புதன், 22 டிசம்பர், 2010

கீழ்வானம் சிவக்குது

உழைக்கும் மக்களின் தன்மான உணர்வு எத்தகையது என்பதற்கு உலக வங்கியில் இந்திய வாங்கியுள்ள கடனுக்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா 3500 ரூபாய்க்கு மேல் கடன் உண்டென்பதரிந்து அந்த தொகையை நாட்டு பிரதமருக்கு மணி ஆர்டர் எடுத்து அனுப்பிய திருச்சி கைவண்டி இழுக்கும் தொழிலாளியின் செயல் ஒன்றே சான்றாகும். மேலும் இனிமேல் இதுபோல் கடன் வாங்க வேண்டாம் என்றும் அப்படி வாங்கும் முன் தன்னிடம் கேட்டுவிடுமாரும் கடிதம் போட்டிருந்தாராம். இந்த பத்திரிகை செய்தியை படித்து விட்டு அந்த தொழிலாளியின் அறியாமையை எள்ளி நகையாடினர் மேட்டுக் குடி நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள். அந்த தொழிலாளியின் தன்மான உணர்வை அறிவு(!)ஜீவிகளுக்கு எடுத்து சொல்லி விளக்கியதும் மன்னிப்புக்கேட்டு விலகிக்கொண்டனர். இங்கே விஷயம் அதுவல்ல இப்பேர்ப்பட்ட தன்மையும் தன்மான உணர்வும் கொண்டது உழைக்கும் மக்களின் மனநிலை. இப்படி பட்ட மக்களையும் அவர்களின் மன நிலையையும் இதுவரை காயடித்து வந்த தொழிற்சங்கங்களுக்கு காயடித்துள்ளனர் கோவை NTC (பஞ்சாலை) தொழிலாளர்கள். கோவை நகரை உருவாக்கியதில் கோவையில் இருக்கும் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு முக்கிய பங்குண்டு இன்று இங்கே செயல் பட்டுக்கொண்டிருக்கும் கல்வி நிறுவங்கள், மருத்துவமனைகள் எல்லாமே பஞ்சாலை முதலாளிகள் பஞ்சாலையில் இருந்து பெற்ற இலாபத்தில் கட்டியதே. அதேபோல போராட்ட குணத்திலும் இந்த பஞ்சாலை தொழிலாளர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு ஸ்டேன்ஸ் மில் போராட்டமும் சின்னியம் பாளையம் தியாகிகளின் உயிர் தியாகமும் பறைசாற்றுகிறது எனினும் இப்படிப் பட்ட உழைக்கும் மக்களைத்தான் கடந்த காலங்களில் அனைத்து ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கமும் மடைமாற்றி ஏய்த்து வந்தன அவர்கள் தொழிலாளிகளின் போராட்ட குணத்தை மாற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுத்ததெல்லாம் நாமம் போராட்டம், கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டம் போன்றவைகளையே. இது போன்ற சூழலில் தான் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி கோவையில் செயல்படத்தொடங்கி கோவையில் உள்ள SRI எனும் நிறுவனத்தில் மிகப்பெரும் அடக்குமுறைகளை எல்லாம் சந்தித்து தன் போராட்ட குணத்தால் பல்வேறு சலுகைகளை தொழிலளர்களுக்கு பெற்றுத்தந்தது இதை பார்த்து பல்வேறு ஆலைகளில் பு ஜ தொ மு வின் கிளைகள் கட்ட தொழிலாளர்கள் ஆர்வப்பட்டு கோவையில் சில நிறுவனகளில் கிளைகளும் கட்டப்பட்டு தொழிலார்களுக்காகவே இயங்கிவருகிறது. இந்த சூழலில் தான் இதுவரை தேர்தலே நடக்காமல் இருந்த NTC மில்களில் தேர்தல் நடத்தவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கிட்டு வெற்றி கண்டது பு.ஜ.தொ.மு.வுடன் இணைக்கப்பட்ட கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கம சங்க பிரதிநிதிகளின் அயராத உழைப்பாலும் அவர்களின் எளிமையாலும் எளிதாகவே தொழிலாளர்கள் அவர்களை நோக்கி வருவது கண்டு பயந்த துரோக சங்கங்கள் பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் பொய் பிரச்சாரங்களையும் செய்து பார்த்தும் தேர்தலில் தொழிலாளர்கள் பெருவாரியாக வாக்களித்து சங்கத்தை இரண்டாம் இடத்தில் கொண்டுவந்தனர் சங்க கிளையே இல்லாத இடத்தில் கூட தொழிலாளர்கள் வாக்களித்துள்ளனர் கோவை பாட்டாளிகளின் வரலாறு மீண்டு(ம்) எழுதப்படுகிறது கீழ்வானம் சிவந்து விட்டது இனி பழைய விலங்குகளை கழட்டிவிட்டு புதிய சிறகுகளுடன் பறக்கலாம் வாழ்த்துக்கள்

வெள்ளி, 22 அக்டோபர், 2010

காவல் துறையை புரிந்துகொள்ளுங்கள்

செப்டம்பர் 15 முதல் ஆந்திர மாநில காவல்துறை ஒரு கண்காட்சி நடத்தியுள்ளது
கண்காட்சியின் தலைப்பு "காவல் துறையை புரிந்துகொள்ளுங்கள்"
புரிந்து கொள்ளுங்கள் என்பதை நாம் எப்படி உச்சரிக்கிறோமோ அதற்க்கேற்றார்போல் அர்த்தமும் மாறும்
உண்மையில் அரசாங்கம் உத்தேசித்த அர்த்தம் என்ன என்று தெரியவில்லை
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு போலிசை பற்றி புரியவைக்கும் நிகழ்ச்சியும் நடத்தியுள்ளனர் பொறுப்புள்ள போலீஸ்காரர்கள் அதன்படி கடந்த 20 10 2010 அன்று மாணவர்கள் அந்த கண்காட்சியை சுற்றிப்பார்த்து வந்துள்ளனர் அவ்வாறு பார்த்துக்கொண்டே வந்த பள்ளி மாணவர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் stun gun எனும் வகைப்பட்ட இயந்திர துப்பாக்கியை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஒரு காவலர் அது செயல்படும் விதம் குறித்து செயல் முறை விளக்கம் செய்து காண்பித்துள்ளார் அதிலிருந்து தோட்டாக்கள் பாய்ந்து 2 மாணவர்கள் மரணித்துள்ளனர் எவ்வளவு அலட்சியம் இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பள்ளி மாணவர்கள் நிச்சயம் காவல்துறையை புரிந்துகொண்டிருப்பார்கள் காரணம் ரத்தமும் சத்யுமாக அந்த நிமிடம்வரை அவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சக மாணவர்களை கொண்டல்லவா நீங்கள் அவர்களுக்கு செயல்வழிக் கல்வி போதித்தீர் (உங்கள் ஆற்றலை காட்டவா எங்கள் மழலைகளை கொன்று போட்டீர்) எனவே உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டது
இந்த சம்பவத்திற்கு காரணமான போலீஸ்காரர் வெறும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அவளாவே இப்போது ஆந்திர மக்கள் உங்களை புரிந்துக்கொள்ள அவசரகதியில் ஒரு கண்காட்சி தேவைப்படுவதன் அவசியம் என்ன? அதன் அரசியல் உள்நோக்கம் என்ன? ஆந்திர மக்கள் மட்டுமல்ல காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் அரங்கேற்றிக்கொண்டுதான் இருக்கிறீர்கள் கண்காட்சிகளை நாங்களும் உங்களை புரிந்து கொண்டுதான் இருக்கிறோம்

வியாழன், 14 அக்டோபர், 2010

பாலஸ்தீன்,காஷ்மீர் தமிழக முஸ்லீம்கள்





இன்று இந்த கட்டுரை பதிவேரிக்கொண்டிருக்கும் நேரத்தில் கூட பல சிறுவர்கள்,பெண்கள்,இளைஞர்கள் கல்லெறிந்து கொண்டிருக்கலாம் தங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் ராணுவங்களுக்கு எதிராக. அந்த உணர்வுக்கும் நெஞ்சுரிதிக்கும் ஒரு வீர வணக்கம். இந்த போராட்டத்தில் அவர்கள் வெற்றிபெற புரச்சிகர வாழ்த்துக்கள்.
பாலஸ்தீனிலும் காஷ்மீரிலும் ஏதோ முஸ்லீம் மத அடிப்படை வாதத்துக்காகதான் போராடுகின்றனர் என்பது போன்ற ஒரு மாயை இங்குள்ள முஸ்லீம்களிடையே நிலவுவதையும் அதை இசுலாமிய தலைமைகள் அப்படியே ஊட்டி வளர்ப்பதையும் காண்கிறேன்.
காஷ்மீரை பொறுத்தவரை இதுபோன்ற இசுலாமியர்களின் சிந்தனையை வைத்து அங்கு உண்மையிலேயே ஒரு மத மோதல் தான் நடந்துகொண்டிருக்கிறது என்று இந்துத்துவ சக்திகள் தங்கள் ஊடகங்கள்(இதற்க்கு உதாரணமாக நிறைய சினிமா மற்றும் செய்திகள் உள்ளன அத்தனையும் இட இடம்பத்தாது) மூலம் நிலை நிறுத்துகிறது அதில் வெற்றியும் பெற்றுள்ளது
என் 26 வயதுவரை நானும் பாலஸ்தீன விடுதலைபோரை ஒரு தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்த்திருந்தேன் பின் ஒரு முறை லைலா ஹலேத் (laila khaled )எனும் ஒரு ஆவணப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதை பார்த்த பிறகே பாலஸ்தீன் பற்றிய என் மதிப்பீடுகள் முழுதும் தவறானதே என் சமூகத்தின் தலைமை பீடத்தில் உள்ளவர்களும் எங்களுக்கு இந்த உண்மையை சொல்லாமல் மறைக்கின்றனர் என்றும் மறைப்பதன் அரசியலும் விளங்கியது.
இனி அந்த ஆவணப்படம் பற்றி;
ஆவணப்படம் லைலா ஹலேத் என்ற ஒரு போராளி பெண்மணியை பற்றியது.
அந்த பெண்தான் வரலாற்றில் முதல் முறை ஆகாய விமானத்தை கடத்தியவர் அதுவும் இருமுறை (இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் எகிப்ப்தில்) அந்த பெண் ஒரு நாத்திகவாதி (இறை மறுப்பாளர்) மேலும் அவர் சார்ந்திருக்கும் அமைப்பு தோழர்(ஆண்)அவருடன் கைகுலுக்கிறார் நீண்ட இடைவெளிக்குப்பின் அவரை சந்திக்கும் தோழர் பாசப்பூரிப்புடன் அவரை ஆரத்தழுவிக்கொள்கிறார் கன்னத்தில் முத்தமிடுகிறார் பின் ஹலேடிடம் கேட்ப்பார் இப்பவும் நி தொழுகாம்தான் இருக்கியா என்பர் ஹலேத் சற்றும் யோசிக்காமல் இல்லையென்பார் அந்த ஆவணப்பட இயக்குனர் அவரிடம் கேட்க்கும் கேள்விக்கெல்லாம் அற்ப்புதமாக பதிலளித்துக்கொண்டே வருகிறார் ஒரு இடத்தில் சிறுவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் அப்போது இயக்குனர் ஹலேத் இடம் சிறுவர்கள் போரிடுவது தவறில்லையா என வினவுவார் அதற்கவர் அவர்கள் சிறுவர்களையும்தான் கொள்கின்றனர் என பதிலளிப்பார்
பின் இருவரும் வீதியில் நடந்துவரும்பொழுது சில சிறுவர்கள் ஒரு ஹெலிகாப்டரின் மீது கல்லெறிந்துவிட்டு(கல் அவ்ளோதூரம் போய் தாக்கவில்லை)மீண்டும் பழையநிலைக்கே வந்து விளையாடிக்கொண்டிருப்பார் அவர்களில் ஒருவனிடம் இயக்குனர் ஏன் கல் எறிந்தீர்கள் எனும்போது அவன் அவர்கள் எங்களை ஏமாற்றி அடிமைபடுத்திவைத்துள்ளனர் அதற்கெதிராகவே கல் எறிந்தோம் என்று கூறிவிட்டு சைக்கிளிலில் ஏறி சென்றுவிடுவான்
இதிலிருந்து தெரிவது ஒன்றுதான் மதம் எனும் அடிப்படையிலோ அல்லது மத வெறியின் அடிப்படையிலோ அங்கெல்லாம் போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை மாறாக சுதந்திரம் வேண்டியும் அடிமை தலைகளை எதிர்த்துமே முன்னெடுக்கப்படுகிறது
போராட்டம் நடக்கும் பலஸ்தீனில் போராடுவது முஸ்லீம்கள் என்பதாலேயே அவ்வாறு பார்க்கப்படுகிறது
காஷ்மீரின் நிலையும் இதுவே பார்க்க ஜூ வியில் இந்த வார(13/10/2010)ம் மனித உரிமைப்போராளி சுகுமாரனின் கட்டுரை
இனியேனும் தமிழக முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் பாலஸ்தீனையும் காஷ்மீரையும் இங்குள்ள தலைவர்களையும்
இனியும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் அது காவி பயங்கரவாதிகளுக்கே சாதகமாகும்

காஷ்மீர்

பற்றி எரிகிறது பனி மலை

எரியூகியாக எங்கள் உணர்வு

நிறைந்து வழிகிறது எங்கள் குருதி

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்

ஒரு நாள் வெந்து பொசுங்கும் உங்கள் ஏகாதிபத்திய மோகம் 

அதுவரை அஞ்சாமல் தொடர்வோம்.....................

கல்லெறிதலும் கல்லறை செல்வதும்

திங்கள், 20 செப்டம்பர், 2010

இன்னும் ஓர் (அ)நீதி

சுதந்திர ? இந்தியாவின் அகப்பெரும்பான்மையான வன்முறையில்  இரண்டாவது பாபர் மசூதி இடிப்பு (முதலாவது முஸ்லீம் வேடமிட்ட ஒரு காவி பயங்கரவாதி கோட்சேவால் காவி மிதவாதி காந்தி படுகொலை செய்யப்பட்டது )இப்போது நாடே ஒரு வித பதட்டத்துடன் (கோவையில் சில கல்லூரிகளில் i v போவது கூட ஒத்தி வைத்துள்ளனர் தீர்ப்புக்காக )இந்த இடிப்புக்கான தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளது . ஆனால் உண்மை என்ன   
மசூதி இடித்த அன்றே எழுதியாகிவிட்டது தீர்ப்பு இப்போது நடப்பதெல்லாம் நாடகமே தாமதமாக வழங்கப்படும் நீதியும் அநீதியே. இந்த அநீதிக்கு பின்னும் நடக்கிறது காமெடி.  சாதா   காமெடி  அல்ல உலகமாக ஜனநாய காமெடி. பிரதமர் உதிர்த்த காமெடி தீர்ப்பு இத்தோடு தீர்ந்து விடாது இதை மேலும் மேல் முறையீடு செய்யலாம் என்று .
ஆம் இவர்கள் மனித படுகொலையே மலுங்கடிதவர்கள் போபாலில். இவர்களுக்கு  இந்த மசூதி படுகொலை எல்லாம் எம்மாத்திரம்

காலை மணி எட்டு கண்டபடி திட்டு .

இன்று காலை சுமார் எட்டு மணி இருக்கும்
வீட்டு வாசலில் வண்டி துடைத்துக்கொண்டிருந்தேன் ஒரு தாய்? தன் ஐந்து வயது மகனை பள்ளிக்கு கூட்டி இல்லை இல்லை அடித்து இழுத்து சென்றுகொண்டிருந்தார்
(அடின சாதாரண அடி இல்லேங்க தர்மடி) தெருவெல்லாம் அடித்துக்கொண்டே வந்தார்
அந்த ஒரு கட்டத்துல எனக்கே வலிக்க ஆரம்பித்துவிட்டது. பொறுக்க முடியாமல் அந்த அம்மாவை அதட்டி விட்டேன் அவ்வளவுதான் இதுதான்னு இல்லாதளவுக்கு எனை வருத்தெடுத்துவிட்டார். அந்த அம்மா அங்கிருந்து சென்றபின் நிலவிய அமைதிக்குப்பின் என் அருகில் வந்த அண்டை வீட்டாரும் எனதருமை தாயாரும் எனையே குறை சொல்லி
அறிவு புகட்டினர் எனக்கு தேவையில்லாத வேலையாம். (அதுல ஒருத்தரின் அபார கண்டுபிடிப்பு எனக்கு மனதில் ரஜினின்னு நினைப்பாம் பெரிய மனோதத்துவ மருத்துவறு) எல்லாம் முடிந்த்த மூட் அவுட்டில் நண்பனை பிக்கப் செய்ய போனால்  அவன் வீட்டு  தொலைக்காட்சியில் எங்க போயிட்டு இருக்கு என் சமூகம் என வருந்திக்கொண்டிருந்தார் தம்பி பட மாதவன் 
ஆம் எங்க போயிட்டிருக்கோம்

