வெள்ளி, 25 அக்டோபர், 2013

ஷாஹித்.


ஷாஹித்” இந்த படம் ஏராளமான விஷயங்களை அப்பட்டமாக படம் பிடித்து காட்டி இருக்கிறது.
படம் துவங்கியதும் ஒரு அலுவலகத்தில் ஆஃபீஸ் பாய் ஒருவன் வேலை ஏதோ எடுத்துக்கொண்டு இருக்கிறான். திடீர் என துப்பாக்கி சுடும் சத்தம் கேக்கிறது, ஆஃபீஸ் பாய் ஓடிச் சென்று பார்க்கிறான் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடக்கிறான் ஷாஹீத்... அவர் ஒரு வழக்கறிஞர் என்பதையும் அது அவரின் அலுவலகம் என்பதையும் உணர்த்துகிறது காட்சி அமைப்புகள்.

பின்னர் காட்சி பழைய நினைவுகளில் பயணிக்கிறது...
மும்பையின் ஒரு இஸ்லாமிய மக்கள் குடியிருப்பு, ஷாஹித்துக்கும் அவர் சகோதர்களுக்கும் தாய் உணவு எடுத்து வைத்துக் கொண்டு இருக்கிறார்.
அப்போது கீழே ஏதோ சத்தம் கேட்டு பிறகு உண்டு கொள்கிறேன் என வெளியேறுகிறான் ஷாஹீத். தெருவெங்கும் நிசப்த்தம் நிலவி இருக்கிறது
திடீர் என ஒரு அலறல் சத்தம் அந்த திசையில் நோக்கும் போது ஒரு உருவம் எரிந்த நிலையில் ஓடி வருகிறது. அதற்க்கு பின்பாக சில காவி பயங்கரவாதிகள் கொலை வெறித் தாக்குதல் நடத்திக் கொண்டே வருகிறது.
அங்கிருந்து எப்படியோ தப்பி விடுகிறான் ஷாஹீத் (கோவை நவம்பர் படுகொலைகளை நேரில் இருந்து பார்த்தவர்களுக்கும் அனுபவித்தவர்களுக்கும் அப்படியே புரியும் இந்த காட்சியின் தன்மை)

சில காலம் கழிந்ததும் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பயிற்ச்சி பெருகிறான் ஷாஹீத். மனதில் மனிதம் மிச்சம் இருக்கும் எவருக்கும் எந்த வெறியும் பிடிக்காமல் போவது இயல்புதானே அங்கே நடக்கும் கொலைகளை கண்டும் மனம் வருந்தி அங்கிருந்து வெளியேறுகிறான் ஷாஹீத்.(இன்றைக்கும் தமிழகத்தின் ஏராளமான முன்னாள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக இருந்தவர்கள் இப்படி வெளியேறி பொதுத்தளத்தில் ஒட்டு மொத்த பிரச்சனைக்காக நிற்ப்பதை ஆதாரத்துடன் பட்டியல் இடமுடியும்)

இல்லம் திரும்பும் ஷாஹீத்துக்கு அண்ணன் ஆதாரவாக இருந்து உதவுகிறான். மேலே படிக்க துவங்குகிறான் ஷாஹீத். அந்த நேரம் பிடிபட்டுக் கொள்ளும் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ஷாஹீத்தின் மொபைல் எண் இருப்பதால் அவன் காவல்துறையால் ”பொடா” எனும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு பின் சிறையில் அடைக்கப்படுகிறான்.
அங்கே அவனுக்கு நல் வழிகாட்டி மத வெறிக்கு மாறான சிந்தனையை உறுவாக்கி படிக்கவும் ஊக்கம் அளிக்கிறார் இன்னொரு வழக்கில் அநியாயமாக மாட்டிக்கொண்ட ஒரு சமூக ஆர்வம் உள்ள கைதி.(எந்த சிறையிலும் நீங்கள் காணலாம் கிடைக்காத குற்றவாளிக்கு பதில் பலியாடான அப்பாவிகளை)

