ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

மொழி


சென்னையில் நாங்கள் தங்கியிருந்த ரூம் காலி செய்ய வேண்டியிருந்ததால் ஒரு வாரம் சேத்துப்பட்டில் உள்ள உதவி இயக்குனர் லிங்குவின் அறையில் நானும் உதவி ஒளிப்பதிவாளர் கார்த்தியும் தங்கியிருந்தோம் இரவு உணவு அருந்த தினமும் சேத்துப்பட்டு காவல்நிலையத்தின் அருகிலுள்ள ஹோட்டலுக்கு தான் வழக்கமாக செல்லுவோம்.
அன்றும் வழக்கம் போல் நான் கார்த்தி மற்றும் லிங்குவும் உணவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம்.என் மலயாளியுடன் ஒரு உரையாடல் எனும் பதிவில் (http://mugavare.blogspot.in/2010/07/blog-post_3520.html) தனக்கு உள்ள முரண்பாடுகளைப்பற்றி கார்த்தி என்னுடன் விவாதித்துக்கொண்டே வந்தார். லிங்கு மட்டும் மௌன சாட்சியாக செவிகளை எங்கள் உரையாடலுக்கும் பார்வையை தன் அலைப்பேசியில் வந்து கொண்டிருந்த குருஞ்ச்செய்திகளுக்கும் கொடுத்துக்கொண்டு வந்தார் .
ஹோட்டலில் அமர்ந்து ஆடர் கொடுத்த பிறகும் மொழி பற்றிய எங்கள் விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அந்த ஹோட்டலில் 2 நேப்பாளிகள் ஒருவருக்கு சுமார் 30 , 32 வயதிருக்கும் இன்னொருசிறுவன் சுமார் 13 , 14 வயதிருக்கும்
நாங்கள் தினமும் செல்வதால் அவர்களை நாங்கள் கவனித்திருக்கிறோம் அந்த பையன் ஒரு கோபமான முகத்துடனே அனைவரையும் பார்த்துக்கொண்டிருப்பன் .யாரவது தண்ணீர் அல்லது வேறேதாவது கேட்ட்டலும் அசைவில்லாமல் பார்த்துக்கொண்டே இருப்பன் .ஆனால் அவர்கள் உணவருந்திவிட்டால் டேபிளை மட்டும் உடனுக்குடனாக சுத்தம் செய்துவிடுவான் .
அன்றும் அவ்வாறே எங்களை பார்த்துக்கொண்டிருந்தான் . வாதம் சூடாக போய்க்கொண்டிருந்ததால் எனக்கு தாகம் எடுத்தது .அவனிடம் தண்ணீர் கேட்டேன் எந்தப்பதிலும் தராமல் வழக்கமான பார்வை பார்த்தான் . மீண்டும் இரண்டாவது முறை நான் ஹிந்தியில் தண்ணீர் கேட்டதும் எடுத்து வந்து தந்தான் .ஆனால் அதே முகபாவம் . மீண்டும் தன் பழைய இடத்திற்கே சென்று நின்றுகொண்டான் .
நான் அவனிடம் சாப்பிட்டிய? என்று கேட்டேன் . இப்பொழுது அவன் முகம் முழுதும் சிரிப்புடன் எங்கள் அருகில் வந்து எங்களுக்கு ஹிந்தி தெரியுமா? என்று கேட்டான் .
பிறகு சென்று தன் பழைய இடத்திலேயே நின்று கொண்டான் .எங்களை அவன் கண்கள் சந்திக்கும் பொழுதெல்லாம் முகத்தில் சிரிப்பை பூசிக்கொண்டே இருந்தான் .
எங்கள் டேபிளுக்கு பரிமாறவும் செய்தான் . உள் அறையில் இருந்த இன்னொரு நேப்பாளியிடமும் சென்று எங்களைப்பற்றி ஏதோ கூறிக்கொண்டிருந்தான் .பிறகு அந்த நேப்பாளியும் எங்கள் அருகில் வந்து ஹிந்தியில் கார்த்திக்கிடம் உரையாட தொடங்கினான் . கார்த்திக் செய்கையால் என்னை சுட்டிக்காட்டினார் . அவர் எங்கள் மூவரின் முகங்களையும் தனித் தனியே உற்று நோக்கினார் . பின் என்னைப்பார்த்து ஒரு 5 நிமிடம் உரையாட முடியுமா என்று கேட்டார் இப்பொழுது அவர் கண்களில் நீர் கோர்த்திருந்தது .
பின் அவர் தன் குடும்பம் பற்றியும் வறுமையின் காரணமாக இங்கே பிழைக்க வந்ததுபற்றியும் கூறினார் . அந்த சிறுவன் தன் அண்ணனின் மகன் தான் என்றும் இங்கு ஹிந்தியில் யாரிடமும் உரையாடமுடியாமல் தான் ஒரு ஊமை போல் உணர்வதாகவும் தினமும் எதையாவது பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் தன் அண்ணனின் மகனிடம் தான் பகிர்ந்து கொள்ள முடியும் என்று தான் சித்தப்பா என்பதால் ஒரு எல்லைக்குள் தான் தன்னால் அவனிடம் உரையாட முடியும் என்றும் அதுவும் கடந்த ஒரு வாரமாக அவன் இவருடன் கோவிதுக்கொண்டுள்ளதால் உரையாடாமல் இருந்தான் என்றும் இப்பொழுது எங்களைப்பற்றி சொல்வதற்காக தான் பேசினான் என்றும் கூறினார் .அவர் இங்கு வந்து 6 மாதகாலம் ஆகிவிட்டதாகவும் . காலை 5 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இரவு 12 மணிக்கு மேல் தான் முடியும் என்றும் கடந்த வாரம் தண்ணீர் குடம் எடுத்து வரும்பொழுது கால் இடறி மாடியிலிருந்து விழுந்து விட்டதாகவும் அதனால் இடுப்புப்பகுத்யில் நல்ல வலியிருப்பதாகவும் அதற்க்கு சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லவேண்டும் என்றும் அதற்காக அந்த விவரங்களை தமிழில் எழுதித்தருமாரும் கேட்டுக்கொண்டார் . நாங்களும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டோம் . பாதியிலேயே விட்ட எங்கள் விவாதம் பிறகு அன்று நீடிக்கவே இல்லை . கார்த்திக் இந்த சம்பவம் தனக்கு மிகுந்த மன பாரத்தை தந்ததாக சொன்னார் .
மறு நாள் நாங்கள் ஹோட்டலுக்கு சென்ற பொழுது அவர்கள் புன்னகையுடன் மட்டும் நிறுத்திக்கொண்டனர் . பேசவேயில்லை காரணம் கேட்ட பொழுது நேற்று எங்களுடன் பேசியதற்காக முதலாளி கடிந்து கொண்டதாக மட்டும் கூறி நகர்ந்து விட்டார் . இதிலிருந்து நாம் எதைப்புரிந்து கொள்வது நேற்றய விவாதத்தின் முடிவென்ன என்றல்லாம் மனதில் தோன்றிய கேள்விகளுடன் நாங்கள் இருவரும் எங்கள் முகங்களை பார்த்துக்கொண்டோம் .

1 கருத்து:

  1. தன்னை தானே நேசிக்காத மனிதனால் பிறரை நேசிக்கமுடியாது என்பது எவ்வளவு உண்மையோ அது போல் தன் மொழி யை நேசிக்காதவன் முழுமை அடையமுடியாது. நான் சந்திக்கும் வெளி நாட்டினரிடம் நம் தமிழ் மொழி கி. மு காலத்திற்கு முந்திய மொழி என பெருமை பேசுபவல்தான் நானும். மொழி பற்று பிறந்த வீட்டு பாசம் போல் இரு பாலற்கும் உண்டு. இருவரில் ஒருவற்கோ அல்லது இருவர்க்கும் பற்று வெறியாக மாறினால் குடும்பத்தில் பிரச்சினைதான். 62 ஆண்டுக்கு முந்தய இந்தியாவை விட்டுவிடுவோம். பல மொழி பேசுவோர் பல மத நம்பிக்கை உடையோர் இணைந்து உருவாகிய இந்திய குடும்பத்தில் மொழி பற்று எனும் பாசம் வெறியாவதால் பிரச்சினை வர கூடாது என்பதே என் விருப்பம் கருத்து.

    பதிலளிநீக்கு