புதன், 15 செப்டம்பர், 2010

விளம்பரம் எனும் விபரீதம்

கடந்த 10 09  2010 அன்று கைரளி (மலையாளம்) டிவியில் ஒரு விவாத நிகழ்ச்சி (நம்ம விஜய் டிவி நியா நானா மாதிரி)  நிகழ்ச்சியின் பெயர் க்ராஸ் பையர் நிகழ்ச்சியின் அன்றைய விவாத தலைப்பு கேரளாவில் சமீபத்தில் புயல் கிளப்பிக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு ஊழல்
விவாதத்தின் ஒரு கட்டத்தில் லாட்டரி அனுமதிக்க வேண்டும் என்று அதன் விற்ப்பனையில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வந்த ஒருவர் தெரிவித்தார் அதற்க்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் பேசுகையில் லாட்டரிக்கு அனுமதி அளிக்கலாம் ஆனால் இதற்க்கு முன் நடிகர் ஜகதீஸ் தோன்றி லாட்டரி விற்ப்பனையை ஊக்குவித்தது போன்ற விளம்பரங்களை மறு பரிசீலனை செய்து (அப்ப கூட விளம்பரத்துக்கு தடை கோரவில்லை அவர்) விளம்பரங்கள் மக்கள் மனதில் அதீத ஆசைகளை விதைக்காவண்ணம் செய்ய வேண்டும் என்றார் அந்த இடத்தில்
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு சிறிய விளம்பர இடை வேளை விட்டார் 
அந்த இடை வேளையில் ஒரு விளம்பரத்தில் ஒரு பள்ளி மாணவன் ஒரு இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியிடம் ஒரு பூவை பரிசளிக்கிறான் அவள் அதை தூக்கி எறிகிறாள் திரும்பவும் அவன் ஒரு கடிதம் குடுக்கிறான் அதையும் அவள் தூக்கி எறிகிறாள் பின் பள்ளிக்கூட வரண்டாவில் நிற்கும் அவன் அவள் வரும்போது ஒரு அழகிய நகை பெட்டியை திறந்து காட்டுகிறான் அதில் ஒரு மோதிரம் இருக்கிறது அதை பார்த்ததும் அவள் இம் முறை அவன் கரங்களை பற்றிக்கொண்டு பள்ளிக்கூட வராண்டாவில் நடக்கிறாள் அவர்கள் இருவரும் அவுட் ஓப் போகஸில் தெரிய திரையில்
சோன ஜுவல்லரி  என எழுத்துக்கள் விரிகின்றன
எங்கே போய் கொண்டிருக்கிறோம் எதை கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது இந்த ஊடகங்கள்
நமக்கு என யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுதே இன்னொரு விளம்பரம்
இந்த முறை நடிகர் மாதவன் ஒரு டேபிளில் தன் மனைவிக்கு தன் கையால் சமைத்த உணவை பரிமாறுகிறார் அதில் உள்ள அன்பை நுகராமல் அதன் சுவை குறைவாக உள்ளது  என அவள் அதை வெறுப்புடன் நிராகரிக்கிறாள் உடனே நடிகர் வேறொரு பாத்திரத்தை அவள் முன் வைக்கிறான் அவள் அதையும் மறுக்கவே அவன் அதை திறந்தது காட்டவே உள்ளே விலை உயர்ந்த்த நக்லஸ் அதை காணும் அவள் அவனை கட்டியனைக்கிறாள்  உறவுகள் அனைத்தும் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மார்க்சின் வார்த்தைகள்
உயிர் பெற்றுக்கொண்டே இருக்கிறது ஒவ்வொரு முறையும்
  

கழிவறைக்கும் உதவாதினி

கோவையில் 2010 செப்11 அன்று குனியமுத்தூர் எனும் பகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் இந்து முன்னணி வி ஹெச் பி அனுமன் சேனா போன்ற அமைப்புகளை சேர்ந்த ரௌடி கும்பல் ஒன்று விநாயகர் சிலை கொண்டுவந்து பள்ளிவாசலின் அருகில் வைத்தனர் (இந்த இடம் ஒரு முஸ்லிமுக்கு சொந்தமானது ) இந்த இடத்தில் இப்படி வைப்பது இது மூன்றாவது முறை ஒவ்வொரு முறையும் பிரச்சனை ஆகும் போலீஸ் வரும் ரௌடிகள் எடுத்து சென்று விடுவர்
அதே போலதான் அன்றும் எடுத்து சென்றுவிட்டனர் ஆனால் திடீரென நள்ளிரவு சுமார் 1 மணிக்கு மீண்டும் ஒரு ஒன்னரை அடி பிள்ளையாரை கொண்டுவந்து நட்டுவிட்டனர்
அதை தட்டிக்கேட்ட முஸ்லிம்களுக்கும் அந்த ரௌடிகளுக்கும் அடிதடியாகிவிட்டது மாலையே பதட்டம் இருந்தததால் தயாராக இருந்த காவல்துறை தலையிட்டு இரு தரப்பிலும் சிலரை கைது செய்து சிலையையும் அப்புறப்படுத்தியது அதை தொடர்ந்து மறுநாள் இரவு மதுக்கரை எனும் பகுதியில் உள்ள முஸ்லிம் காலனி எனும் பகுதியில் புகுந்தது பொதுமக்களை தாக்கியும் கடைகளை சூறையாடியும் சென்றது ஒரு கும்பல்
உண்மை இவ்வாறு இருக்க தின மல(ர்)ம் நாளிதளின் கோவை பதிப்பில் வெளியாகியுள்ள செய்தி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலவே உள்ளது
அந்த செய்தியில் பொது மக்கள் சிலை வைத்தது போலவும் அதற்க்கு இஸ்லாமியர்கள் ஏதிர்ப்பு தெரிவித்தது போலவும் பொய்யாய் புனைந்துள்ளனர் மேலும் விநாயகர் சதுர்த்தி விழ யாரால் எந்த ஆண்டுமுதல் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டு கொண்டாடப்படுகிறது என்பதை தின மலம் ஒன்றும் அறியாததில்லை இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும் சென்னை எம் ஜி ஆர் நகரில் மக்கள் கலை இலக்கிய கழகம் நடத்திய இந்தியாவின் இதயத்தின் மீதான போர் எனும் தலைப்பில் பச்சை வேட்டைக்கு எதிரான கருத்தரங்கம் நடந்த மறுதினம் இதே நாளிதழில் வந்த செய்தியில் நக்சலைட்டுகள் தமிழகத்தில் ஊடுருவல் தமிழக உளவுத்துரைன் குறைபாடு என்றெல்லாம் கவலை பட்டுக்கொண்டது (அந்த கருத்தரங்கம் ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி தெருமுனை விளக்க கூட்டமெல்லாம் போட்டு நடந்தது அது தான் உளவுத்துறைக்கு தெரியாததாம் ) அது மக்கள் நடத்தியது அதை நக்சல்கள் என சித்தரிக்கும் தின மலத்துக்கு சதுர்த்தி நடத்துவது சில இந்து அமைப்புகள் என்பது தெரியாதுபோலும்
மேலும் அந்த செய்தியில் சிலையை அகற்ற சப் இன்ஸ்பெக்டருடன் வந்த இரு அப்பாவிகளை அங்கிருந்த முஸ்லிம்கள் தாக்கி விட்டார்கள் என்றும் ஒரு பொய்யை வாந்திஎடுத்துள்ளது தினமலம்
இறுதியாக மக்கள் புரிந்துகொள்ள இந்த புகைப்படங்களையும் இணைக்கிறேன்
இது கடைகள் சூறையாடப்பட்ட மதுக்கரையில் வி ஹெச் பி வைத்துள்ள பேனர்
பேனர் வாசகம் இதுதான் ; வந்தால் உங்களோடு
வராவிட்டால் நாங்களாக
ஏதிர்த்தால் உங்களையும் மீறி
V H P மதுக்கரை
இது போன்ற செயலில் ஈடுபடுவது பொதுமக்கள் அல்ல என்பதை காட்டும் தினதந்தி செய்தி இத பார்த்தாவே புரிஞ்சுக்கலாம் சதுர்த்தி எதற்குன்னு
இறுதியாக இதுபோன்ற பொய்களையே பரப்பி வரும் தினமலத்தை இனி நம் கழிவறை காகிதமாக கூட பயன்படுத்தாமல் புறக்கணிப்போம்

திங்கள், 6 செப்டம்பர், 2010

கிரிக்கெட்டும் விக்கெட்டும்

மீண்டும் ஊடகங்களில் கிரிக்கெட் சூதாட்ட செய்திகள் இம் முறை அடிபடும் பெயர்கள் பாகிஸ்தானியர்களாது என்பதால் கொஞ்சம் சந்தோசம் கொள்ளலாம் நம் தேச பக்தர்கள்
இருந்தாலும் ரயிலிலும் பஸ்சிலும் திரையரங்குகளிலும் டீ கடைகளிலும் எல்லாம் மிகுந்த வருத்ததுடனும் கிரிக்கெட்டின் வரலாற்று?!...  ஆதாரத்துடனும் அலசப்படுகிறது 
அவ்வாறு என்னிடம்  வருத்தப்பட்ட ஒரு உழைப்பாளி (கலாசி தொழிலாளி )நான் எவ்வித ரீயாக்சனும் காட்டாதது கண்டு என்னிடம் போதுமான அளவு பொது அறிவு இல்லை என்று வருத்தப்பட்டார்  கிரிக்கெட்டை தெரிந்துகொள்ள சொன்னார் தெரிந்து  கொண்டால் ஒரு மேச்சை கூட விடாமல் பார்ப்பாய் என்றார்
94 முதல் 96 ஆம் ஆண்டுவரை கோவை சபர்பன் மேனிலைப்பள்ளியில் கிரிக்கெட் டீமில் நான் வேகப்பந்து வீச்சாளன் மேலும் பள்ளியில் ஆனந்தா ஹோவ்சின் கேப்டன் அப்பொழுதெல்லாம் வீட்டில் இருப்பதே இல்லை என்று என் தந்தையின் கையிலிருந்து வாங்கிய அடிகளின் தழும்புகள் இன்னும் இருக்கிறது என் முதுகிலும் முழங்காலிலும்
(அதுல பாதி அடி வாங்கிருந்தா கூட திருந்திருப்பாணுக இந்த கிரிக்கெட் சூதாடிகள் ) 
சில சமயம் கூட விளையாட பசங்க வரமாட்டாங்க காரணம் அவங்க போய் வேர ஆளுக (அத இந்த கிரிக்கெட் வீரனுக )வெளையடரத பார்க்க போயிருவானுக அப்பொழுதெல்லாம் ஒத்த ஸ்டம்ப நட்டு வச்சு தனியவே பந்து வீசீட்டு இருப்பேன் (இப்போ புரிஞ்சாத நான் வேக பந்து வீச்சாலனாதன் ரகசியம் ) ஒரு கட்டத்துல டிவில கிரிக்கெட் போட்டங்கன்ன மறுநாள் பள்ளிக்கூடம் பூரா  முதல் நாள் பார்த்த மேச்ச பத்திதான் பேசிகிட்டு இருப்பானுக வாத்தியார் உட்பட. எங்க இனிமேலும் கிரிக்கெட்ட பார்க்காம இருந்த்தொமுன்னா நம்மள கிறுக்கனுக லிஸ்ட்ல சேர்த்து ஆஸ்பிடலுக்கு அனுப்பிருவாங்கலோனு பயம் வந்துருச்சு அதனால நானும் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சிட்டேன் நம்ம ஏறிய ஆட்டோ ஸ்டாண்டுல அதுக்கப்புறம் நாமதான் ஹீரோ இத்தன நாள் கிரிக்கெட் பாக்கலயேனு வருத்தப்பட்ட தருணங்கள் அவை
இப்படியாக கழிந்து கொண்டிருந்தது வாழ்க்கை. அப்போதான் வந்தது அந்த சந்தோஷ செய்தி டிஸ்ட்ரிக் டீமுக்கு ஆள் செலக்ட் பண்றாங்களாம் சரின்னு போய் கலந்துகிட்டா
 உள்ளுக்குள்ள ஒரே படபடப்பு அப்புறம் பார்த்தா பள்ளிக்கூடத்துல நம்மளவிட சுமாரா விளையாடற பயபுள்ளைகளா நிக்கறாங்க நிம்மதியும் தைரியமும் ஒரு சேர உள்ள வந்துருச்சு ஒருவழியா பவ்லிங் டெஸ்ட் வெச்சாங்க நல்லா பண்ணுனதா எல்லாரும் பாராட்டுனாங்க எனக்கு அடுத்ததா ஸ்ரீராமும் ஓரளவிற்கு பண்ணுனதா சொன்னாங்க எல்லாம் முடிந்தது எங்களை லைனா நிக்க வெச்சாங்க ஒவ்வொருத்தர் கிட்டேயும் அப்பா என்னவா இருக்காருன்னு கேட்டுட்டு இருந்தாங்க ஸ்ரீராமின் பதில் பேங்க் மேனேஜர் எனது பதில் கூலி தொழிலாளி ஸ்ரீராம் செலக்ட் நான் ரிஜெக்ட் காரணமும் புரியவில்லை கிரிக்கெட்டும் புரியவில்லை உண்மைதான் மேலே கலாசி தொழிலாளி சொல்லியது போல கிரிக்கெட் புரியவில்லை தான் எனக்கு.
நான் சின்ன பையனா  இருக்கும் போது டென்னிஸ் விளையாடறவங்கள பாத்து சொல்லுவாங்க அதெல்லாம் பணக்கார வெளையாட்டுன்னு.
இப்போது கிரிக்கெட்டும் பணக்கார வெளையாட்டு தான். இவ்வளவு ஊழலுக்கு பிறகும் இப்போது tvல தலைக்கு (தோனிக்கு) விசில் அடிங்கன்னு iplக்காக ஒளிபரப்பாயிட்டு இருக்கு ஒரு விளம்பரம்.
  நல்ல அடிங்க விசில்லு விசிலின் அளவு கூடினால் வீரர்கள் ஆடை மறுவடிவமைப்பு செய்து (சூப்பர்மேன் போல்) உள்ளாடையிலும் பன்னாட்டு குளிர்பானத்தின் விளம்பரத்தில்  பணம் பார்க்கலாம்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

கல்லறையிலிருந்து ஒரு கதறல்.......

கடந்த ஞாயிறு 29 / 08 /10 சன் டிவியில் திரை விமர்சனத்தில் முதலாம் இடம் பிடித்தன இரு படங்கள்
ஒன்று முதல்வரின் பேரன் தயாரிப்பில் வெளி வந்தது வெற்றிகரமாக!!!????? ஓடிக்கொண்டிருக்கும் தில்லாலங்கடி (சரியான தலைப்புதான்)
இன்னொன்று இன்னொரு பேரன் நடிப்பில் தமிழ் நாட்டையே கலக்கிக்கொண்டிருக்கும்
வம்சம் (அட அந்த வம்சமில்லீங்க இது படத்தோட தலைப்பு )
இந்த முறை தப்பித்துக்கொண்டார்கள் சன் குழுமத்தின் காவலாளிகள்
எனினும் காவலர்களே உசாராக இருங்கள் ஒவ்வொரு ஞாயிறும்
இந் நிகழ்ச்சியை பார்த்து விட்டு வேலைக்கு செல்லுங்கள்
காரணம் கலைஞர் குடும்பம் அடித்த கூட்டுக்கொள்ளை பங்கு வைப்பதில் குடும்பங்களுக்குள் பிரச்ச்னை வரலாம் அப்பொழுது எழும் சந்தை போட்டில் ஏதேனும் ஒரு பேரனின் படம் இரண்டாம் இடம் தள்ளப்படலாம் நீங்களும் தாக்கப்படலாம்
அட்டாக் பாண்டியின் அடுத்த வர்சன் ரௌடிகளால்
இறுதியில் நமக்கும் கிடைக்கலாம் இன்னொரு சேனலும் இலவச கலர் டிவியும்
அவ்வாறு நிகழக்கூடாது என எச்சரிக்கை செய்து கதறுகின்றன தினகரனில் உயரிழந்த
அப்பாவி காவலர்களின் கல்லறைகள்

சனி, 28 ஆகஸ்ட், 2010

ஒரு கட்டிடமும் இரு அய் ஏ எஸ்ம்

தெற்குகோவையில் நடக்கும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்துக்கும் அரசு போலவே மௌன சாட்சியாக விளங்கி வருகிறது ஒரு கட்டிடம் இந்திய செஞ்சிலுவை சங்க கட்டிடம் 
இரு மாதங்களுக்கு முன் கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடத்தின் முன் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்ததது . நடத்தியவர்கள் மாற்றுத்திரனாளிகள்
துக்ளக் எனும் பத்திரிக்கையில் முருகன் எனும் ஓய்வு பெற்ற அய் ஏ எஸ் அதிகாரி மாற்றுத்திரனாளிகளை கொச்சை படுத்தி எழுதியதை கண்டித்துதான் நடந்தது அந்த கண்டன ஆர்ப்பாட்டம் .
அய் ஏ எஸ் அதிகாரிகள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதற்கு முருகன் அய் ஏ எஸ் ஏ முன் உதாரணம் .
இன்று அதே கட்டடத்தில் உமா சங்கர் அய் ஏ எஸ் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்தியது ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் .
அய் ஏ எஸ் அதிகாரிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உமா சங்கரே அடயாளம் .
இன்றளவும் நிறைய நேர்மையான அதிகாரிகளை நீங்கள் காண நேரலாம் அவர்களில் இருந்து உமா சங்கரை அவரது போராட்ட குணம் வேறுபடுத்திகிறது.
மற்றவர்களிடம் நேர்மை இருக்கிறது அவர்களின் நேர்மை என்பது அவர்கள் அளவில் அவர்கள் இலஞ்சம் வாங்காமல் இருப்பது என்கிற அளவிலே இருக்கிறது .
நேர்மைக்கு பேர் பெற்ற கக்கன் ஒருமுறை அவர் அமைச்சராக இருக்கும் பொழுது சங்கர சாரியை பார்க்க போனாராம் கக்கன் கீழ் சாதி அதனால் அவரை நேராக பார்க்க மறுத்து சாரிக்கும் கக்கனுக்கும் இடையில் ஒரு பசு மாட்டை நிறுத்திவைத்து பார்த்தானாம் சங்கராச்சாரி . கக்கனின் போராட்டமில்லா நேர்மையால் அங்கு ஒரு பயனும் நிகழவில்லை மாறாக அவர் போராட தயாராக இருந்த்திருந்தால் . பசு மாட்டை நிறுத்த துணிவு வந்திருக்குமா அந்த எருமை மாடுகளுக்கு .
இதற்க்கு முன் 95 இல் அம்மையாரின் ஆட்சில் நடந்த சுடு காட்டு ஊழலையும் அம்பலப்படுத்திவர்தான் இந்த உமா சங்கர் .
இரு கழகங்களாலும் பழி வாங்கப்பட்டவர் தான் உமா சங்கர்.
உமா சங்கர் ஏன் பழி வாங்கப்பட்டார் ஒன்னுமில்லைங்க நம்ம விஜய் மதுர என்கிற படத்துல கலக்டர நடிசிருந்த்தாரு . நாமும் கை தட்டி விசிலடிச்சு ரசிசசோமே அதே வேலையத்தான் உமா சங்கரும் நிஜத்துல செஞ்சிருக்காரு .
ஒண்ணுமில்லிங்க வடிவேலு ஒரு படத்துல கிணத்த காணமேன்னு போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைன்ட் குடுப்பாரே. பார்க்கறதுக்கு கேணத்தனமா இருக்கும்
அதேதான் நிஜத்துலயும் நடந்ததது இவர் எல்காட் நிறுவன அதிகரியா இருந்த்த பொழுது எல்காட் நிறுவனத்துக்கு சொந்தமான 700 கோடி சொத்துக்கள காணோம்
அத தோண்ட போய்தான் இப்ப வேல போய் நிக்கறாரு உமா சங்கரு.
அதுக்காக அவர் சாதி சான்றிதழை அகழ்வாராய்ச்சி செய்திருக்கின்றனர் பெரியாரின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அரசு ."அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல்" பெரியாரின் வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது .
உமா சங்கர் எழுப்பியுள்ள கேள்வியெல்லாம் அவருக்கானது அல்ல மக்களுக்கானதே (சாதாரண குடிமக்கள் அரசு நிறுவன அதிகாரிகள் மேலோ அய் ஏ எஸ் அதிகாரிகள் மேலோ சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட சிக்கல் இருப்பதால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது மோசடியே என்கிறார் ) எனவே தன்னைப்பற்றிய C.B.I. விசாரணைக்கும் கூட தயாராகவே இருக்கிறார்.
நீதிக்காக போராடிய உமா சங்கரின் பணி நீக்கம் நமக்கு அறுதியிட்டுக்காட்டுவதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான் அது அதிகார வர்கம் என்றுமே மக்களுக்கானதல்ல அது என்று ஆளும் வர்க்க சேவைக்கே ................வாழ்க ஜனநாயகம்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

உடைக்கப்பட்ட நிலாக்கள்

சமீபத்தில் நண்பர் ஒருவர் தந்த உடைந்த நிலாக்கள் எனும் புத்தகத்தை வாசித்தேன்
பாக்கியா வெளியீடு

பா விஜயின் வரலாட்ட்று வாந்தி
கவிஞன் "மை" க்கு பதிலாக கய"மை" யை நிரப்பி எழுதியுள்ளார்.
நிறைய இடங்களில் வரலாற்றுக்கு தக்க வார்த்தையை மாற்றாமல் வார்த்தைக்கு தக்க
வரலாற்றை மாற்றியுள்ளார் .
புத்தகத்தின் இறுதியில் இவர் கூறியுள்ளார் வரலாறையும் கற்பனையையும் கலந்து எழுதியுள்ளதாக .
ஆனால் முழுவதும் கற்பனை செய்து ஒரு வரலாறை எழுதியுள்ளார் என்பதே உண்மை
முழு பொய்யை விட அரை உண்மை கொடியதே அதைதான் இப்புத்தகம் செய்துள்ளது

புதன், 25 ஆகஸ்ட், 2010

தேச பக்தர்கள் கவனத்திற்கு


மூன்று நாட்களுக்கு ஒரு இந்திய ராணுவ வீரன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு இறக்கிரானாம் .

கார்கில் போரின் போது குத்தாட்டம் போட்டு நிதி வசூலித்த தேசபக்தத நடிகர்களே  கலைஞர்களே .
கார்கிலுக்காக மேடை போட்டு கண்ணீர் சிந்திய மேட்டுக்குடி அப்பார்ட்ட்மென்ட் தேச பக்தர்களே
மக்களிடம் போர் பிரசாரத்தை எடுத்து சொல்லி உண்டியலில் காசு வாங்க மாணவர்களை மோட்டிவேட் செய்த மரியாதைக்குரிய தேசபக்தி ஆசிரியபெருமக்களே
உண்டியலில் தேசபக்தி வழிய வழிய காசு போட்ட வர்த்தகர்களே
எல்லாத்துக்கும் மேலாக தேசபக்தியின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்கலான சுயம் சேவகர்களே வாருங்கள் உங்களுக்கான தேவையும் வேலையும் வந்திருக்கிறது மீண்டும்.................................. . வருவீர்கள பக்தர்களே
முன்பு தெருவெங்கும் நீங்கள் துண்டேந்தி வந்த பொழுது நீங்கள் கூறினீர்களே அதே அதே காரணத்திர்க்காகதான் இப்பொழுதும் அழைக்கிறோம் வாருங்கள் நம் தேசத்தின் எதிரிகளால்  கொல்லப்பட்டவர்கள் இன்று தங்களை தாங்களே கொன்று கொண்டிருக்கிறார்களாம் . வாருங்கள் கார்கிலை பிரசாரம் செய்தது போலவே இதையும் பிரசாரம் செய்வோம்.  இந்தக்கொலைகளுக்கு யார் கரணம் அல்லது எது காரணம் என கண்டறிவோம் .
வருவீர்களா................. வரமாட்டீர் ..............
காரணம்  இவன் இறந்தால் எதிரிகள் உள்ளே நுழைந்து விடுவார்கள் அவ்வாறு நுழைந்தால் தங்கள் உடமைகள் இழந்துவிட நேரிடும் என்ற அச்சத்தால் எழுந்த அக்கரயும் பக்தியும் தான் கார்கிலில் உங்களை உந்தித்தள்ளியது .
மாறாக இப்பொழுது அவன் இறந்ததால் அதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை உங்களுக்கு..................................................அதனால் வரமாட்டீர்  தேசபக்தர்களே.
சிலது அழிந்துதான் சிலதுக்கு உரமாகின்றன எனும் பாரசீக பழமொழியின் அர்த்தம் புரிகிறது இப்போது ....................................................................................

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

சீமானும் சினிமா வர்த்தகமும்

2 ரூபா கடலை வாங்கி தின்ற பிறகு கடலை சுற்றிய பேப்பரை பார்த்தேன் .
வாரமலரின் கிசு கிசு பகுதி பிறவிப்பயனை அடைந்து விட்டோம் எனும் ஆவலில்
கிசு கிசுகளை படிக்க ஆரம்பித்தேன் . நான் படித்த கிசு கிசு உங்களுக்காக "சமீபத்தில் ஆதவன் நடிகர் நடித்த திரைப்படத்தின் விநியோக உரிமையும் நடிகரே வாங்கியுள்ளார் தன்னுடன் நடித்த இந்தி நடிகர் இலங்கை திரைப்பட விழாவில் கலந்து கொண்டதால் எங்கே தன் படம் திரையிடலில் பிரெச்சனை வந்துவிடுமோ என்று அஞ்சி பெரிய இடத்தை அணுகியுள்ளார் அவர்களும் பிரெச்சனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் விநியோக உரிமையை மட்டும் எங்களிடமே தந்து விடுங்கள் என்றார்களாம்" இந்த கிசு கிசு சீமான் சிறை செல்லும்முன் வந்த செய்தி
எனவே மாண்புமிகு பெரியோர்களே சீமானின் சிறை வாசம் யார்? யாருக்காகவோ? (இந்த யார் யாரோ யார் என்பது உங்களுக்கே தெரியுமென நினைக்கிறேன் நேரடியாக சுட்டிக்காட்ட நான் என்ன மக்கு ஐ ஏ எஸ் உமா சங்கரா? )வியாபார நலன் கருதி நடந்தேறியிருக்கும் அடக்குமுறை நாடகமே .

