் சுதிந்திர நாளில்.
போலி சுதந்திர நாளில். அப்போது தோன்றிய வரிகள்
இதே பள்ளியில் தான் இலவச வேட்டி சேலைக்காக கூடிய கூடம் கலைந்த போது பிரிந்து போயின பதினைந்து உயிர்கள் .
இலவசங்களுக்காக ஓடிய உங்கள் பாதங்கள் சற்றே பாதை மாறி உங்களை இல்லாமையில் ஆழ்த்திய அயோக்கியர்களின் இருப்பிடம் நோக்கிப்பயணித்திருந்தால் இழந்திருப்போம் இன்னும் சில உயிர்களை ஆனால் அடைந்திருப்போம் ஒரு
உண்மை சுதந்திரத்தை .

புதன், 18 ஆகஸ்ட், 2010

சு "தந்திரம்"


கல்வியின் பெயரால் தாங்கள் கொள்ளையடிப்பதை மறந்து கொடியேற்றி
மிட்டாய் தின்று இனிதே முடிகிறது மாணவ சுதந்திரம் .
வீதியோவியத்தில் சேவும் பகத்சிங்கும் சிரிக்க இனிதே
கழிகிறது கம்யூனிஸ்ட் கட்சிகளின் சுதந்திரம்.
மோடியும் அத்வானியும் சுதந்திர தின விழாக்களில் .
மதானியும் அன்சாரியும் தனிமைச்சிறையில்
அணிவகுப்பில் அரங்கேறுகிறது இஸ்லாமிய இயக்கங்களின் சுதந்திரம்.
அடிமை இந்தியாவில் ஜாலியன் வாலபாக் மண்ணை எடுத்தான்
பகத்சிங் கலகம் பிறந்தது.
சுதந்திர இந்தியாவில் போபால் மண்ணை எடுத்தான்
ஜெய் ராம் ரமேஷ் ஆணவம் பிறந்ததது .
மண்ணை தொட்டும் உயரோடு இருப்பதாக உளறினனாம் .
ஆம் உயிரோடுதான் இருக்கிறான் நம் உணர்வுகள் மரித்ததால்.
புரிந்து கொண்டோம் ச்சூ (சு) "தந்திரம்"

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

மொழி


சென்னையில் நாங்கள் தங்கியிருந்த ரூம் காலி செய்ய வேண்டியிருந்ததால் ஒரு வாரம் சேத்துப்பட்டில் உள்ள உதவி இயக்குனர் லிங்குவின் அறையில் நானும் உதவி ஒளிப்பதிவாளர் கார்த்தியும் தங்கியிருந்தோம் இரவு உணவு அருந்த தினமும் சேத்துப்பட்டு காவல்நிலையத்தின் அருகிலுள்ள ஹோட்டலுக்கு தான் வழக்கமாக செல்லுவோம்.
அன்றும் வழக்கம் போல் நான் கார்த்தி மற்றும் லிங்குவும் உணவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம்.என் மலயாளியுடன் ஒரு உரையாடல் எனும் பதிவில் (http://mugavare.blogspot.in/2010/07/blog-post_3520.html) தனக்கு உள்ள முரண்பாடுகளைப்பற்றி கார்த்தி என்னுடன் விவாதித்துக்கொண்டே வந்தார். லிங்கு மட்டும் மௌன சாட்சியாக செவிகளை எங்கள் உரையாடலுக்கும் பார்வையை தன் அலைப்பேசியில் வந்து கொண்டிருந்த குருஞ்ச்செய்திகளுக்கும் கொடுத்துக்கொண்டு வந்தார் .
ஹோட்டலில் அமர்ந்து ஆடர் கொடுத்த பிறகும் மொழி பற்றிய எங்கள் விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அந்த ஹோட்டலில் 2 நேப்பாளிகள் ஒருவருக்கு சுமார் 30 , 32 வயதிருக்கும் இன்னொருசிறுவன் சுமார் 13 , 14 வயதிருக்கும்
நாங்கள் தினமும் செல்வதால் அவர்களை நாங்கள் கவனித்திருக்கிறோம் அந்த பையன் ஒரு கோபமான முகத்துடனே அனைவரையும் பார்த்துக்கொண்டிருப்பன் .யாரவது தண்ணீர் அல்லது வேறேதாவது கேட்ட்டலும் அசைவில்லாமல் பார்த்துக்கொண்டே இருப்பன் .ஆனால் அவர்கள் உணவருந்திவிட்டால் டேபிளை மட்டும் உடனுக்குடனாக சுத்தம் செய்துவிடுவான் .
அன்றும் அவ்வாறே எங்களை பார்த்துக்கொண்டிருந்தான் . வாதம் சூடாக போய்க்கொண்டிருந்ததால் எனக்கு தாகம் எடுத்தது .அவனிடம் தண்ணீர் கேட்டேன் எந்தப்பதிலும் தராமல் வழக்கமான பார்வை பார்த்தான் . மீண்டும் இரண்டாவது முறை நான் ஹிந்தியில் தண்ணீர் கேட்டதும் எடுத்து வந்து தந்தான் .ஆனால் அதே முகபாவம் . மீண்டும் தன் பழைய இடத்திற்கே சென்று நின்றுகொண்டான் .
நான் அவனிடம் சாப்பிட்டிய? என்று கேட்டேன் . இப்பொழுது அவன் முகம் முழுதும் சிரிப்புடன் எங்கள் அருகில் வந்து எங்களுக்கு ஹிந்தி தெரியுமா? என்று கேட்டான் .
பிறகு சென்று தன் பழைய இடத்திலேயே நின்று கொண்டான் .எங்களை அவன் கண்கள் சந்திக்கும் பொழுதெல்லாம் முகத்தில் சிரிப்பை பூசிக்கொண்டே இருந்தான் .
எங்கள் டேபிளுக்கு பரிமாறவும் செய்தான் . உள் அறையில் இருந்த இன்னொரு நேப்பாளியிடமும் சென்று எங்களைப்பற்றி ஏதோ கூறிக்கொண்டிருந்தான் .பிறகு அந்த நேப்பாளியும் எங்கள் அருகில் வந்து ஹிந்தியில் கார்த்திக்கிடம் உரையாட தொடங்கினான் . கார்த்திக் செய்கையால் என்னை சுட்டிக்காட்டினார் . அவர் எங்கள் மூவரின் முகங்களையும் தனித் தனியே உற்று நோக்கினார் . பின் என்னைப்பார்த்து ஒரு 5 நிமிடம் உரையாட முடியுமா என்று கேட்டார் இப்பொழுது அவர் கண்களில் நீர் கோர்த்திருந்தது .
பின் அவர் தன் குடும்பம் பற்றியும் வறுமையின் காரணமாக இங்கே பிழைக்க வந்ததுபற்றியும் கூறினார் . அந்த சிறுவன் தன் அண்ணனின் மகன் தான் என்றும் இங்கு ஹிந்தியில் யாரிடமும் உரையாடமுடியாமல் தான் ஒரு ஊமை போல் உணர்வதாகவும் தினமும் எதையாவது பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் தன் அண்ணனின் மகனிடம் தான் பகிர்ந்து கொள்ள முடியும் என்று தான் சித்தப்பா என்பதால் ஒரு எல்லைக்குள் தான் தன்னால் அவனிடம் உரையாட முடியும் என்றும் அதுவும் கடந்த ஒரு வாரமாக அவன் இவருடன் கோவிதுக்கொண்டுள்ளதால் உரையாடாமல் இருந்தான் என்றும் இப்பொழுது எங்களைப்பற்றி சொல்வதற்காக தான் பேசினான் என்றும் கூறினார் .அவர் இங்கு வந்து 6 மாதகாலம் ஆகிவிட்டதாகவும் . காலை 5 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இரவு 12 மணிக்கு மேல் தான் முடியும் என்றும் கடந்த வாரம் தண்ணீர் குடம் எடுத்து வரும்பொழுது கால் இடறி மாடியிலிருந்து விழுந்து விட்டதாகவும் அதனால் இடுப்புப்பகுத்யில் நல்ல வலியிருப்பதாகவும் அதற்க்கு சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லவேண்டும் என்றும் அதற்காக அந்த விவரங்களை தமிழில் எழுதித்தருமாரும் கேட்டுக்கொண்டார் . நாங்களும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டோம் . பாதியிலேயே விட்ட எங்கள் விவாதம் பிறகு அன்று நீடிக்கவே இல்லை . கார்த்திக் இந்த சம்பவம் தனக்கு மிகுந்த மன பாரத்தை தந்ததாக சொன்னார் .
மறு நாள் நாங்கள் ஹோட்டலுக்கு சென்ற பொழுது அவர்கள் புன்னகையுடன் மட்டும் நிறுத்திக்கொண்டனர் . பேசவேயில்லை காரணம் கேட்ட பொழுது நேற்று எங்களுடன் பேசியதற்காக முதலாளி கடிந்து கொண்டதாக மட்டும் கூறி நகர்ந்து விட்டார் . இதிலிருந்து நாம் எதைப்புரிந்து கொள்வது நேற்றய விவாதத்தின் முடிவென்ன என்றல்லாம் மனதில் தோன்றிய கேள்விகளுடன் நாங்கள் இருவரும் எங்கள் முகங்களை பார்த்துக்கொண்டோம் .

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010