சனி, 12 மே, 2012

தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி.


செத்தும் கொடுத்தான் சீதக்காதி என சிறு வயதிலிருந்து செவியுற்றதுண்டு. உண்மையில் இறந்த பிறகும் இனிய தோழமைகளை எமக்களித்து சென்றார் தோழர் சீனிவாசன். ஆம் தோழரின் மரண செய்தி கேள்விப்பட்டு அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள கோவையிலிருந்து நாங்கள் ரயிலில் சென்றுகொண்டு இருந்தோம். சில புதிய இளம் தோழர்களுக்கு தோழர் சீனிவாசனைப்பற்றியும் அவரது வாழ்க்கையையும் மூத்த தோழர்கள் சொல்லிக்கொண்டு வந்தனர். அதை செவியுற்ற சில இளைஞர்கள் அவர்களாகவே முன்வந்து எங்களோடு உரையாடத்துவங்கி உலக அரசியல் முதல் உள்ளோர் அரசியல் வரை விவாதித்து எங்கள் அலைபேசி எங்களை பெற்றுக்கொண்டு அவர்களதும் தந்துவிட்டு சென்றார்கள் அதில் இரண்டுபேர் மென்பொருள் பொறியாளர்கள்.
தோழர் சீனிவாசன் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொருளாளராக இருந்தவர். மின்வாரியத்தில் அதிகாரியாக இருந்தவர் தான் கொண்ட கொள்கைக்காக அந்த பணியை விருப்ப ஓய்வின் மூலம் விடைகொடுத்து கொள்கைக்காக உழைத்தவர்.
மரணம் மட்டுமே ஒருவரின் நேர்மையை எடைபோடும் மகா சக்தி. அது தோழர் சீனிவாசனுக்கும் அங்கீகாரத்தை தந்துவிட்டது.
நம் நினைவுகளோடு கலந்துவிட்ட தோழர் பற்றி சில நினைவுகள். தோழரை சுமார் ஒரு நான்கு  ஆண்டுகளுக்கு முன்னர்தான் முதன்முறையாக பார்த்தேன் அப்போது அவரை சந்தித்த தோழர்களிலேயே இளையவன் நான் என்பதாலோ என்னவோ என்னிடம் சில விசயங்களை இன்னும் கூடுதல் நேரமெடுத்து விளக்கினார். அதன் பிறகு தோழர்கள் அவரைப்பற்றி சொல்லும்போது வெகு சிறப்பான பேச்சாளர் என்று கூறி அதற்கொரு உதாரணமும் கூறினார். 98 இல் கோவையில் ஒருமுறை திக பொதுக்கூட்டத்தை இந்துமுன்னணி காலிகள் பிரச்சனை செய்து கலைத்துவிட்டார்கலாம். மறுநாள் ம.க.இ.க கூட்டம் அதே இடத்தில் நடந்தபொழுது தோழர் சீனிவாசன் சிறப்புரையாற்றிப் பேசும்போது ''நேற்றைக்கு வந்தவனுக எல்லாம் எங்கே டா போயிட்டீங்க இப்ப வாங்கடா வந்தீங்கன்ன ஒவ்வொருத்தனையும் பாலமலையில் தலைகீழ தொங்கவிட்டுருவேன்'' என்றாராம். அப்போதுமுதல் அவரை மாபெரும் பிம்பமாகவே பார்க்க ஆரம்பித்தேன்.
அதன் பிறகு ஒருமுறை அவரது தாயார் இறந்த போது கோவையில் எரியூட்டல் நிகழ்வு முடிந்து இரங்கல் உரை ஆற்றிய போதுதான் தோழரின் பேச்சாற்றலை காணமுடிந்தது. போராடும் அனைவருக்கும் இருக்கும் சிக்கல் குடும்ப உறவுகளில் அந்த காலகட்டத்தில் எனக்கும் அதிகமாக இருந்தது இரங்கல் செய்தியில் அவர் பேசிய பேச்சு அதற்க்கான வழிகாட்டுதலை எனக்கு வழங்கியது காரணம் குடும்ப உறவுகளில் சிக்கல் அவருக்கும் இருந்துள்ளது. அன்றைய இரங்கல் செய்தியில் அவர் அதை பற்றியும் அது போன்ற சந்தர்பங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பற்றியுமே பேசினார்.
பிறகு நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தோழரை கடந்த நவம்பர் புரட்சிநாள் விழாவில் கோவையில் பார்த்தேன் முதலில் அடையாளம் தெரியவில்லை அவ்வளவு மாற்றம் கண்டிருந்தது அவரது உடம்பு. பிறகு தோழரை அடையாளம் தெரியவில்லையா என தோழர்கள் கேட்டபோதுதான் தோழர்தான் இது என்பதே புரிந்துகொள்ளவே முடிந்தது.
ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட பழனிபாபா இருந்தபொழுது தோழர் ஒருமுறை பேருந்து நிறுத்தம் ஒன்றில் தனியாக நின்றுகொண்டு இருந்தாராம் தோழரைப் பார்த்த பாபா காரிலிருந்து இறங்கி வந்து கேட்டாராம் என்னைவிட நீங்கதான் பார்ப்பனியம் பற்றி அதிகமாக மேடைகளில் பெசுகிரீர்கள் அப்படி இருக்க ஏன்? இங்கே தனியாக பாதுகாப்பு இல்லாமல் நிற்கிறீர்கள் என்று அதற்க்கு தோழர் பதிலளித்தாராம் மக்கள்தான் எங்கள் பாதுகாப்பு என்று. அதை தோழரின் இறுதி ஊர்வலத்தின் முதல்நாள் இரவு உணர முடிந்தது. தோழரின் இறுதி அஞ்சலிக்காக முதல்நாள் சென்ற நாங்கள் இரவு அம்பேத்க்கார் திடலின் சுற்றுவட்டாரங்களில் நடந்துகொண்டு இருந்தோம் அப்போது ஒரு இடத்தில் சில இளைஞர்கள் எம்மை வழியில் கண்டு அருகே வந்தனர் வந்தவர்கள் எம்மை நெருங்கி வந்ததும் நாங்கள் கருப்பு ரிப்பனை எங்கள் சட்டைகளில் குத்தியிருப்பதை கண்டு ''நீகள் தோழர்களா அப்போ போங்க அவருக்காக நாங்க என்னவென செய்வோம்'' போங்க போங்க என்றார்கள். பிறகு அவர்களிடம் பேச்சு கொடுத்த போதுதான் தெரிந்தது எந்த விதமான தாக்கத்தை அவர் அம்மக்கள் மீது விதைத்துள்ளார் என்பது.
தோழர் அபுதாகிர் அவர்கள் இருவது நாட்களுக்கு முன் தோழரை சந்தித்த போது தனது மகள் வழக்கறிஞர் போர்க்கொடியை அறிமுகப்படுத்தி அவரின் போராட்டங்களி கூறி மகளின் மீது மிகவும் பெருமை கொண்டு இருந்தாராம் மேலும்  நிறைய விஷயங்களை பேசிக்கொண்டே இருந்தாராம் அப்போது சென்றவர்கள் அதிகமாக பேசவேண்டாம் என்றபோது. எப்படியும் நான் சாவேன் அதுதான் இயங்கியல் ஆனால் நீங்கள் எனது பிள்ளைகள் உங்களோடு இப்போதுதானே பேசமுடியும் என்றவாறே நிறைய பேசினார் எங்களிலும் நம்பிக்கையை விதைத்தார் என்றார் அபுதாகிர்.மரணத்தை எதிர்கொள்ள மிகப்பெரிய தைரியம் வேண்டும் அதை அவருக்கு வழக்கி இருந்தது அவரது அரசியல். வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என சொல்லிக்கொடுக்க ஏராளமான புத்தகங்கள் உண்டு சாவை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுக்கொடுத்தவர் தோழர் சீனிவாசன்.
எப்படியெல்லாம் ஒரு மனித வாழக்கூடாது என்பதற்கு நாறவாயன் நாராயணசாமி போன்றோர் ஏராளமான பேர் உண்டு. ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக தோழர் சீனிவாசனை போன்றோர் குறைவாகவே உள்ளனர்.
அதில் ஒருவரை
இழந்து நிக்கிறோம்.
இறுதி ஊர்வலம் சென்ற பொழுது இரு புறமும் வீதியில் கூடியிருந்த மக்களின் உதடுகளின் உச்சரிப்பில் புரிந்தது மக்களுக்காக மடிவது மலையினும் வலியது எனும் உண்மை.
இறுதியாக கவலைகொண்டு கண்ணீர் துளிகளை சிந்தி புலம்புவது  உங்களுக்கும் பிடிக்காது
எனவே கடமை கொண்டு வியர்வை துளிகள் சிந்தி உழைப்போம் உங்களது இலட்சிய பாதையில்.....

வீரவணக்கம் 



மழை வரும்போதெல்லாம் உன் நினைவும் வந்துவிடுகிறது
 உன் நினைவிருக்கும் 
போதெல்லாம் மழையும் வருகிறது 
வேறுபாடு ஒன்றுதான் 
விட்டுத் தொடருது மழை 
விடாமல் தொடருது நினைவு

மகிழ்ச்சியில் என் புன்னகயாகவும் 
துயரத்தில் என் கண்ணீராகவும் நீ......

எனக்காக தீட்டப்பட்ட கத்தி..
எந்த இருளில் காத்திருக்கிறதோ
எவன் கை (அதை) தாங்கி இருக்கிறதோ....


உன்னிடம் ஒன்னு கேக்கவா? என்றாள்.
ஏதும் என்னால் இயலாதை கேட்டுவிட போகிறாளோ?
என்கிற அச்சத்துடனேயே ம்ம்ம் கேள் என்றேன்.
சட்டென குழந்தைகளின் குரலில் கூறினாள்
உனது புத்தகங்கள் முழுவதையும் கலைத்துப்போட்டு
அதில் படுத்துக்கொள்ள வேண்டும் என்றாள்
நிலவோடு
உன்னை ஒப்பிட்டேன்
அழகியலை பாடவோ
வெண்மையின் பெருமை போற்றவோ
அல்ல
காட்டுவேட்டைக்கு
எதிராக
களமாடும்
எங்கள்
நாயகர்களுக்கு
இருளில்
ஒளியாக
இருப்பதைப் போல
இருக்கிறாய்
என்பதை கூறவே...

புது மழையில்
நனைந்து கொண்டிருக்கிறேன்


ஒவ்வொரு துளிக்கும்
உன் பெயரிட்டே அழைக்கிறேன்

ஒவ்வொரு துளியாக
உன்னில்
பெய்துகொண்டே இருப்பேன்
இறுதியில்
நாம்
ஒரு மழையாகும் வரை