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

முதலாளி

போபால் ஊரே படுகொலை - ஆண்டர்சன் முதலாளி
தண்ட காரண்யா மக்கள் படுகொலை - வேதாந்த முதலாளி
ஈழம் ஒரு இனமே படுகொலை - டாட்டா அம்பானி மற்றும் சில இந்திய தரகு முதலாளி
அய்யய்யோ  பயங்கரவாதி  இல்ல இல்ல முதலாளி

வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது

உழைக்கும் வர்கத்தின் குரலில் மேட்டுக்குடி வார்த்தைகளை வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார் நடிகர் வடிவேலு சுதந்திர தின சிறப்பு டீல நோ டீலாவில்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம் எனும் பாடலுடன் அறிமுக உரை நிகழ்த்தி அடித்தரே ஒரு லக்சர் அத மட்டும் உத்தமபுறம் ,பாப்பாபட்டி, கீறிப்பட்டி மக்கள் கேட்ட ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது உனக்கு .
பிறகு பெற்ற சுதந்திரத்தை? பேணி பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி ஒரு பாடல் (5 லட்சம் வீரகளை! நிறுத்தியும் 3க்கு2 அளவுள்ள தேசிய கொடி ஏத்தமுடியல சுதந்திர தினத்தன்று காஷ்மீர்ல)
ஆனா அவர்களை புகழ்ந்து கொண்டே வந்ததவர் தன்னையும் அறியாமலோ அறிந்தோ ஒரு உண்மையை சொன்னார். அதாவது காஷ்மீரின் எலும்புருக்கும் பனிமலையில் அவர்கள் காவல் இருக்கவில்லையென்றால் நாம் நிமமதியாக தூங்க முடியாதாம் .உண்மை தான் ஆனால் நாம் என்பதில் இந்த தேசத்தின் பெரும்பான்மையான உழைக்கும் வர்கமாகிய நாங்கள் இல்லை
நீங்கள் தான் தூங்க முடியாமல் துன்பப்படுவீர்கள் .
"அவர்கள் 18,000 அடி உயரத்தில் மட்டுமல்ல அவர்கள் உங்கள் வீட்டு வாசலிலும் தான் நிற்கிறார்கள் அவர்கள் முன்னாள் ராணுவவீரர்கள் நேற்று நாட்டு எல்லைக்கு காவல் இன்று உங்கள் வீட்டு எல்லைக்கு காவல் இரண்டும் ஒன்றுதான் எனும் ரகசியம் அந்த ஏமாளிகளுக்கு புரியும் வரை நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்"
எனும் மருதையனின் வரிகள் மனதில் ஓடியது

ஒரு புன்னகையும் பல இளிச்ச வாயன்களும்

ராஜ் டிவி யில் இரவு ஒரு நிகழ்ச்சி சினிமா சினிமா .
அதன் கான்செப்ட் இதுதான் நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு பிரபலத்தின் முகத்திலிருந்து ஏதாவது ஒரு பகுதி காட்டப்படுகிறது . பிரபலங்களின் பிரபலமான பகுதியே காட்டப்படுகிறது உதரணமாக மாதவனின் புன்னகை நாசரின் மூக்கு போல
நண்பர் ஒருவர் மாதவனின் புன்னகை டிவியில் காட்டப்பட்டதும் ஆர்வம் மேலிட தான் ஏதோ ஜேம்ஸ் பான்ட் ரேஞ்சில ஏதோ கண்டுபிடித்து விட்டது போலவும் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த்தார் . அப்பொழுது டிவியில் இந்த புன்னகை யாருடையது என்று கண்டுபிடித்து போன் செய்பவர்களுக்கு பத்தாயிரம் ரூவா பரிசு என்று அறிவ்துக்கொண்டிருன்தனர் ஓர் யுவனும் யுவதியும்
விடுவாரா நண்பர் தன் அலைபேசியிலிருந்து அழைத்தார் சிறிது மணித்துளிகளுக்கு பிறகு தன் காதிலிருந்து போனை எடுத்தவர் போனையே ஒரு சோக பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் . விஷயம் கேட்டபொழுது தன்னிடம் 50 ரூவா பாலன்ஸ் இருந்ததாகவும் 5 செக்கேண்டில் அது திவால் ஆகிவிட்டதாகவும் கூறினார்
முதலாளித்துவ சமூக அமைப்பில் இது போன்ற சிலந்தி வலைகள் எல்லா தளங்களிலும் பின்னப்பெட்டிருக்கும் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
டிவியில் சினிமா சினிமா போலவே மெயிலிலும் சில சமயம் பரிசு அறிவுப்புகள் வரும்
அப்புறம் ஷேர் மார்க்கெட் எல்லாம் இருக்கு. ஆறாவது அறிவும் நம்மகிட்டதான் இருக்கு

சனி, 21 ஆகஸ்ட், 2010

பாதைகள் மாறட்டும்


ஜக்காதுக்களின் பிச்சைகளையும்.
தர்மங்களின் அதர்மங்களையும்.
இலவசங்களின் அயோக்கிய அரசியலையும்.
புறக்கணித்த கூட்டம் ஒன்று சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு பள்ளியில் சிறைவைக்கப்பட்டது அறுவத்தினாலாம் சுதிந்திர நாளில்.
போலி சுதந்திர நாளில். அப்போது தோன்றிய வரிகள்
இதே பள்ளியில் தான் இலவச வேட்டி சேலைக்காக கூடிய கூடம் கலைந்த போது பிரிந்து போயின பதினைந்து உயிர்கள் .
இலவசங்களுக்காக ஓடிய உங்கள் பாதங்கள் சற்றே பாதை மாறி உங்களை இல்லாமையில் ஆழ்த்திய அயோக்கியர்களின் இருப்பிடம் நோக்கிப்பயணித்திருந்தால் இழந்திருப்போம் இன்னும் சில உயிர்களை ஆனால் அடைந்திருப்போம் ஒரு
உண்மை சுதந்திரத்தை .

புதன், 18 ஆகஸ்ட், 2010

சு "தந்திரம்"


கல்வியின் பெயரால் தாங்கள் கொள்ளையடிப்பதை மறந்து கொடியேற்றி
மிட்டாய் தின்று இனிதே முடிகிறது மாணவ சுதந்திரம் .
வீதியோவியத்தில் சேவும் பகத்சிங்கும் சிரிக்க இனிதே
கழிகிறது கம்யூனிஸ்ட் கட்சிகளின் சுதந்திரம்.
மோடியும் அத்வானியும் சுதந்திர தின விழாக்களில் .
மதானியும் அன்சாரியும் தனிமைச்சிறையில்
அணிவகுப்பில் அரங்கேறுகிறது இஸ்லாமிய இயக்கங்களின் சுதந்திரம்.
அடிமை இந்தியாவில் ஜாலியன் வாலபாக் மண்ணை எடுத்தான்
பகத்சிங் கலகம் பிறந்தது.
சுதந்திர இந்தியாவில் போபால் மண்ணை எடுத்தான்
ஜெய் ராம் ரமேஷ் ஆணவம் பிறந்ததது .
மண்ணை தொட்டும் உயரோடு இருப்பதாக உளறினனாம் .
ஆம் உயிரோடுதான் இருக்கிறான் நம் உணர்வுகள் மரித்ததால்.
புரிந்து கொண்டோம் ச்சூ (சு) "தந்திரம்"

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

மொழி


சென்னையில் நாங்கள் தங்கியிருந்த ரூம் காலி செய்ய வேண்டியிருந்ததால் ஒரு வாரம் சேத்துப்பட்டில் உள்ள உதவி இயக்குனர் லிங்குவின் அறையில் நானும் உதவி ஒளிப்பதிவாளர் கார்த்தியும் தங்கியிருந்தோம் இரவு உணவு அருந்த தினமும் சேத்துப்பட்டு காவல்நிலையத்தின் அருகிலுள்ள ஹோட்டலுக்கு தான் வழக்கமாக செல்லுவோம்.
அன்றும் வழக்கம் போல் நான் கார்த்தி மற்றும் லிங்குவும் உணவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம்.என் மலயாளியுடன் ஒரு உரையாடல் எனும் பதிவில் (http://mugavare.blogspot.in/2010/07/blog-post_3520.html) தனக்கு உள்ள முரண்பாடுகளைப்பற்றி கார்த்தி என்னுடன் விவாதித்துக்கொண்டே வந்தார். லிங்கு மட்டும் மௌன சாட்சியாக செவிகளை எங்கள் உரையாடலுக்கும் பார்வையை தன் அலைப்பேசியில் வந்து கொண்டிருந்த குருஞ்ச்செய்திகளுக்கும் கொடுத்துக்கொண்டு வந்தார் .
ஹோட்டலில் அமர்ந்து ஆடர் கொடுத்த பிறகும் மொழி பற்றிய எங்கள் விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அந்த ஹோட்டலில் 2 நேப்பாளிகள் ஒருவருக்கு சுமார் 30 , 32 வயதிருக்கும் இன்னொருசிறுவன் சுமார் 13 , 14 வயதிருக்கும்
நாங்கள் தினமும் செல்வதால் அவர்களை நாங்கள் கவனித்திருக்கிறோம் அந்த பையன் ஒரு கோபமான முகத்துடனே அனைவரையும் பார்த்துக்கொண்டிருப்பன் .யாரவது தண்ணீர் அல்லது வேறேதாவது கேட்ட்டலும் அசைவில்லாமல் பார்த்துக்கொண்டே இருப்பன் .ஆனால் அவர்கள் உணவருந்திவிட்டால் டேபிளை மட்டும் உடனுக்குடனாக சுத்தம் செய்துவிடுவான் .
அன்றும் அவ்வாறே எங்களை பார்த்துக்கொண்டிருந்தான் . வாதம் சூடாக போய்க்கொண்டிருந்ததால் எனக்கு தாகம் எடுத்தது .அவனிடம் தண்ணீர் கேட்டேன் எந்தப்பதிலும் தராமல் வழக்கமான பார்வை பார்த்தான் . மீண்டும் இரண்டாவது முறை நான் ஹிந்தியில் தண்ணீர் கேட்டதும் எடுத்து வந்து தந்தான் .ஆனால் அதே முகபாவம் . மீண்டும் தன் பழைய இடத்திற்கே சென்று நின்றுகொண்டான் .
நான் அவனிடம் சாப்பிட்டிய? என்று கேட்டேன் . இப்பொழுது அவன் முகம் முழுதும் சிரிப்புடன் எங்கள் அருகில் வந்து எங்களுக்கு ஹிந்தி தெரியுமா? என்று கேட்டான் .
பிறகு சென்று தன் பழைய இடத்திலேயே நின்று கொண்டான் .எங்களை அவன் கண்கள் சந்திக்கும் பொழுதெல்லாம் முகத்தில் சிரிப்பை பூசிக்கொண்டே இருந்தான் .
எங்கள் டேபிளுக்கு பரிமாறவும் செய்தான் . உள் அறையில் இருந்த இன்னொரு நேப்பாளியிடமும் சென்று எங்களைப்பற்றி ஏதோ கூறிக்கொண்டிருந்தான் .பிறகு அந்த நேப்பாளியும் எங்கள் அருகில் வந்து ஹிந்தியில் கார்த்திக்கிடம் உரையாட தொடங்கினான் . கார்த்திக் செய்கையால் என்னை சுட்டிக்காட்டினார் . அவர் எங்கள் மூவரின் முகங்களையும் தனித் தனியே உற்று நோக்கினார் . பின் என்னைப்பார்த்து ஒரு 5 நிமிடம் உரையாட முடியுமா என்று கேட்டார் இப்பொழுது அவர் கண்களில் நீர் கோர்த்திருந்தது .
பின் அவர் தன் குடும்பம் பற்றியும் வறுமையின் காரணமாக இங்கே பிழைக்க வந்ததுபற்றியும் கூறினார் . அந்த சிறுவன் தன் அண்ணனின் மகன் தான் என்றும் இங்கு ஹிந்தியில் யாரிடமும் உரையாடமுடியாமல் தான் ஒரு ஊமை போல் உணர்வதாகவும் தினமும் எதையாவது பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் தன் அண்ணனின் மகனிடம் தான் பகிர்ந்து கொள்ள முடியும் என்று தான் சித்தப்பா என்பதால் ஒரு எல்லைக்குள் தான் தன்னால் அவனிடம் உரையாட முடியும் என்றும் அதுவும் கடந்த ஒரு வாரமாக அவன் இவருடன் கோவிதுக்கொண்டுள்ளதால் உரையாடாமல் இருந்தான் என்றும் இப்பொழுது எங்களைப்பற்றி சொல்வதற்காக தான் பேசினான் என்றும் கூறினார் .அவர் இங்கு வந்து 6 மாதகாலம் ஆகிவிட்டதாகவும் . காலை 5 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இரவு 12 மணிக்கு மேல் தான் முடியும் என்றும் கடந்த வாரம் தண்ணீர் குடம் எடுத்து வரும்பொழுது கால் இடறி மாடியிலிருந்து விழுந்து விட்டதாகவும் அதனால் இடுப்புப்பகுத்யில் நல்ல வலியிருப்பதாகவும் அதற்க்கு சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லவேண்டும் என்றும் அதற்காக அந்த விவரங்களை தமிழில் எழுதித்தருமாரும் கேட்டுக்கொண்டார் . நாங்களும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டோம் . பாதியிலேயே விட்ட எங்கள் விவாதம் பிறகு அன்று நீடிக்கவே இல்லை . கார்த்திக் இந்த சம்பவம் தனக்கு மிகுந்த மன பாரத்தை தந்ததாக சொன்னார் .
மறு நாள் நாங்கள் ஹோட்டலுக்கு சென்ற பொழுது அவர்கள் புன்னகையுடன் மட்டும் நிறுத்திக்கொண்டனர் . பேசவேயில்லை காரணம் கேட்ட பொழுது நேற்று எங்களுடன் பேசியதற்காக முதலாளி கடிந்து கொண்டதாக மட்டும் கூறி நகர்ந்து விட்டார் . இதிலிருந்து நாம் எதைப்புரிந்து கொள்வது நேற்றய விவாதத்தின் முடிவென்ன என்றல்லாம் மனதில் தோன்றிய கேள்விகளுடன் நாங்கள் இருவரும் எங்கள் முகங்களை பார்த்துக்கொண்டோம் .

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

வியாழன், 29 ஜூலை, 2010

அழியா நினைவுகள்....

மண்ணில் புரண்டு விளையாடிய
கார் காலமும்
மதியில்லை என சுமந்த
தந்தையின் அடிகளும்
பொதியாய் சுமந்து சென்ற
புத்தக கூடையும்
பாதி வழி சுமந்து வந்த
வகுப்பு தோழனும்
கனவுகளை சுமந்து அலைந்த
கல்லூரி நாட்களும்
கவலைகளை சுமந்து
திரிந்த வீதிகளும்
நினைவில் வரும்பொழுது எல்லாம்
இல்லா துயரம்
நீ வரும்பொழுது மட்டும்.....

சனி, 24 ஜூலை, 2010

மலையாளியுடன் ஓர் உரையாடல்


என் தந்தையின் கண் புரை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சென்றிருந்தேன் அப்பொழுது தன தாயின் கண் புரை சிகிச்சைக்காக பாலக்காட்டிலிருந்து வந்திருந்த அப்பு என்ற மலையாளியுடன் நான் பேசிய அல்லது விவாதித்த விசயங்களை கண்டிப்பாக எழுதியே ஆகவேண்டும் என்று தோன்றியது.
இனி எங்கள் உரையாடல் உங்கள் பார்வைக்காக....
அவருக்கும் எனக்குமான அறிமுகமெல்லாம் முடிந்த பிறகு,
அப்பு:-மலையாளிகள் என்றாலே ஒருவித வெறுப்புடன் தான் பார்கிறீர்கள் இல்லையா?
நான்:-ஆம், பின்னே ஈழத்து போரின் பின்னடைவிற்கு நீங்கள் தானே காரணம்.
அப்பு:-எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்?
நான்:- சிவசங்கரன் மேனன் உங்க ஆளுத்தானே அவன் தானே ஈழத்திற்கு சென்று ஆலோசனைகள் வழங்கினான்
அப்பு:- ஆம், அவர் ஒரு மலயாளித்தான் தோழர்... மன்னிக்கவும் நான் உங்களை தோழர் என்று அழைக்கலாமா?
நான்:-ம்ம்ம்...
அப்பு:-அவர் மலையாளித்தான் ஆனால் மலையாளிகளின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல. மாறாக இந்தியாவின் அதிகாரவர்க்க பிரதிநிதி. அதில் எல்லா இந்தியதேசிய இனத்தவரும் உள்ளனர். அதுமட்டுமல்ல ஈழம், காஷ்மீர், பாலஸ்தீனம், ஈராக், இந்தியாவின் தண்ட காருண்யா காடுகள் போன்ற உலகின் அனைத்து ஆக்கிரமிப்பு போருக்கும் ஒரேயொரு பொதுக்காரணி தான் இருக்கிறது. முதலாளித்துவத்தின் முன்னேறிய வடிவமாகிய ஏகாதிபத்தியம் தான் அந்தக்காரணி. அது தன பாத்திரத்தை மறைக்க வெவ்வேறுக் காரணங்களை சொல்கிறது. உதாரணமாக ஈராக்கில் பயங்கர அழிவு ஆயுதங்கள் இருப்பதாக சொல்லி நியாயப்படுத்தியது. இன்னும் சிவசங்கரன் மேனன் அல்லாமல் உங்கள் ஊர் திருமாவளவனோ, மருத்துவர் ராமதாசோ அல்லது வைகோவோ அந்த பதவியில் இருந்தாலும் இதையேத்தான் செய்திருப்பர். இங்கு நான் ஒன்றை குரிப்புட்டே ஆகவேண்டும். இலங்கை சென்ற திருமாவிடம், இனவெறியன் ராஜபக்ஷே இப்படி சொன்னானாம், நல்ல வேலையாக போர்க்காலங்களில் நீங்கள் பிரபாகரனுடன் இல்லை, இருந்திருந்தால் இன்று இருந்திருக்கமாட்டீர்கள் என்று. அதற்க்கு புன்னகஎயமட்டுமே பதிலாகத்தந்தானாம் இந்த புரட்சி தமிழன். இப்பக்கூட வைகோவை பாருங்க, புலிகளை பற்றிய ஜெ.வின் விமர்சனத்திற்கும், அறிக்கைக்கும் மௌனம் காக்கிறது இந்த பீரங்கி. எனவே இவர்கள் தமிழர்கள் என்பதையும் தாண்டி, இவர்களின் சுயநல வர்க்க உணர்வே மேலோங்கி இருக்கிறது. இன்னொரு விஷயம், சிவசங்கரன் மேனன் ஒரு பயங்கரவாதி என்பதி எனக்கும் மாற்றுக்கருத்து இல்லைத்தான். ஆனால் அவனை மலையாளிகளின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தி பார்ப்பதாக இருந்தால், தாண்டோவாட காடுகளில், ப.சிதம்பரம் தலைமையில் இந்திய அரசு தொடுத்துள்ள உள்நாட்டு ஆக்கிரமிப்பு போருக்கு ப.சி. ஒரு தமிழன் என்பதால் அவரை தமிழர்களின் பிரதிநிதியாக பார்த்து தமிழர்களை குறை கூற முடியுமா ?
சிவசங்கர மேனனை முதலாளித்துவ பயங்கரவாதி என்றில்லாமல் மலையாளி என்ற அடையாளத்தில் பார்ப்பதாக இருந்தால் .விடுதலை புலிகளுக்கு ஏராளமான உதவிகள் செய்த எம் ஜி ராமச்சந்திர நாயரை எப்படி பார்ப்பது .தள்ளாத வயதிலும் ஈழத்தில் இலங்கை அரசு செய்தது இனப்படுகொலைதான் என்று தொடர்ந்து போராடி வருகிறாரே நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவரை எப்படி பார்ப்பது அய்யர் என்ற மலையாளி என்ற அல்லது மனிதஉரிமைப்போராளி என்றா?
நான்:-அதெல்லாம் சரி இப்போ எம்.டி.வாசுதேவநாயர் என்கிற மலையாள திரைக்கதை எழுத்தாளர் ஒரு பேட்டியில் ஈழம் பற்றிய கேள்விக்கு அதைப்பற்றிய வரலாறு எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறாரே. ஒரு கலைஞன் இப்படி இருக்கலாமா? களிஞனுக்கு சமூக அக்கறை வேண்டாமா?
அப்பு:-வாசுதேவன் நாயரை விடுங்க இங்குள்ள எத்தனை கலைஞர்களுக்கு ஈழ வரலாற்றில் அக்கறையும், அறிவும் உள்ளது. வராலாறு தெரிந்த கலைஞர்...களும் என்ன செய்தார்கள் என்று தெரியாதா?
வாசுதேவ நாயர் தனக்கு தெரியாத வரலாறை தனக்கு தெரியாது என்று ஒப்புக்கொண்டது ஒரு குறைந்த நல்லதுதான். உங்கள் கமலோ வரலாறை திரித்து 2002 இல் நடந்த குஜராத் கலவரத்திற்கு (உண்மையில் அது கலவரமே அல்ல இனப்படுகொலை) 1998லேயே கோவை குண்டு வெடிப்பை நிகழ்த்தி விட்டார்கள் என்று உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படத்தை எடுத்தாரல்லவா? அதுதான் சமூக பயங்கரவாதம். தொடர்ந்து அவர் மெல்லிய சிரிப்புடன் குஜாத்தியர்களை பழிவாங்க கோவை மக்களுக்கு குண்டாமா? ஆன்னால் ஒன்று தோழர்... ஒரு பிரபலம் என்ற முறையில், எம்.டி.வாசுதேவ நாயர் தெரிந்துக்கொள்ள முற்படாமல் இருப்பது தவறுதான். ஆனால் உங்களை ஒன்று கேட்க்கின்றேன் மலையாளிகளின் பிரச்சினையாகிய பிரவாசி மலையாளி பிரச்னையை இவ்வளவு பேசும் நீங்கள் உட்பட எத்தனை பேருக்கு தெரியும்? உங்களுக்கு ஒன்று தெரியுமா? இலங்கையில் மனித நேயமுள்ள சிங்களவர்கள் கூட இருந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் சிங்கள கொட்டிய அதாவது சிங்கள புலிகள் என்று சொல்லி சிறையில் அடைத்துள்ளனர்.
நான்:-அப்போ நடிகர் ஜெயராம் கறுத்த தமிழச்சி என்றது மலையாள திமிர் தானே? இல்லை அதையும் மறுப்பீர்களா?
அப்பு:-ம்ம்ம்... ஆனால் அதைக்கூட பொத்தம் பொதுவாக மலையாலத்திமிர் என்று சொல்லிவிட முடியாது. கரணம், இன்றும் கூட கேரளாவில் அடிமட்ட உடல் உழைப்பில் ஈடுபடுத்தப்படும், ஒடுக்குப்பட்ட சாதிகளாகிய, செரமன், பறையன், ஈழுவர் என்று அழைக்கப்படுபவர்கள் கறுத்த தோலுக்கு சொந்தக்காரர்கள் தான் எனவே இந்த மலையாளிகளுக்கு அவன் கருத்தில் உடன்பட முடியாது வேண்டுமானால் நீங்கள் அதை மலையாள பார்ப்பன திமிர் என்று வைத்துக்கொள்ளலாம்.
நான்:- இறுதியாக என்னதான் சொல்லவறீங்க
அப்பு:- நல்லது தோழரே குறைந்த பட்சம் இனியும் மலையாளிகளை கோரி கூறுவதை விட்டு இதன் பின்னணியில் இருக்கும் வர்கங்களின் பாத்திரத்தை அறிந்து கொள்ள முயற்சிப்போம். தமிழர்களின் வீரமும் சளைத்ததல்ல இதே கோவையில் ராணுவ வாகனத்தை வழிமறித்து தாக்குமளவிற்கு உணர்வும் வீரமும் உள்ளவர்கள் தான் தமிழர்கள். ஆனால் அந்த உணர்வு மேலும் வீரியமாக முன்னெடுக்கப் படாமல் தேர்தல் பாதையில் தீர்வு தேடி பார்ப்பன ஜெ. வெற்றி பெற்றால் ஈழத்தில் மாற்றம்வரும் என்று மடைமாற்றப்பட்டது தான் தவறு. மீண்டும் சொல்கிறேன் தமிழர்கள் வீரமான ஒரு மரபை கொண்டவர்கள் காரணம் நானும் ஒரு தமிழன் தான் சேலத்தை பூர்வீகமாக கொண்டது எங்கள் குடும்பம். என் தந்தையின் வேலை காரணமாக கொச்சியில் குடியேறியவர்கள் நாங்கள் என் தந்தை ஒரு துறைமுக தொழிலாளி. அவர் மரணத்திற்கு பிறகு நாங்கள் பாலக்காட்டுக்கு குடியேறிவிட்டோம். இதனாலேயே என்னால் இரண்டு தரப்பையும் அறிய முடிந்தது.
தோழரே நான் பேசியதில் ஏதும் பிழையிருந்தால் மன்னித்து விடுங்கள். விடைப்பெறுகிறேன் நன்றி...


தந்தையின் பார்வைக்கு மட்டுமல்ல எனது பார்வைக்கும் நல்ல சிகிச்சை கிடைத்தது.

சிப்பு வருதுங்கோ

நூறு சதவிகித படிப்பறிவு பல்லிளிக்குது கேரளாவில் விஜய் ரசிகர் மன்ற பேனர்
இதற்க்கு கமன்ட் தேவையேயில்ல
டேய் உலகை ஆளும் அம்மானு போடுங்கடா