அந்த கைதியின் விடுதலைக்கு பின்னர் அவர் மேற்க்கொள்ளும் முயற்ச்சியால் சிறையில் இருந்து வெளியேறுகிறான் ஷாஹீத்.
அதன் பிறகு அண்ணனின் உதவியுடன் படித்து வழக்குறைஞர் ஆகிறான்.
தான் ஜூனியராக வேலை பார்க்கும் வழக்கறிஞர் உண்மைகளை கண்டடைவதே அதை உடைக்கவும்,வலைக்கவும்,திரிக்கவுமே எனும் தொழில் நியாயம் பேசுவதை பல ஆண்டுகாலம் எந்த குற்றமும் செய்யாமல் சிறை வாசம் அனுபவித்த ஷாஹீத்தால் ஏற்றுக்கொள்ள இயலாமல் வெளியேறுகிறார். (மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தில் எழுதி வைத்திருப்பாராம் “மொள்ளமாரி,முடிச்சவுக்கி,கிரிமினல்களுக்கு அனுமதியில்லை என்று)

அதன் பிறகு சொந்தமாக வழக்குகளை எடுத்து நடத்துகிறார். பல வழக்குகளில் வெற்றியும் ஈட்டுகிறார் குறிப்பாக  இஸ்லாமியன் எனும் ஒற்றை காரணத்துக்காக  எந்த தப்பும் செய்யாமல் புனையப்பட்ட பொய் வழக்குகளுக்கு இறையாகி  சிறைவாசம் அனுபவிக்கும் நபர்களின் வழக்குகளில் அதிக கவனம் எடுத்து கொண்டு வெற்றியும் பெறுகிறார்.
இதன் இடையே தன்னிடம் வழக்குக்கா வரும் ஒரு விவாகரத்தான குழந்தையுடைய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த திருமண விடயம் வீட்டுக்கு தெரிந்ததும் அம்மா ”அவளை அழைத்துவா நான் பார்க்கனும்” என்கிறார்.
கணவன் விட்டு சென்ற பின் தன் சொந்த காலில் வாழ பழகிய அந்த பெண்ணிடம் பர்தா கொடுத்து “இதை போட்டு வா அம்மாவ பார்க்க போகனும்” என்கிறான் அந்த பெண் அவ்வாறு செய்வது தன் சுயத்தை அழிப்பதாக இருப்பதாக சொல்கிறாள்.(பொருளாதார சுதந்திரம் அடந்த பெண்களை அவ்வளவு எளிதாக அடிமை முறைக்கு பழக்க படுத்த இயலாது என்பது உண்மைதானே) 
“இந்த ஒரே ஒரு முறை” என சமாதனாம் செய்து அவளை பர்தாவில் அழைத்து செல்கிறான்
ஷாஹீதின் தாய் “வீடு சின்னதாக இருப்பதால்தான் தன் மூத்த மகன் கல்யாணம் பற்றியே இன்னும் சிந்திக்கவில்லை” என்கிறார். (கோவை போன்ற பகுதிகளில் வ்றுமை கோட்டுக்கு கீழே இருக்கும் இஸ்லாமிய குடும்பங்கள் வாங்கும் வரதட்சனை பணம் பெரும்பாலும் போக்கியத்துக்கு வீடு போகவே பயன்படுகிறது)
எனவே பெரிய வீடு பார்க்க சொல்லி இருக்கேன் என்றதும் ஷாஹீதின் மனைவி “பிரச்சனையில்லை ஷாஹீத் என்னோடயே தங்க்கி கொள்ளட்டும்” என்கிறாள்.
இதன் நடுவே இஸ்லாமி தீவிரவாதிகளுக்கு வாதாடுகிறாயா உன்னை கொன்றுவிடுவோம் எனும் மிரட்டலும் அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது ஷாஹீத்திர்க்கு.
ஒரு கட்டத்தில் 26/11 மும்பை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வாதடி வரும் ஷாஹீத்தின் முகத்தில் கிரீஸை பூசி நீதி மன்ற வளாகத்திலேயே அவரை மிரட்டுகிறது காவிக்கும்மல்.
அந்த சம்பவத்தின் பிறகு தன் குழந்தைக்கும் தனக்குமான பாதுகாப்பு முக்கியம் என விளகி செல்கிறால் மனைவி. ஆனால் அப்படி சென்ற பின்னரும் ஷாஹீத்தின் செயல் சரியானது என்றும் அதுதான் நீ என்றும் அவனுக்கு துணிவு ஊட்டி ஊக்கமும் அளிக்கிறாள் மனைவி. அப்போது ஷாஹித் கேட்க்கிறான் “விலகி சென்றபின் இப்படி சொல்கிறாயே கூடவே இருந்திருக்கலாமே” என்று
மனைவியின் மறுமொழி “இல்லை என்னால் இயலாது என் இயல்பு இது” என்று (எனக்காக நீ மாறு என்று கட்டாயப்படுத்தி நுகரும் பண்டமா சக மனிதனை பார்க்காமல் இருப்பதுதானே காதல்)

நீதி மன்றத்திலும் வெளியிலும் ஏன் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்காக இவ்வளவு ஆர்வமா வாதாடுகிறீர்கள்..? எனும் கேள்விக்கு
தீவிரவாதத்துக்கு மதம் இல்லை ஒரு மனிதன் கொல்கிறான் இன்னொரு மனிதன் கொல்லப்படுகிறான் என்றும் நீங்கள் உங்கள் கடமையை முடிக்க அப்பாவிகளை வழக்கில் சிக்க வைத்து வழக்கை முடிக்கும் போது உண்மை குற்றவாளிகள் அடுத்த செயலுக்கான திட்டத்தை எங்கோ ஏ.சி ஆறையில் இருந்து செய்து கொண்டு இருக்க கூடும் என்றும் பதிலளிக்கிறார் ஷாஹித்.

இறுதியில் ஒரு நாள் மிரட்டல் விடுத்த காவிகலால் படுகொலை செய்யப்படுகிறார் ஷாஹித்.
மீண்டும் ஷாஹித் இறுதியாக வழக்காடிக்கொண்டு இருந்த நீதிமன்றத்தில் காட்சி விரிகிறது காலியாக இருப்பது போல காட்டப்படும்  ஷாஹித் முன்பு அமர்ந்திருந்த  நாற்க்காலியில் ஷாஹித்தின் அதே நியாயங்களை எடுத்து உரைத்துக் கொண்டு இருப்பான் ஷாஹித்தின் நண்பன் (ரங்கநாதன் என நினைக்கிறேன் அந்த பாத்திரத்தின் பெயர் மறந்துவிட்டது)
ஒரே வசனம் பின்னனியில் ஒலிக்க ஷஹித்தின் முகமும் நண்பனின் முகமும் மாறி மாறி காட்டப்படுகிறது....

மும்பையை சார்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான  ஷஹித் ஆஸ்மியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதே இந்த ஷாஹித் 

ஹன்சல் மேத்தா இயக்கத்தில் வெளி வந்திருக்கும் மற்றுமொரு படம்.
மிக அற்ப்புதமான படம்.

3 கருத்துகள்:

  1. பார்க்க வேண்டிய படம். அருமையாகவும் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    இந்தியில் அனுராக் காஷ்யப் போன்ற ஆட்கள் இருப்பதால், இப்படிப்பட்ட படங்கள் வெளிவரமுடிகிறது.

    பதிலளிநீக்கு
  2. ஆழமான படம் என்பது உங்கள் விமர்சனத்தில் வெளிப்படுகிறது
    பார்த்து விடுவோம்....

    பதிலளிநீக்கு