ஞாயிறு, 30 ஜூன், 2013
பேட்டை தாதாவும் வேட்டை நாயும்..!
தினந்தோறும் ஊடகங்களில் வெளிவரும் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னை பற்றிய செய்திகளை பார்க்கும்போது ,ஏதோ இஸ்ரேலும் பாலஸ்தீனும் பக்கதுபக்கதது நாடுகள் நாடுகள் என்றும் அவைகளுக்கிடையே ஏதோ எல்லை பிரச்னை என்றோ அரசியல் பிரச்னை என்றோ நம்மில் இன்னும் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம் .அனால் இதில் ஒளிந்துள்ள உண்மைகளை வரலாற்று பின்னணியில் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் .
உண்மையில் இது அரசியல் பிரச்னை இல்லை ,இருப்பியல் பிரச்னை. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ,இரண்ண்டாம் உலக்காகப்போருக்கு பின் பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்த நாடுகள் ஒவ்வொன்றாக விடுதலை அடைந்த பிறகும் 21 ஆம் நூற்றாண்டில் இன்று வரை பாலஸ்தீன் மக்கள் அடிமை வாழ்வை வாழ்கிறார்கள் .இதை விட பெரிய கொடுமை என்னவென்றால் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர் .
19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஹிட்லரின் நாஜிப்படைகள் நிகழ்த்திய யூத ஒழிப்பை நாம் அறிவோம் .அதற்கெல்லாம் வெகு காலம் முன்னமே , 15 ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே ஸ்பெயின், போர்சுகல் ,மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் யூதர்களை களை எடுக்கும் அல்லது அப்புறப்படுத்தும் வேலை மும்மரமாக நடந்தது , இது ஹிட்லர் காலம் வரை தொடர்ந்தது .
எல்லா தேசங்களும் யூதர்களை வெறுக்க காரணம் என்ன ?யூதர்களின் இன உணர்வுதான் .யூத மதம் தான் உலகிலேயே சிறந்த மதம் ,யூத இனம் மட்டுமே மற்ற எல்லா இனங்களையும் விட மேண்மையானது என்று அவர்கள் கொண்டிருந்த வீண் ஆணவமும் வெட்டி செருக்குமே காரணம் .
அடுத்ததாக அவர்களின் குயுக்தி எண்ணங்கள் ,தமது தொழில், வியாபாரம் ,மேன்மையடைய எந்த கெட்ட காரியம் செய்வதற்கும் தயாராக இருந்தார்கள் .அகதிகளாக செல்கிற தேசத்தில் உள்ள சுதேசி தொழில்களை நசுக்கி, இவர்களது தொழில் மேம்பட வேண்டி அரசு அதிகாரி முதல் நீதிபதிகள் வரை லஞ்சம் கொடுத்து காரியங்களை சாதித்து கொண்டனர் . பல நாடுகளில் பல 'கேதான் தேசாய் 'களை உருவாகினார்கள் .
எந்த வகையிலாவது தகிடுதத்தம் செய்து தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொண்டு மற்ற சுதேசி மக்களை ஏளனம் செய்ததோடு மற்றவர்கள் தங்களுக்கு கீழானவர்கள் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள் ,எனவே எல்லா நாடுகளிலும் சுதேசி மக்களின் வெறுப்புக்குள்ளாகி அங்கிருந்து விரட்டப்பட்டனர் .
வாழ வழியில்லாமல் தமக்கென சொந்தமாக ஒரு தேசம் இல்லாமல் உலகம் முழுவதும் நாடோடிகளாய் ஓடிக்கொண்டிருந்த யூதகூட்டதை அரவணைத்து வாழ இடம் கொடுத்து பாதுகாத்தது பாலஸ்தீன் மக்கள் தான் .அந்த பாலஸ்தீன் மக்களை ஏமாற்றி, அராபியர்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகத்தின் மூலம் உருவானதுதான் இஸ்ரேல் .
1948 ஆம் ஆண்டுவரையில் இஸ்ரேல் என்ற ஒரு தேசமே கிடையாது .பாலஸ்தீன் என்ற பரந்த தேசமே இருந்தது .
1875 ஆம் ஆண்டுவாகில் பாலஸ்தீனில் அகதிகளாக குடியேறிய யூதர்கள் உலகமெங்கும் தம்மக்கள் படும் துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு காண எண்ணினர்,அப்போது அவர்கள் ஏற்ப்படுத்திய கொள்கையே ஜியோனிசம் ஆகும் .அதற்காக உலகம் முழுதும் உள்ள யூதர்களிடம் நிதியுதவி பெற்று பாலஸ்தீனில் நில வங்கி உருவாக்கப் பட்டது .இதன் வேலை என்னவெனில் பாலஸ்தீனில் உள்ள விவசாய நிலங்களை விலைக்கு வாங்குவதும் அந்த இடத்தில மும்மரமாக யூத குடியிருப்புகளை நிறுவுதலும் ஆகும் ,இதே வேலையை தான் இலங்கையில் சிங்களனும் செய்தான் என்பது நினைவிருக்கிறதா ?
மேலும் நில வங்கிகள் மூலம் கடன் கொடுக்கப்பட்டது .படிப்பறிவில்லாத அராபியர்களிடம் பல்வேறு ஏமாற்று நிபந்தனைகளுடன் கூடிய பத்திரங்களில் எழுதி வாங்கி அதிக வட்டிக்கு கடன் கொடுத்தது .நாட்கள் செல்லசெல்ல அதன் சுயரூபம் தெரிய வந்தது .ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதிக வட்டி அபராத வட்டி என்று சொல்லி அராபியர்களின் நிலங்களை பறிமுதல் செய்தனர் .இடை எதிர்த்து பொங்கிய அராபியர்கள் குண்டர்களை கொண்டு அடக்கப்பட்டனர்.கொஞ்சம்கொஞ்சம்காக பாமர மக்களின் வயிற்றில் அடித்து நில வங்கி செழித்து வளர்ந்தது .பிறகு கடன் வாங்காத அராபியர்களில் சிலருடைய நிலமும் கட்டாயமாக பறிமுதல் செயப்பட்டது .அரசாங்கமும் நீதித்துறையும் லஞ்சத்தில் மூழ்கி அநீதித்துறையாக மாறி நில வங்கிக்கு துணை போயின .
இதற்கிடையில் முதல் உலகப்போரின் முடிவில் பாலஸ்தீனை பிரிட்டன் கைப்பற்றி அதன் காலனியாககிகொண்டது ,அப்போது அதன் வெளிஉறவு துறை அமைச்சர் ஆர்தர் பால்பர் என்பவர் மகா நயவஞ்சக பிரகடனம் ஒன்றை வெளியிட்டார் அதன் சாரம் "பாலஸ்தீனில் யூதர்களுக்கு தனி நிலப்பரப்பு அமைக்கப்படுகிறது , இப்போது அங்கு வசிக்கும் யூதர்கள் அல்லாதவர்களின் பொது உரிமை , மத உரிமைகள் பாதுகாக்கப்படும் "
அதாவதுபூர்வீகமாக அங்கு வாழும்அராபியர்களை, யூதர்கள் அல்லாதவர்கள் என்று குறிப்பதன் மூலம் நிராகரித்து வந்தேறிகளான யூதர்களை மண்ணின் மைந்தர்களாக திரித்து கூறியது ,எனவே தான் வரலாற்று ஆசிரியர்கள் பால்பர் பிரகடனத்தை "வடிகட்டிய அயோகியத்தனம் "என்று வர்ணிக்கிறார்கள்.
பிறகு ஜியோனிசம் சார்பாக ஒரு அழைப்பு வெளியிடப்பட்டது "உலக யூதர்களே பாலஸ்தீன் வாருங்கள் நமக்கான ஒரு தேசத்தை அமைப்போம் " அவ்வளவுதான் உலகெங்கிலும் இருந்து யூதர்கள் அலைஅலைஎன வந்து குடியேறினர் .POSPORT ,விசா , எதுவும் தேவையில்லை நீ யூதனா உள்ளே வரலாம் என்கிற நிலை .இந்த அராஜக குடியேற்றங்களுக்கு பிரிட்டன் முழு ஆதரவு கொடுத்தது ,அப்போதைய பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் T இஸ்ரேலி ஒரு யூதர்.
பிறகு பிரிட்டன் பாலஸ்தீனுக்கு சுதந்திரம் கொடுத்து போனபோது தன குள்ளநரி வேலையை செய்து பிரிவினை செய்து ஒரு நிரந்தர பதட்டம் அங்கு ஏற்ப்படுத்தியது .
1948 மே 14 அன்று இஸ்ரேல் உருவானதாக யூதர்கள் அறிவித்தார்கள் .அடுத்த நிமிடமே பாலஸ்தீன போராளிகளும் , இராக் ,எகிப்து, ஜோர்டான் .சிரியா ,லெபனான் ,போன்ற அண்டை நாடுகளும் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன .அப்போது உலக நாடுகளின் நாட்டாமை அமெரிக்க தலையீட்டால் ஐய் நா சபை போர் நிறுத்தம் கொண்டுவர சொன்னது .ஐ நா வாக்குப்படி எந்த நாடுகள் எங்கு நிலை கொண்டுள்ளதோ அது வரை அந்த நாடுகளுக்கு சொந்தம் .
எகிப்து காசா வரை முன்னேறியிருந்தது ,ஜோர்டானுக்கு மேற்கு கரை சொந்தமானது, மீதமிருந்த நிலப்பரப்புகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்திருந்தது , சரி இப்போது பாலஸ்தீன் எங்கே ? பாலஸ்தீன் மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாறிப்போனது இப்படி தான் .
சரி உலகங்களின் போலீஸ்காரன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பக்கா திருடனான அமெரிக்க இஸ்ரேலை ஆதரிக்க என்ன காரணம்? காரணம் எண்ணெய்,இஸ்ரேலில் பெரிதாக எண்ணெய் வளம் இல்லையென்றாலும் அதை சுற்றியுள்ள நாடுகள் எண்ணெய் வளம் மிக்கவை ,அவற்றோடு ஒப்பந்தம் செய்து கொண்டு என்னையையும் அந்த மக்களின் வாழ்வாதாரத்தையும் உறிஞ்சும் பகாசுர திட்டம். அதற்க்கு ஒரு தளம் தேவை ,தன வழிக்கு வராத தேசங்களை மிரட்டி பணியவைக்க தன ராணுவ தளம் ஒன்று மதிய கிழக்கில் தேவை , எனவே தான் இஸ்ரேலை தன வேட்டை நாயாக ஆக்கிக்கொண்டது ,இஸ்ரேல் ராணுவ உதவி, நிதி உதவி போன்ற எலும்புதுன்ன்டுகளை பெற்றுக்கொண்டது ...
- தோழர் ஹீரா
நிறைந்து போன குப்பை தொட்டிகள் ...
எங்கிருந்து வந்தாய் ? - நீ எங்கிருந்து வந்தாய்...?
நிலம் நீர் காற்றில் நிறைந்திருந்தாய்
நெருப்பில் ஆகாயத்தில் கலந்திருந்தாய்
ஒருங்கிணைந்து போனாய் தந்தைக்குள் சக்தியாக
தள்ளப்பட்டாய் தாய்க்குள் சகதியாக
கோடி உயிர்களோடு போராடி வென்றாய்
முட்டி மோதி அண்டம் துளைத்தாய்
சில நாள் இரத்தக் கட்டியாக
சில நாள் சதைப்பிண்டமாக
உருமாறி உருமாறி உருவமடைந்தாய்
ஒருநாள் துப்பப்பட்டாய்
ஐம்புலன்களை கொண்ட அதிசய மிருகமாய்
இப்போது நீ காலியான குப்பை தொட்டி
உன்னுள் கொட்டப்பட குப்பைகள் காத்திருக்கின்றன
தவழ , நிற்க , நடக்க கற்றுக்கொள்ளும் வரை
அனுமதிக்கப்பட்டாய் நீ நீயாக இருப்பதற்கு
தாய் மொழி கற்றாய் அதன்மூலம் சிந்திக்க கற்றாய்
உயரமாய் ஒன்றை காட்டி மரம் என்றார்கள்
உயரமாய் இருப்பதெல்லாம் மரமா? என்றாய்
இல்லையில்லை அது மாமரம் இது தென்னை மரம்
வேறுபாடு சொல்லித்தந்தார்கள்
உருண்டையாய் ஒன்றை காட்டி பந்து என்றார்கள்
உருண்டையாய் உள்ளதெல்லாம் பந்தா? என்றாய்
இல்லையில்லை அது மஞ்சள் பந்து இது வெள்ளை பந்து
வேறுபாடு சொல்லி தந்தார்கள்
நம்பத்துவங்கினாய் - அவர்கள் சொல்வதெல்லாம்
உண்மையென உள்வாங்க துவங்கினாய்
நட்ட கல்லை சுட்டிக்காட்டி சாமி என்று சொன்னார்கள்
முட்டி போட்டு கும்பிட்டா மோட்சம் என்று சொன்னார்கள்
வேதப்பொய்கள் , புராணப் புரட்டுகள்
இதிகாச இட்டுகள் ,கலர் கலர் பொய்கள்
அப்போதே கொட்டப்பட்டது ஆன்மீக குப்பை
தந்தை அடிக்கும்போது தாய் பணியும்போது
தானாக நுழைகிறது ஆணாதிக்க குப்பை
பெண்ணை பொருள் என்று- அவள்
உடலை போகமென்று - தினம்
பலநூறு வாய்கள் மென்று
பலவாறு பொய்கள் துப்ப
பட்டென்று கொட்டியது ஆபாசக் குப்பை
பாடப்புத்தகங்கள் ஒருபோதும் முழு உண்மை சொல்லாது
நூறாண்டுகால வாழ்வியலை , ஒரு தேசத்தின் வரலாறை
அரைப்பக்கத்தில் அடைத்து படித்துக்கொள் எனும்போது
படிப்படியாய் கொட்டியது திரிபுக் குப்பை
தேர்ச்சி பெறுவதே தேவை என்றும்
மதிப்பெண் பெறுவதே மார்க்கம் என்றும் -உன்னை
நவீன அடிமையாய் உருவாகினார்கள்
இன்றைய உலகை வெல்ல
எல்லோரையும் முந்திச்செல்ல
களவு செய்,கொலை செய், எதுவும் செய்
கொலை செய்கையில் கைகள் நடுங்கினால்
சிங்களனை பார்த்துக்கொள்
பௌத்தமும் கொலை செய்யும் -உன்னை
சமாதானம் செய்துகொள்
சந்தைப் பொருளாதாரம் - உன்னை
சரக்காக மாற்றும்
உனக்கென தனி நியாயங்கள்
உனக்கென தனி தீர்வுகள்
ஊசி துளைக்கும் வாழைப் பழமாய்
ஊடுருவும் குப்பைகள் உனக்குள்ளே
ஆனாலும் மறக்காமல் ஐவேளை தொழுதுகொள்
மறுமையின் சுகவாழ்வை முன்பதிவு செய்துகொள்
நீயும் நானும் , நம்போல் யாவரும்
நிறைந்துபோன குப்பை தொட்டிகளே
நிறைந்து போன குப்பைகளில்
மனிதம் தொலைந்து போகட்டும்
முடையாய் நாறும் மனதுக்குள்
மானுடம் மட்கிச் சாகட்டும்
உன்மனம் உன்னை உறுத்தலாம்
உனக்கே உன்னை வெறுக்கலாம்
ஆனாலும் பொறுத்துக்கொள்
அப்படியே சகித்துக்கொள்
பிறர் வலியை பிறர் வேதனையை
நின்று பார்ப்பது நேர விரையம்
ஓடு பணம் தேடி ஓடு
உன் வாழ்வே முடியும் வரையிலும்
பணம் தேடியே ஓடு
சலிப்படியும் போது
டாஸ்மாக் தேடு
இளைப்பாறுதல் வேண்டுமா? - தேவனின்
பரிசுத்த ஆவியை நாடு
உன் கொலை, களவு, காமமெல்லாம்
தேவனால் மன்னிக்கப்படும்
உன் பாவக்குப்பைகள் எல்லாம்
தேவனால் சுமக்கப்படும்
ஆமென்...
- தோழர் ஹீரா
சாதின்னா என்னங்க எசமான்....
ஊழியம் செய்ய பிறந்தவனே
உள்ளே நுழையாதே....
ஏன் எசமான் என்னை தடுக்கறீங்க ?
என்ன குற்றம் எங்கிட்ட பாத்தீங்க?
நீ வேற சாதியடா வெவரமற்றவனே,
நீ தாழ்ந்த சாதியடா தகுதியற்றவனே....
என்னைப்போலத்தான் நீங்களும் இருக்கீங்க
உங்களைப்போலத்தான் நானும் இருக்கேன்,
நம்மை வேறுபடுத்தும் சாதிஎதுவும் -என்
கண்களுக்கு காணலையே,
வெவரமா சொன்னா வெளங்கிககுவேன் எசமான்...
நான் திருமால் தலையில் பிறந்த
உயர்ந்த சாதியடா,-நீ
காலில் பிறந்ததனால்
தாழ்ந்த சாதியடா....
வேதப்புத்தகத்தில் உள்ளதெல்லாம்
படிக்க உனக்கு தகுதி இல்லையடா...
எம்புள்ள படிக்கிற அறிவியல் புத்தகத்தில்
மனுஷனுக்கு கருப்பை வயித்துல இருக்குதுன்னு
படம் வரஞ்சு பாகம் குறிசிருக்கே-உங்க
வேதம் சொல்றது பொய்யுங்க எசமான்-அந்த
பொய்கள படிக்க எனக்கு ஆசையில்ல எசமான்.
அப்படின்னா பொய்கள் தான் சாதியா எசமான் ?
எதிர்த்துப்பேசாதே எகத்தாளம் புடுச்சவனே,
திருப்பிபேசாதே திமிரு பிடுச்சவனே,
கூலி கொடுக்கும் பண்ணையார் நான்,
கூலிக்கு உழைக்கிற அடிமை நீ
இந்த வேறுபாடு சாமி படச்சதடா ....
நீங்க அப்படி இருக்க காரணமும் சாமியில்ல ,
நான் இப்படி இருக்க காரணமும் சாமியில்ல ,
என் உழைப்ப சுரண்டி உங்க வயிறு பெருக்குது
உங்களுக்கு உழைச்சு உழைச்சு என் வயிறு சுருங்குது,
பொது உடைமை ஆட்சி வரப்போகுது எசமான்-அப்ப
உங்களுக்கும் எனக்கும் ஒரே பேருதான் எசமான்
உழைப்பாளி என்கிற ஒரே பேருதான் எசமான் .
அப்ப காசு பணம் தான் சாதியாஎசமான் ?
எம்பேருக்கு பின்னாலே சாதி பேரு போட்டா
அது எனக்கு கௌரவண்டா
உஞ்சாதி பேரு சொன்னாலே கேவலண்டா...
எம்பெயர எங்கப்பா அம்மா வச்சாங்க
உங்க பெயர உங்க அம்மா அப்பா வச்சிருப்பாங்க
செத்துப்போனா உங்களுக்கும் எனக்கும்
ஒரே பேருதான் எசமான்
பொணம் என்கிற ஒரே பேருதான் எசமான் .
அப்படின்னா பேருதான் சாதியா எசமான் ?
உன்னைப்போல பேசுன எல்லோரும்
போன எடம் தெரியுதா?
நந்தனுக்கு ஆன கதியில்
உனக்கு பாடம் இருக்கு புரியுதா ?
கீழ வெண்மணி வரலாறு
சொன்ன செய்தி விளங்குதா?.....
நல்லா தெரியுது எசமான்,
விவரம் புரியுது எசமான்
ஒன்னு மட்டும் சொல்லுறேன் எசமான்
நந்தனப்போல் எரிஞ்சுபோக
இது புரானக்காலமும் இல்ல எசமான்
கீழ வெண்மணிபோல் கருகிப்போக
இது அறியாமைக் காலமும் இல்ல எசமான்...,
அப்படின்னா இந்த கொலைவெறி தான் சாதியா எசமான்?
உடம்புக்குள்ள செங்குருதி ஓடுது எசமான்
நெஞ்சுக்குள்ள செங்கொடியும் பறக்குது எசமான்
மார்க்சியம் இப்போ புரிஞ்சுபோச்சு எசமான்
பயமெல்லாம் நெஞ்சவிட்டு பறந்துபோச்சு எசமான் ...
உங்கள் பகட்டும், அதிகாரமும் பறக்கப்போகுது எசமான்
இனி வரப்போவது சாதிப்போர் இல்லை எசமான்
விண்ணை முட்டும் வர்கப்போர் எசமான்
வீரஞ்செறிந்த விவசாயப்படையொன்று வருகுது எசமான்
தோள் தடித்த தொழிலாளர் படையொன்று வருகுது எசமான்
சமதர்ம உலகு படைக்க செந்தொண்டர் படையொன்று வருகுது எசமான்
பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் நிலைக்கப்போகுது எசமான்....
ஐயோ ! என்ன கொடுமை இது!
கலிகாலம் இதுதானா கடவுளே,
கூலி கேட்கும் கூட்டமெல்லாம் கூடிவருகுதா ?
அடங்கிப்போகும் கூட்டமெல்லாம் ஆட்சி செய்யுதா ?
தீண்டாமை சுவர்களெல்லாம் தூளாகப்போகுதா?
ஒசந்த சாதி, தாழ்ந்த சாதி ஒன்றாகப்போகுதா ?
பண்ணையும்,அடிமையும் ஒன்றாகப்போகுதா ?
காற்று போல நிலமும் ,வளமும் பொதுவாகப்போகுதா?
சாதிப்பேரால் ஏமாற்றி வாழ்ந்த வாழ்க்கை முடியப்போகிறதா?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
- தோழர் ஹீரா
- தோழர் ஹீரா
சனி, 22 ஜூன், 2013
ஈகோ தான் மானம் என்றால் மானம் கெட்டவர்களே கம்யூனிஸ்ட்டுகள்...
நேற்று திருப்பூருக்கு சென்றிருந்தேன் அங்கே CPM இல் இருந்து விலகிய சில நண்பர்களை சந்தித்து உரையாடிக்கொண்டு இருந்தேன். அப்போது நிறைய விசயங்களை விவாதித்து கொண்டிருந்தோம். அப்போது எதைப்பற்றியோ கேள்வி கேட்ட ஒருவரை மிக நாசுக்காக மற்றவர்கள் புறக்கணித்தனர். அவர் சென்ற பின்னர் அதைப்பற்றி கேட்ட பொழுது விடுங்க தோழர் அவன் சின்ன பையன் என்றனர். பொதுவாகவே பதில் தெரியவில்லை என்றால் இப்படிதான் 'சின்ன பையன்' என்று சொல்லி தப்பித்து கொள்வார்கள் என்று நான் கூறினேன்.(பிறகு அது ஒரு நீண்ட விவாதம் ஆனது)
இரவு வீடு திரும்பும் வழியில் இதே போன்ற ஒரு நிகழ்வு. என்னிடம் எனது தவறை (அவரை சந்திப்பதாக கூறி நேரத்துக்கு சந்திக்க முடியவில்லை) சுட்டிக்காட்டிய என்னைவிட 15 வயது குறைவான இளைஞனிடம் மன்னிப்பு கேட்டது என்னோடு வந்திருந்த என் சமவயது நண்பனுக்கு பிடிக்கவில்லை. அவன் கேட்க்கிறான். 'என்னடா சின்ன பையனுக்கேல்லாம் போயி மரியாதையா பதில் சொல்லிக்கிட்டு' நாளையும்பின்னியும் பார்த்தா மதிப்பானா? நீ கம்யுனிசம் பேசுறேன்னு இவனுக்கெல்லாம் மரியாதை கொடுத்து.......மானமே போச்சு என்றான்.
உண்மையில் மானம் என்பதன் பொருள் இதுதான் என்றால் மானம் கெட்டவர்களே கம்யூனிஸ்ட்டுகள் என்றேன். புரியாமல் குழம்பிய நண்பனுக்கு விளக்கினேன். நீ புரிந்துகொண்டிருக்கும் பொருளில் உள்ள மானம் என்ற சொல்லே நிலப்ரபுத்துவ சமூக அமைப்பின் நீட்சியே என்றேன். ஒண்ணுமே புரியவில்லை என்றான். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. பிறகு உதாரணமாக ஆடுகளம் படத்தில் வருமே இறுதிக்காட்சி அதில் அந்த முதியவரிடம் தனுஷ் சொல்லுவார். நீ செய்த எல்லாமே எனக்கு தெரியும் என்று உடனே தனது கழுத்தை அறுத்துக்கொண்டு செய்துவிடுவார் அந்த முதியவர். இது அவருக்கு மானம் போய்விட்டதால் எடுத்த முடிவு. ஆனால் உண்மையில் இது எந்தவகையான மனநிலை தான் செய்த தவறை தன்னிலும் சிறுவயது உடைய ஒருவனுக்கு தெரிந்து விட்டது நான் அவனைவிட மேலானவன் எனவே இனியும் உயிரோடு இருக்ககூடாது எனும் மனநிலை தானே. மாறாக அந்த இளைஞனிடம் (தனுஷ்) தனது தவறுகளுக்கு வருந்தி சுயவிமர்சனம் செய்துகொண்டிருக்க மணம் முன் வராததன் காரணமும் இதுவே இந்த மேலானவன் எனும் ''ஈகோ'' தான் அந்த வகையில் எந்த ஒரு தவறையும் ''ஈகோ'' இல்லாமல் சுய விமர்சனம் செய்து கொள்வதிலிருந்து விலகி ''மானம்'' என கட்டமைக்கப்பட்ட ஒரு சொல்லாடலை வைத்துக்கொண்டு சாக்கு சொல்பவர்கள் அல்ல கம்யுனிஸ்ட்டுகள். ஆனால் மானம் என்பதன் சரியான பொருளில் என்றால் அதாவது சுரண்டுவதற்கு எதிராக அடிமைப்படுத்துவதற்கு எதிராக வெகுண்டேழுவதுதான் மானம் என்றால். மானத்தில் புடம் போட்ட மானஸ்த்தர்களே கம்யூனிஸ்ட்டுகள்
ஒரு வெங்காயத்தின் கதை...
வழியில் கிடக்கும் கல்லை அப்புறப்படுத்த வெறும் சிந்தனை மட்டுமே போதாது என்றார் மார்க்ஸிம் கார்க்கி அது போலதான் கம்யூனிசமும் நடமுறைக்கு செல்லாமல் வெறும் புத்தக அறிவை வைத்து கம்யூனிசத்தை ஒருவர் கற்றுக் கொண்டார் என்பதும் கற்றுக்கொடுத்தார் என்பதும் பொய்யாகவே இருக்கும். கம்யூனிசம் மட்டுமே அல்ல எந்த ஒரு விஷயமும் நடைமுறை அனுபவம் இன்றி புரிந்து கொள்ள முடியாது. அப்படி புரிந்து கொள்ள முடிந்தால் முப்பதே நாளில் கராத்தே கற்றுக் கொள்ளுங்கள் எனும் புத்தகமே போதும் கராத்தே கற்றுக் கொள்ள. ஆயினும் புத்தகத்தில் படித்து கரத்தே போட்டியில் கலந்து கொள்ளாத அறிவு ,ஒரே நாளில் கம்யூனிசம் படித்ததாக கூறி கம்யூனிஷ்ட்டுகளை விமர்சிக்க துணிகிறது ஏன் என சிந்திக்க வேண்டும்.
ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது என்பது ஒரு பழ மொழி சமீபத்தில் இதன் பொருளை நடைமுறையில் எனக்கு உணர்த்தினார் ஒரு ஃபேஸ்புக் போராளி, ஆம் பெரியவெங்காயம் நிறையா போட்டு ஆம்லேட் போட்டுக் கொடுத்தேன் அந்த நண்பருக்கு(நானே போட்டது) வெங்காயத்தை பார்த்தது அவர் “ என்னங்க பணக்காரன் ஆயிட்டீங்க போல” என்றார். ஏன் என்றேன் இல்லை வெங்காயம்தான் கிலோ 110ரூபாஇ ஆச்சேன்னார்.! இது பெரிய வெங்காயம்ஙன்னு சொன்னேன், கிளம்பும் போது அவர் சொன்னார் ஏங்க பெரிய வெங்காயம் விலை ஏறலையா? என்றார் இல்லைங்க ஏன் உங்களுக்கு தெரியாதான்னு கேட்டேன். இல்லைங்க ஃபேஸ்புக்கு பார்த்துட்டுதான் வெங்காயம் விலையேறுனதே தெரியும் அதுல எவன் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு மென்சன் பாண்றான்னு சொன்னார்....(நடைமுறை இல்லாத அறிவு)
சமீபத்தில் யுவகிருஷ்ணா கம்ய்யூனிசம் கற்றுக் கொண்டாதாகவும் அமைப்பில் இல்லாதவர் சொல்லிக் கொடுப்பதால் எளிதில் விளங்குகிறது என்றும் ஃபேஸ்புக்கில் எழுதியதை நினைத்து பார்த்தேன்
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012
நிழற்ப்படம் !
செல் போன் கேமராக்களின் உபயத்தில் நினைத்த நேரத்தில் நமது புகைப்படத்தை எடுத்து நிமிட நேரத்தில் இணையம் மூலம் உலகெங்கும் பதிவேற்றுகிறோம்.புகைப்படம்
தனது புகைப்படம் எடுக்க வேண்டி கதையின் எழுத்தாளர் ஸ்டூடியோ ஒன்றிற்கு செல்கிறார்.அவரை ஒரு மணி நேரம் காக்க வைக்கும் புகைப்பட "நிபுணர்" பின்பு அவரை அதிகார தோரணையில் உள்ளே அழைக்கிறார்.அமர்ந்ததும் போடோக்ராபர் சொல்லும் முதல் வார்த்தை,
"உங்க மூஞ்சியே சரி இல்லையே " ;
பின்பு எழுத்தாளரை நெருங்கும் புகைப்படக்காரர் அவரது முகத்தை தனது இரு கரங்களுக்கு நடுவே பற்றுகிறார்.முத்தமிடப் போகிறாரோ என அஞ்சும் எழுத்தாளர் கண்களை மூடிக் கொள்ள,புகைப்படக்காரர் அவரது தலையை இந்த புறமும்,அந்தப் புறமுமாக சுழற்றுகிறார்.பின்பு கட்டளைகள் பறக்கின்றன :
உங்க தலை எனக்கு பிடிக்கல,
வாயை திறங்க கொஞ்சம்....சரி சரி வேணாம் வாயை மூடிக்கோங்க,
காது ஏன் இவ்ளோ மோசமா நீண்டுட்டு இருக்கு,கொஞ்சம் தலையை தொங்க விடுங்க,காதுங்க கீழ வர மாதிரி,
இப்ப கண்ண கொஞ்சம் உருட்டி பாருங்க...கையை முழங்காலுல வையுங்க,நல்லா இழுத்து மூச்சு விடனும்........ETC ETC ETC
ஆத்திரம் அடைந்த எழுத்தாளர் ஆவேசத்துடன் இது என் முகரை,இதோட தான் நான் நாற்ப்பது வருசமா வாழுறேன் என்று எல்லாம் கூறிக் கொண்டே எழ முயல
"க்ளிக்" .....புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டது.அடுத்த வாரம் தரப்படும்.
அடுத்த வாரம் புகைப்படத்தை வாங்கச் செல்கிறார் எழுத்தாளர்.புகைப்படம் மிக அழகாக எடுக்கப்பட்டு இருந்தது.ஆனால் புருவங்கள்,கண்,காது,உதடுகள
"நான் எதிர்ப்பார்த்து வந்தது எனது புகைப்படத்தை.நான் இறந்த பின் என் குடும்பத்தினரும்,நண்பர்களு
# என் பேஸ்புக் தோழி விஜய லட்சுமியின் பேஸ்புக் பக்கத்திலிருந்து
ஞாயிறு, 1 ஜூலை, 2012
ஜனநாயகம் இது முதலாளித்துவ ஜனநாயகம்…
இது முதலாளிகளின் இலாப நலனுக்காக முதலாளிகளுக்காக இருக்கும் ஜனநாயகம் என்பதை நீரூபித்து இருக்கிரது சமீபத்தில் கல்வி தனியார்மயம் ஆவதை எதிர்த்து டிபிஐ அலுவலகத்தை முற்றுகை இட்ட மாணவர்களின் மீதான காவல்துறையின் தாக்குதல். அதிலும் தற்ப்போது நடப்பது பாசிச காட்டாச்சி தடியையும் அடக்குமுறையும் அன்றி வேற்றென்ன எதிர்பார்க்க முடியும்.
அடக்குமுறைகளும் வரலாற்று தேவையே..
எனது கடந்தகால அனுபவங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்து இருக்கின்றன எப்போதும் போராட்ட காலங்களில் களங்களில் இதுபோன்ற அடக்கும்றைகள் மட்டுமே தாவரங்களுக்கு இடயே தாவரம் போலவே வளர்ந்திருக்கும் கலைகளை கலைய உதவும். ஆம் சமாதானக்காலங்களில் வாய் சொல்லில் வீரர்களாக இருந்த பலர் ஒடுக்குமுறை காலங்களில் அட்ரஸ்ஸே இல்லாமல் போனதையும் அடிபனிந்த கைப்பிள்ளைகளாக மாறியதையும் பார்த்துள்ளேன் எனவே போராளிகளையும் போராளிகளைப்போல காட்சியளித்து பொழுதை போக்குவோரயும் பிரித்தறிய அடக்குமுறைகள் எப்போதும் பயன்பட்டே வந்துள்ளது
வரலாறு எப்போதும் ஒரே திசையில் பயணிப்பது இல்லை.
’’பண்டைய கால வரலாற்றில் வல்லரசுகளாக விளங்கிய ஏமன் மற்றும் சிரியாவுக்கு இடையே இருந்த ஒரு சிறு நாடோடிக்கூட்டத்தின் தலைவன் இந்த இரு நாடுகளையும் நாம் ஒரு நாள் ஆளுவோம் என் றார் அதை எளனமாக பார்த்த கூட்டம் அப்படி அவர்கள் ஆண்டதையும் பார்க்க நேர்ந்தது என்பதே அரேபிய வரலாறு’’ சின்ன வயதில் அன்னை சொல்லிக்கொடுத்து வளர்த்த கதைகளில் கேட்டது
பதின் வய்துகளில் ஏரியாவில் இருந்த தோழர் அண்ணன் என ஏரியா பசங்களால் செல்லமாக அழைக்கப்பட்ட DYFI தோழர் நஸீர் சொல்லிய கதைகள்ளின் ஊடாக சொல்லித்தந்தார் அடிமை விலங்குகளை அடிமைகளே உடைத்தெரிந்ததன் குறிஉயீடே ஸ்பார்ட்டகாஸ் என்று
அதன் பிறகு விரும்பிப்படித்த ருஷ்ய வரலாறு காட்டியது கஞ்சிக்கு கஷ்ட்டப்படும் தொழிலாளி வர்கம் போராடி வென்றதே மக்கள் ஜனநாயகம் என்பதை.
எனவே வரலாறு தோறும் ஒடுக்கப்பட்ட மக்கள் வென்றுள்ளதே நிதர்சனம்.
விதைக்கும்
காலம் ஒன்று உண்டெண்றால் அறுவடைக்காலமும் இருந்தே தீரும் இப்போது
விதைத்திருக்கும் அடக்குமுறையாளர்களும் அறுவடை காலத்தை எதிர்பார்த்தே
ஆகவேண்டும்…
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)