வெள்ளி, 22 அக்டோபர், 2010

காவல் துறையை புரிந்துகொள்ளுங்கள்

செப்டம்பர் 15 முதல் ஆந்திர மாநில காவல்துறை ஒரு கண்காட்சி நடத்தியுள்ளது
கண்காட்சியின் தலைப்பு "காவல் துறையை புரிந்துகொள்ளுங்கள்"
புரிந்து கொள்ளுங்கள் என்பதை நாம் எப்படி உச்சரிக்கிறோமோ அதற்க்கேற்றார்போல் அர்த்தமும் மாறும்
உண்மையில் அரசாங்கம் உத்தேசித்த அர்த்தம் என்ன என்று தெரியவில்லை
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு போலிசை பற்றி புரியவைக்கும் நிகழ்ச்சியும் நடத்தியுள்ளனர் பொறுப்புள்ள போலீஸ்காரர்கள் அதன்படி கடந்த 20 10 2010 அன்று மாணவர்கள் அந்த கண்காட்சியை சுற்றிப்பார்த்து வந்துள்ளனர் அவ்வாறு பார்த்துக்கொண்டே வந்த பள்ளி மாணவர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் stun gun எனும் வகைப்பட்ட இயந்திர துப்பாக்கியை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஒரு காவலர் அது செயல்படும் விதம் குறித்து செயல் முறை விளக்கம் செய்து காண்பித்துள்ளார் அதிலிருந்து தோட்டாக்கள் பாய்ந்து 2 மாணவர்கள் மரணித்துள்ளனர் எவ்வளவு அலட்சியம் இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பள்ளி மாணவர்கள் நிச்சயம் காவல்துறையை புரிந்துகொண்டிருப்பார்கள் காரணம் ரத்தமும் சத்யுமாக அந்த நிமிடம்வரை அவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சக மாணவர்களை கொண்டல்லவா நீங்கள் அவர்களுக்கு செயல்வழிக் கல்வி போதித்தீர் (உங்கள் ஆற்றலை காட்டவா எங்கள் மழலைகளை கொன்று போட்டீர்) எனவே உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டது
இந்த சம்பவத்திற்கு காரணமான போலீஸ்காரர் வெறும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அவளாவே இப்போது ஆந்திர மக்கள் உங்களை புரிந்துக்கொள்ள அவசரகதியில் ஒரு கண்காட்சி தேவைப்படுவதன் அவசியம் என்ன? அதன் அரசியல் உள்நோக்கம் என்ன? ஆந்திர மக்கள் மட்டுமல்ல காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் அரங்கேற்றிக்கொண்டுதான் இருக்கிறீர்கள் கண்காட்சிகளை நாங்களும் உங்களை புரிந்து கொண்டுதான் இருக்கிறோம்

வியாழன், 14 அக்டோபர், 2010

பாலஸ்தீன்,காஷ்மீர் தமிழக முஸ்லீம்கள்





இன்று இந்த கட்டுரை பதிவேரிக்கொண்டிருக்கும் நேரத்தில் கூட பல சிறுவர்கள்,பெண்கள்,இளைஞர்கள் கல்லெறிந்து கொண்டிருக்கலாம் தங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் ராணுவங்களுக்கு எதிராக. அந்த உணர்வுக்கும் நெஞ்சுரிதிக்கும் ஒரு வீர வணக்கம். இந்த போராட்டத்தில் அவர்கள் வெற்றிபெற புரச்சிகர வாழ்த்துக்கள்.
பாலஸ்தீனிலும் காஷ்மீரிலும் ஏதோ முஸ்லீம் மத அடிப்படை வாதத்துக்காகதான் போராடுகின்றனர் என்பது போன்ற ஒரு மாயை இங்குள்ள முஸ்லீம்களிடையே நிலவுவதையும் அதை இசுலாமிய தலைமைகள் அப்படியே ஊட்டி வளர்ப்பதையும் காண்கிறேன்.
காஷ்மீரை பொறுத்தவரை இதுபோன்ற இசுலாமியர்களின் சிந்தனையை வைத்து அங்கு உண்மையிலேயே ஒரு மத மோதல் தான் நடந்துகொண்டிருக்கிறது என்று இந்துத்துவ சக்திகள் தங்கள் ஊடகங்கள்(இதற்க்கு உதாரணமாக நிறைய சினிமா மற்றும் செய்திகள் உள்ளன அத்தனையும் இட இடம்பத்தாது) மூலம் நிலை நிறுத்துகிறது அதில் வெற்றியும் பெற்றுள்ளது
என் 26 வயதுவரை நானும் பாலஸ்தீன விடுதலைபோரை ஒரு தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்த்திருந்தேன் பின் ஒரு முறை லைலா ஹலேத் (laila khaled )எனும் ஒரு ஆவணப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதை பார்த்த பிறகே பாலஸ்தீன் பற்றிய என் மதிப்பீடுகள் முழுதும் தவறானதே என் சமூகத்தின் தலைமை பீடத்தில் உள்ளவர்களும் எங்களுக்கு இந்த உண்மையை சொல்லாமல் மறைக்கின்றனர் என்றும் மறைப்பதன் அரசியலும் விளங்கியது.
இனி அந்த ஆவணப்படம் பற்றி;
ஆவணப்படம் லைலா ஹலேத் என்ற ஒரு போராளி பெண்மணியை பற்றியது.
அந்த பெண்தான் வரலாற்றில் முதல் முறை ஆகாய விமானத்தை கடத்தியவர் அதுவும் இருமுறை (இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் எகிப்ப்தில்) அந்த பெண் ஒரு நாத்திகவாதி (இறை மறுப்பாளர்) மேலும் அவர் சார்ந்திருக்கும் அமைப்பு தோழர்(ஆண்)அவருடன் கைகுலுக்கிறார் நீண்ட இடைவெளிக்குப்பின் அவரை சந்திக்கும் தோழர் பாசப்பூரிப்புடன் அவரை ஆரத்தழுவிக்கொள்கிறார் கன்னத்தில் முத்தமிடுகிறார் பின் ஹலேடிடம் கேட்ப்பார் இப்பவும் நி தொழுகாம்தான் இருக்கியா என்பர் ஹலேத் சற்றும் யோசிக்காமல் இல்லையென்பார் அந்த ஆவணப்பட இயக்குனர் அவரிடம் கேட்க்கும் கேள்விக்கெல்லாம் அற்ப்புதமாக பதிலளித்துக்கொண்டே வருகிறார் ஒரு இடத்தில் சிறுவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் அப்போது இயக்குனர் ஹலேத் இடம் சிறுவர்கள் போரிடுவது தவறில்லையா என வினவுவார் அதற்கவர் அவர்கள் சிறுவர்களையும்தான் கொள்கின்றனர் என பதிலளிப்பார்
பின் இருவரும் வீதியில் நடந்துவரும்பொழுது சில சிறுவர்கள் ஒரு ஹெலிகாப்டரின் மீது கல்லெறிந்துவிட்டு(கல் அவ்ளோதூரம் போய் தாக்கவில்லை)மீண்டும் பழையநிலைக்கே வந்து விளையாடிக்கொண்டிருப்பார் அவர்களில் ஒருவனிடம் இயக்குனர் ஏன் கல் எறிந்தீர்கள் எனும்போது அவன் அவர்கள் எங்களை ஏமாற்றி அடிமைபடுத்திவைத்துள்ளனர் அதற்கெதிராகவே கல் எறிந்தோம் என்று கூறிவிட்டு சைக்கிளிலில் ஏறி சென்றுவிடுவான்
இதிலிருந்து தெரிவது ஒன்றுதான் மதம் எனும் அடிப்படையிலோ அல்லது மத வெறியின் அடிப்படையிலோ அங்கெல்லாம் போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை மாறாக சுதந்திரம் வேண்டியும் அடிமை தலைகளை எதிர்த்துமே முன்னெடுக்கப்படுகிறது
போராட்டம் நடக்கும் பலஸ்தீனில் போராடுவது முஸ்லீம்கள் என்பதாலேயே அவ்வாறு பார்க்கப்படுகிறது
காஷ்மீரின் நிலையும் இதுவே பார்க்க ஜூ வியில் இந்த வார(13/10/2010)ம் மனித உரிமைப்போராளி சுகுமாரனின் கட்டுரை
இனியேனும் தமிழக முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் பாலஸ்தீனையும் காஷ்மீரையும் இங்குள்ள தலைவர்களையும்
இனியும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் அது காவி பயங்கரவாதிகளுக்கே சாதகமாகும்

காஷ்மீர்

பற்றி எரிகிறது பனி மலை

எரியூகியாக எங்கள் உணர்வு

நிறைந்து வழிகிறது எங்கள் குருதி

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்

ஒரு நாள் வெந்து பொசுங்கும் உங்கள் ஏகாதிபத்திய மோகம் 

அதுவரை அஞ்சாமல் தொடர்வோம்.....................

கல்லெறிதலும் கல்லறை செல்வதும்