சனி, 22 ஜூன், 2013

ஒரு வெங்காயத்தின் கதை...



வழியில் கிடக்கும் கல்லை அப்புறப்படுத்த வெறும் சிந்தனை மட்டுமே போதாது என்றார் மார்க்ஸிம் கார்க்கி அது போலதான் கம்யூனிசமும் நடமுறைக்கு செல்லாமல் வெறும் புத்தக அறிவை வைத்து கம்யூனிசத்தை ஒருவர் கற்றுக் கொண்டார் என்பதும் கற்றுக்கொடுத்தார் என்பதும் பொய்யாகவே இருக்கும். கம்யூனிசம் மட்டுமே அல்ல எந்த ஒரு விஷயமும் நடைமுறை அனுபவம் இன்றி புரிந்து கொள்ள முடியாது. அப்படி புரிந்து கொள்ள
 முடிந்தால் முப்பதே நாளில் கராத்தே கற்றுக் கொள்ளுங்கள் எனும் புத்தகமே போதும் கராத்தே கற்றுக் கொள்ள. ஆயினும் புத்தகத்தில் படித்து கரத்தே போட்டியில் கலந்து கொள்ளாத அறிவு ,ஒரே நாளில் கம்யூனிசம் படித்ததாக கூறி கம்யூனிஷ்ட்டுகளை விமர்சிக்க துணிகிறது ஏன் என சிந்திக்க வேண்டும். 
ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது என்பது ஒரு பழ மொழி சமீபத்தில் இதன் பொருளை நடைமுறையில் எனக்கு உணர்த்தினார் ஒரு ஃபேஸ்புக் போராளி, ஆம் பெரியவெங்காயம் நிறையா போட்டு ஆம்லேட் போட்டுக் கொடுத்தேன் அந்த நண்பருக்கு(நானே போட்டது) வெங்காயத்தை பார்த்தது அவர் “ என்னங்க பணக்காரன் ஆயிட்டீங்க போல” என்றார். ஏன் என்றேன் இல்லை வெங்காயம்தான் கிலோ 110ரூபாஇ ஆச்சேன்னார்.! இது பெரிய வெங்காயம்ஙன்னு சொன்னேன், கிளம்பும் போது அவர் சொன்னார் ஏங்க பெரிய வெங்காயம் விலை ஏறலையா? என்றார் இல்லைங்க ஏன் உங்களுக்கு தெரியாதான்னு கேட்டேன். இல்லைங்க ஃபேஸ்புக்கு பார்த்துட்டுதான் வெங்காயம் விலையேறுனதே தெரியும் அதுல எவன் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு மென்சன் பாண்றான்னு சொன்னார்....(நடைமுறை இல்லாத அறிவு)
சமீபத்தில் யுவகிருஷ்ணா கம்ய்யூனிசம் கற்றுக் கொண்டாதாகவும் அமைப்பில் இல்லாதவர் சொல்லிக் கொடுப்பதால் எளிதில் விளங்குகிறது என்றும் ஃபேஸ்புக்கில் எழுதியதை நினைத்து பார்த்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக