சனி, 28 ஆகஸ்ட், 2010

ஒரு கட்டிடமும் இரு அய் ஏ எஸ்ம்

தெற்குகோவையில் நடக்கும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்துக்கும் அரசு போலவே மௌன சாட்சியாக விளங்கி வருகிறது ஒரு கட்டிடம் இந்திய செஞ்சிலுவை சங்க கட்டிடம் 
இரு மாதங்களுக்கு முன் கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடத்தின் முன் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்ததது . நடத்தியவர்கள் மாற்றுத்திரனாளிகள்
துக்ளக் எனும் பத்திரிக்கையில் முருகன் எனும் ஓய்வு பெற்ற அய் ஏ எஸ் அதிகாரி மாற்றுத்திரனாளிகளை கொச்சை படுத்தி எழுதியதை கண்டித்துதான் நடந்தது அந்த கண்டன ஆர்ப்பாட்டம் .
அய் ஏ எஸ் அதிகாரிகள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதற்கு முருகன் அய் ஏ எஸ் ஏ முன் உதாரணம் .
இன்று அதே கட்டடத்தில் உமா சங்கர் அய் ஏ எஸ் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்தியது ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் .
அய் ஏ எஸ் அதிகாரிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உமா சங்கரே அடயாளம் .
இன்றளவும் நிறைய நேர்மையான அதிகாரிகளை நீங்கள் காண நேரலாம் அவர்களில் இருந்து உமா சங்கரை அவரது போராட்ட குணம் வேறுபடுத்திகிறது.
மற்றவர்களிடம் நேர்மை இருக்கிறது அவர்களின் நேர்மை என்பது அவர்கள் அளவில் அவர்கள் இலஞ்சம் வாங்காமல் இருப்பது என்கிற அளவிலே இருக்கிறது .
நேர்மைக்கு பேர் பெற்ற கக்கன் ஒருமுறை அவர் அமைச்சராக இருக்கும் பொழுது சங்கர சாரியை பார்க்க போனாராம் கக்கன் கீழ் சாதி அதனால் அவரை நேராக பார்க்க மறுத்து சாரிக்கும் கக்கனுக்கும் இடையில் ஒரு பசு மாட்டை நிறுத்திவைத்து பார்த்தானாம் சங்கராச்சாரி . கக்கனின் போராட்டமில்லா நேர்மையால் அங்கு ஒரு பயனும் நிகழவில்லை மாறாக அவர் போராட தயாராக இருந்த்திருந்தால் . பசு மாட்டை நிறுத்த துணிவு வந்திருக்குமா அந்த எருமை மாடுகளுக்கு .
இதற்க்கு முன் 95 இல் அம்மையாரின் ஆட்சில் நடந்த சுடு காட்டு ஊழலையும் அம்பலப்படுத்திவர்தான் இந்த உமா சங்கர் .
இரு கழகங்களாலும் பழி வாங்கப்பட்டவர் தான் உமா சங்கர்.
உமா சங்கர் ஏன் பழி வாங்கப்பட்டார் ஒன்னுமில்லைங்க நம்ம விஜய் மதுர என்கிற படத்துல கலக்டர நடிசிருந்த்தாரு . நாமும் கை தட்டி விசிலடிச்சு ரசிசசோமே அதே வேலையத்தான் உமா சங்கரும் நிஜத்துல செஞ்சிருக்காரு .
ஒண்ணுமில்லிங்க வடிவேலு ஒரு படத்துல கிணத்த காணமேன்னு போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைன்ட் குடுப்பாரே. பார்க்கறதுக்கு கேணத்தனமா இருக்கும்
அதேதான் நிஜத்துலயும் நடந்ததது இவர் எல்காட் நிறுவன அதிகரியா இருந்த்த பொழுது எல்காட் நிறுவனத்துக்கு சொந்தமான 700 கோடி சொத்துக்கள காணோம்
அத தோண்ட போய்தான் இப்ப வேல போய் நிக்கறாரு உமா சங்கரு.
அதுக்காக அவர் சாதி சான்றிதழை அகழ்வாராய்ச்சி செய்திருக்கின்றனர் பெரியாரின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அரசு ."அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல்" பெரியாரின் வார்த்தைகள் நினைவிற்கு வருகிறது .
உமா சங்கர் எழுப்பியுள்ள கேள்வியெல்லாம் அவருக்கானது அல்ல மக்களுக்கானதே (சாதாரண குடிமக்கள் அரசு நிறுவன அதிகாரிகள் மேலோ அய் ஏ எஸ் அதிகாரிகள் மேலோ சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட சிக்கல் இருப்பதால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது மோசடியே என்கிறார் ) எனவே தன்னைப்பற்றிய C.B.I. விசாரணைக்கும் கூட தயாராகவே இருக்கிறார்.
நீதிக்காக போராடிய உமா சங்கரின் பணி நீக்கம் நமக்கு அறுதியிட்டுக்காட்டுவதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான் அது அதிகார வர்கம் என்றுமே மக்களுக்கானதல்ல அது என்று ஆளும் வர்க்க சேவைக்கே ................வாழ்க ஜனநாயகம்

1 கருத்து: