திங்கள், 28 அக்டோபர், 2013

காவி ஃபால்ஸ் - கோயபல்ஸ்

சுதந்திர இந்தியாவின் ஆகப்பெரும் படுகொலை என்பதுமகாத்மாஎன அழைக்கப்ப காந்தியின் படுகொலைதான். இந்த மாபாதக செயலை செய்தவன் நாதுராம் கோட்சே எனப்படும் காவி பயங்கரவாதியாவான்.
இந்த கொலை பழியை முஸ்லீம் மக்கள் மீது போட்டு மிகப்பெரிய அளவில் படுகொலைகளை நிகழ்த்துவதே அவர்கள் திட்டமாக இருந்தது. ஒருவேளை இந்த கொலை செய்தவுடன் தனக்கு ஏதும் நேர்ந்துவிட்டால் அப்பட்டமாக இந்த கொலை பழி முஸ்லீம் மக்கள் மீது விழட்டும் எனும் நோக்கோடுதான் இவன் தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியும் (பச்சை குத்துவது இஸ்லாமிய அடிப்படியில் தவறு ஆனால் பொது புத்தி இதை சிந்திக்காது என்பதை அறிந்திருக்கிறார்கள்)சுன்னத் செய்து கொண்டும் இந்த படுகொலையை செய்தான். அதை தொடர்ந்து நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது.அதன் பிறகு வானொலியில்இந்த கொலையை செய்தது முஸ்லீம் அல்லஎன அறிக்கை வந்த பிறகே வன்முறை கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது.

இந்த சங்க பரிவாரங்களின் கொள்கையே இதுதான் "HATE POLICY" எனும் வெறுக்க கற்றுக்கொடுக்கும் கொள்கைதான். ஒரு முறை கேரளாவில் முன்னர் ஆர்.எஸ்.எஸில் இருந்து பின்னர் மனம் மாறி D.Y.F.I எனும் சி.பி.எம் கட்சியில் பணியாற்றும் நபர் ஒருவரை பயணித்தில் சந்திக்க நேர்ந்தது அப்போது அவர் சொன்னார். “நான் இயக்கத்தில் இருக்கும் போது என் பகுதியில் என்னை தவிர யாரும் சங்கத்தில் இல்லை ஆயினும் ஏராளமான வாள்,கத்தி போன்ற ஆயுதங்கள் எனது வீட்டில் இருக்கும் அதையெல்லாம் பயன்படுத்த சங்கத்தில் இல்லாத ஆட்க்களே போதும் ஆம் நாங்கள் எங்கள் உறுப்பினராக இல்லாதவர்களையும் எங்கள் ஆயுதங்களை தூக்க வைக்க முடியும். ஏனென்றால் முஸ்லீம்கள் மீது தொடர்ந்து பயன்படுத்தப்படும் அவதூறுகளின் வாயிலாகவும் அவர்களே நேரடியாக ஈடுபடும் சில சம்பவங்களின் வாயிலாகவும் அவர்கள் மீதான ஒரு பொது புத்தியை கட்டமைக்க முடியும் அவ்வாறு செய்த பின் எங்கேனும் வெடிக்கும் குண்டுக்கான வெறுப்பை இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பி விட்டு உணர்ச்சிப்பிளம்பாக நிற்க்கும் மக்களின் பார்வையில் ஆயுதங்களை வைத்தால் போதும் ஆக வேண்டியதை அவர்கள் பார்த்துக் கொ(ல்)ள்வார்கள்
என்றார்.
ஆம் பிர்லா மாளிகை துவங்கி திண்டுக்கல் வரை இவர்களின் பொய் பிரச்சாரமும், ஆயுதங்களும் இஸ்லாமிய மக்களை மிக நுட்ப்பமாக அழித்தொழித்து கொண்டுதான் வருகிறது. மதம் தலைக்கேரிய சில இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளும் தங்களது செயல்களால் இவர்களின் வேலையை சுலபமாக்கியே வருகின்றனர்.
அப்படி மனம் முழுவதும் மதமும் கர்வமும் ஏறிய சில இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் தான் கோவையில் 97 நவம்பர் மாதம் நடை பெற்ற இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ந்வம்பர் படுகொலைகளை எளிதில் சாதிக்க இயன்றது.
ஆம் சில இஸ்லாமிய அடிப்படைவாத வன்முறையாளர்களால் போக்குவரத்து காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதும், அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட பரிவாங்கள் கோவையில் நகர் முழுவதும் இஸ்லாமியர்களின் சொத்துகளை சூறையாடியும்,19க்கும் அதிகமான அப்பாவி இஸ்லாமியர்களை படுகொலை செய்தும் தனது பசியை ஓரளவு தீர்த்துக்கொண்டது.(இத்தனைக்கும் செல்வராஜின் கொலையாளிகளை அன்று இரவே காவலர்கள் வசம் ஒப்படைத்தது அந்த அமைப்பு)


இதோ இப்போது மேலும்சில பொய்களுடன் களம் இறங்கியுள்ளது காவி..! (கோயபல்ஸ் போல இது காவி ஃபால்ஸ்)
ஆனால் காந்தி கொலையின் போது வானொலியில் அறிவித்தது போல இஸ்லாமியர்கள் செய்யவில்லை என அறிவிக்க இப்போது நம்மிடம் ஊடகமில்லை எல்லாமே இப்போ அவா..! கண்ட்ரோலில் இருக்கு.
அதற்க்கான சான்றுதான் சமீபத்தில் கள்ளக்காதல் கொலைகளுக்கெல்லாம் முஸ்லீம் தீவிரவாத முலாம் பூசிய பத்திரிக்கைகளின் தார்மீக உணர்வு..!

இனியும் இஸ்லாமிய இளைஞர்கள் தங்களது அனுமதியின்றியே தங்களின் உணர்வுகளை தூண்டும் இது போன்ற பார்ப்பனிய செயல் திட்டத்துக்கு பலியாகாமல் இருக்க, தனி அடையாள அரசியல் தவிர்த்து... ஜனநாயக பூர்வமாக சிந்தித்து பொதுவான மக்களுக்காக இயங்கும் புரட்சிகர அமைப்புகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே சாத்தியம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக