புதன், 2 மார்ச், 2011

ஊ........ழல்


ஊழல் இந்தவார்தையை பயன்படுத்தாத அரசியல்வாதிகலுமில்லை ஊழலை அனுபவிக்காத அரசியல்வாதிகலுமில்லை. இது எளிதாக எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடிகிறது . நாம் கவனிக்க தவறிய அல்லது முதலாளித்துவ ஊடகங்கள் திட்டமிட்டே மூடி மறைக்கும் மற்றொரு விஷயம் இருக்கிறது . அதாவது இந்த ஊழலால் அதிகமாக ஆதாயம் அடைவோர் யார் அல்லது இதுபோன்ற ஊழல்கள் யாருடைய நலன்சார்ந்து நடத்தப்படுகிறது என்பதே அந்த மறைக்கப்படும் உண்மை. அதிகார மாற்றம்(போலி சுதந்திரம்) நடந்துமுடிந்த பின்பு இந்தியாவில் நடந்த முதல் ஊழல் முந்த்ரா ஊழல். இதன் சாரம் என்ன முந்த்ரா எனும் ஒரு முதலாளியின் நலனுக்காக நடத்தப்பட்டதே இந்த ஊழல். நேருவின் மந்திரிசபையில் இருந்த T.T .K கிருஷ்ணமாச்சாரி என்பவரால் நடத்தப்பட்ட ஊழல் . அந்த ஊழலின் மதிப்பு ஒன்றேகால் கோடி . இந்த ஊழல் வெளியே வந்ததும் வெட்க்கித்தலைகுனிவதாக அறிவித்தார் அன்றைய பிரதமர் நேரு. அன்று அவர் அறிவிப்பிலாவது வெட்கித்தலைகுனிந்தார் இன்றோ ஊழலை கூட பகிரங்கமாக ஆதரித்து அதற்க்கு வக்காலத்து வாங்கிகிறார்கள் தலைவர்கள். இதெர்க்கெல்லாம் என்ன காரணம். மக்களாகிய நமது மௌனமே அவர்களுக்கு நாம் வழங்கும் சம்மதமாக அவர்கள் கருதிக்கொண்டதே உண்மையான காரணம். ஒன்னேகால் கோடியில் துவங்கிய முந்த்ரா ஊழல் படிப்படியாக வளர்ந்து இன்றைய ஸ்பெக்ட்ரம் 1 ,70 ,000 கோடியை தொட்டது எப்படி. ஒவ்வொரு ஆட்சியிலும் ஒரு வரலாறு காணாத ஊழல். முந்த்ரா ஊழல் தொடங்கி ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை பலனடைந்ததும் ஊழல் அம்பலப்படுத்தியதும் முதலாளிகளே . தனக்கு கிடைக்காத சலுகைகள் தன் சக போட்டியாளருக்கு கிடைப்பதால் எழுந்த ஆத்திரமே வயிற்ரெரிச்சலே இந்த ஊழல்கள் அம்பலமாவதர்க்கு காரணமாகிறது. பின் இந்த ஆட்சியின் வரலாறு காணாத ஊழலை தேர்தலுக்கு பயன்படுத்தி தனக்கு தோதான ஆட்களையும் ஆட்சியையும் கொண்டுவந்து தனக்கான ஆதாய நலன்களை அரசின் திட்டமாகவே நிறைவேற்றிவிடுவது. நாமும் ஒவ்வொருமுறையும் இவர்களால் ஊழல் வரலாறு மாற்றப்ப்படும்பொழுது இதற்க்கு முந்தய ஊழலே பரவாஇல்லை எனவே அவர்களுக்கே வாக்களிப்போம் என்று இருந்துவிடுகிறோம் .இவர்களுக்கும் மக்களை பற்றி என்ன எண்ணம் இருக்கு . எனவே ஒவ்வொருமுறையும் நமது மௌனம் மட்டுமே நமெக்கெதிரான ஆயுதமாக நமேக்கே பயன்படுத்தப்படுகிறது . எல்லா அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு முறையும் ஊழலுக்கு எதிராக நம்மை அணிதிரள சொல்லி மாற்று கட்சிக்கு அதாவது சென்றமுறை ஊழல் புரிந்தவர்களுக்கு வாக்களிக்க பாதை காட்டுகின்றனர். மாறாக இம்முறை நாம் நம் மௌனங்களை உடைத்தெறிந்துவிட்டு அணிதிரள்வோம் இந்த ஊழலுக்கு எதிராக. எப்படி மீண்டும் ஒரு ஊழல்வாதியை தேர்ந்தெடுப்பதர்க்காக அல்லாமல் ஊழல் நம்மிடமிருந்து ஆட்டயப்போட்ட சொத்துக்களை பறித்தெடுப்போம் எனும் முழக்கத்தை எந்த அரசியல் கட்சி முன்வைக்குமோ அந்த அரசியல் கட்சியுடன் . அணிதிரள்வோம் பறித்தெடுப்போம்.
முந்த்ரா முதல் ஸ்பெக்ட்ரம் வரை நடந்த அனைத்து ஊழல்களும் உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள் என சொல்லிக்கொள்ளும் அம்பானி போன்ற முதலாளிகளின் திட்டப்படியே நடந்ததாகும். அம்பானி, நுஸ்லிவாடியா , டாட்ட , போன்ற பெரும் முதலாளி (பணமுதலைகளின்) வியாபார போட்டியே இந்த ஊழல்கள் அம்பலமாக காரணமுமாகும்.
முதலாளிகளின் நலன் சார்ந்தே ஊழல்கல் நடத்தப்படுகிறது என்பதை அறிய இந்த சுட்டியை பார்க்கவும்

http://www.vinavu.com/2011/01/06/the-telecom-scam/
http://www.vinavu.com/2011/01/04/a-spectrum-of-corporate-criminals/

புதன், 23 பிப்ரவரி, 2011

மன்னித்துவிடுங்கள் முத்துக்குமாரர்களே.......


ஹாஸ்னி முபாரக் என்ற ஆட்சியாளனின் கொடுமை தாங்கமுடியாமல் நான்கு இளைஞர்கள் தங்கள் உடலுக்கு தீ வைத்து எரிந்து போனார்கள் எகிப்த்தில்
அந்த நெருப்பின் அரசியல் வெப்பத்தை உள்வாங்கி அதை அந்த தேசம் முழுதும் விதைத்தால் அஸ்மா மக்பூல் எனும் 26 வயது பெண். தன் தேசம் மாற்றம் காண ஏதாவது செய்யவேண்டும் என நினைத்த அவள் தன் பேஸ் புக்கில் ஒரு ஸ்டேடஸ் போட்டால் "தீக்குளித்த நான்கு இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்த தஹ்ரீக் சதுக்கத்துக்கு நான் செல்ல இருக்கிறேன் என்னைப்போல சிந்தனையுடைய  எவரும் வரலாம்" என்பதே அந்த ஸ்டேடஸ். இந்த  ஸ்டேடஸ் பார்த்து மூன்று இளைஞர்கள்தான் வந்திருந்தனாறாம் கூடவே காவல்துறையும். காவல்துறை அவர்களை கைது செய்து விசாரணை நடத்திவிட்டு எச்சரித்து அனுப்பியது.
திரும்பி வந்த அஸ்மா அச்சமடையவில்லை.அமைதியாகிவிடவில்லை. இம்முறை பேஸ் புக்கில் அவளே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டாள். அதில் "தங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால் இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் ஜனவரி 25 ஆம் தேதி நாம் போராட்டத்தில் குதிக்கவேண்டும் அன்று யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் தனியாக செல்வேன். தீ குளிப்பதற்காக அல்ல என்னை சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை நீங்கள் உங்களை ஆணாக கருதினால் வாருங்கள்" என்று ஆவேசமாகவும் "அல்லாஹுவை தவிர வேறு எந்த சக்த்திக்கும் அஞ்சாதீர்கள்" என நம்பிக்கையூட்டும் விதமாகவும் பேசியிருந்தால் .
ஜனவரி 26 ல் தேசத்தின் எல்லா திசைகளிலிருந்தும் தஹ்ரீக் சதுக்கத்தை தேடிவந்தனர் மக்கள்.
மக்கள் ஆம் மக்கள் மக்கள் மட்டுமே மாற்றத்தின் உந்து சக்தி என்று மாவோ சொன்னதை நிறைவேற்றிவிட்டே கலைந்து சென்றது அந்த மக்கள் கூட்டம் . ஊழல் ஒழியட்டும், குடும்ப ஆதிக்கம் முடியட்டும், முபாரக் பதவி விலகட்டும் என்பதற்கு மாற்றாக எந்தவித சமரச முயற்சிகளும் அந்த மக்கள் முன் எடுபடவேயில்லை.
முத்துக்குமரா அந்த எகிப்திய இளைஞர்கள் உன்போல ஆழமான மரணசாசனத்தையோ. அல்லது சடலத்தையே ஆயுதமாக்க நீ வழிகாட்டியதுபோலவோ ஒன்றும் செய்ததாக தெரியவில்லை. எனினும் அவன் விட்டுசென்ற நெருப்பு ஆட்சியாளர்களை பொசுக்கியது. இங்கு ஏன் அப்படி ஒரு நிலை வரவில்லை புவியியல்,நம்நாட்டின் வர்கத்தன்மை என்ற ஆராய்ச்சிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி எங்களுக்கு தெரியவருவதேல்லாம். ஒன்றே ஒன்றுதான் எகிப்து மக்களுக்கு எம்மக்கள் போன்று வாய்ஜாலம், வார்த்தை ஜாலம், உள்ள தன்னால தலைவர்கள் இல்லை என்பதே அங்கே மக்கள் தங்களை நம்பி வீதிக்குவந்தனர். இங்கோ ஓட்டுக்கு ஆதாயம் தேடும் தலைவர்களை நம்பியும் அவர்களின் சொல்லை நம்பியும் வீதிக்கு வருபவர்களாகவே இருக்கிறோம். உனது விசயத்தில் கூட உனது மரணசாசனத்தை மாணவர்களிடமும், மக்களிடமும் கொடுத்து இதுதான் இவனது இருதியாசை இனி ஆகவேண்டியதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லியிருந்தால் நிலைமாறியிருக்கும். மாறாக தலைவர்களிடம் சிக்குண்டு அனைபோடப்பட்டது உனது போராட்டம். இவ்வளவுக்கு பிறகும் தங்கள் தேர்தல் நலனுக்காக தலைவர்கள் தாங்கி பிடிக்கின்றனர் உனது புகைப்படத்தை. ஈழப் படுகொலைக்காக இரட்டைலைக்கு ஓட்டு கேட்ப்போரே தர்மபுரியில் நெருப்பில் மாண்டுபோன மாணவிகள் உன் உறவுகள் இல்லையா என நீ கேள்வி எழுப்புவது புரிகிறது. கொஞ்சம் அவகாசம் கொடு அதற்கும் பதில் தருவார்கள் தங்கள் வார்த்தை ஜாலத்தால். எங்கள் ரசிக குஞ்சுகள் அதற்கும் விசிலடிக்கும்.
எகிப்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் சாத்தியப்படும் . அதற்குள்ளாகவே உங்களுக்கான அடைக்கல தேசத்தை தேர்வு செய்துவைத்துக்கொள்ளுங்கள்.             .            

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தேர்தல் வந்து தீர்ந்தது என்ன ?


தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது டீக்கடை, பேருந்து, பேஸ் புக், வலைப்பூக்கள் எங்கும் விவாதங்களும் யார் ஜெயிக்கப்போவது என்ற ஆரூடங்களும் பார்க்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருகிறது . டீ கடை விவாதத்திற்கும் பேஸ் புக் விவாதத்திற்கும் வித்யாசம் ஒன்றே டீ கடையில் விவாதிப்போர் அம்மா ஆட்சி வந்தா பணப்புழக்கம் உண்டாகும் வறுமை குறையும்கிறான் பேஸ் பூக்ல விவாதிப்போர் அம்மா ஆட்சி வந்தா மீனவர் துயர் தீரும்கிறான் .இங்கே ஜெயிப்பது யாராக இருந்தாலும் தோற்ப்பது நிச்சியம் மக்களாகிய நாமே. தமிழ் தேசியவாதிகளோ BJP வந்தாலும் பரவாஇல்லை காங்கிரஸ் வரவே கூடாது என்கிறார்கள் துரோகிக்கு எதிரியே மேல் என்று விளக்கம் சொல்லப்படுகிறது எனவே இரண்டுமே மக்களுக்கானதில்லை என்பதை இவர்களே மறுக்கவில்லை.இசுலாமியர்களோ காங்கிரஸ் வந்தாலும் பரவாஇல்லை BJP வரவே கூடாது என்கின்றனர் (காங்கிரசையும் BJP யையும் இங்கே தமிழகத்தில் திமுக ,ஆதிமுக கூட்டணி அடிப்படயில் பார்க்கின்றனர்) ஆனால் இந்த இரு கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு என்பதே காவியும் கதரும் தான் என்பதே உண்மை. BJP ஈழத்தில் துரோகமிழைத்துள்ளது காங்கிரசும் முஸ்லீம்களுக்கு துரோகமிழைத்துள்ளது (பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதே இவர்கள் ஆட்சியில்தான்). எனவே எதுவும் ஆளுபவரை பொருத்தல்ல ஆட்சிமுறையை பொறுத்தே. நாடகம் என்னவோ பழசுதான். நடிகர்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றனர். சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்ற கற்பனை ஒரு அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட போதும்கூட இந்த நாடகம் மக்களிடம் செல்லுபடியாகிக் கொண்டே இருக்கிறது. மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய அறியாமை நடிகர்களை புதுப்புது வேடம்கட்ட தூண்டிக்கொண்டே இருக்கிறது. இந்த அறியாமைல் மாட்டிக்கொண்ட நடுத்துதர வர்க்கமோ தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்றும் அதை அலட்சியம் செய்வது தேசவிரோதம் என்றும் சாடுகின்றனர் தேசமே இல்ல எங்கபோய் தேசவிரோதம்? நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளோ?!?! கட்சியை பார்க்காதீர்கள் வேட்ப்பாளரை பாருங்கள் என்று தங்கள்பங்குக்கு தேசப்பற்றை பறைசாட்டுகின்றனர் இவர்கள்மட்டுமா புரட்சியாளர்களின் புகைப்படங்களை மூலதனமாகக்கொண்டு கட்சி நடத்தும் பாராளுமன்ற புரட்சிக்கட்சியின் தலைவரும் கூட ஸ்பெக்ட்ரம் ஊழல் குழப்பம் குழாய்அடி சண்டை பாராளுமன்றத்தில் நடந்தபொழுது இதையே இப்படி சொன்னார் "நாம் நமக்குள் சண்டை இட்டுக்கொல்லாமல் பாராளுமன்றத்தை காக்கவேண்டும்" என்று . ஆனால் உண்மை என்ன கட்சியை பார்க்காமல் வேட்ப்பாளரை மட்டுமே பார்த்து என்னபயன் என்பதை சற்று அறிவுப்பூர்வமாக அவர்கள் நமக்கு விளக்கினால் தேவலை . முதலில் நம் பாராளுமன்றம் உருவானவிதமே ஆங்கிலேயரின்  கிழக்கிந்திய கம்பனியின் நலனுக்கானதுதனே .பிறகு மக்களின் போராட்டங்கள் வலுவடைவதை கண்டே பாராளுமன்றத்தில் எதிரகட்சிமுறையை கொண்டுவந்தார்கள் அதற்காக ஆக்டேவியஸ் ஹுயும் என்பவனால் உருவாக்கப்பட்டதே இன்று நம்மை ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி. அதன் பிறகு உலக வரலாற்றில் நிகழ்ந்த மாற்றங்களால் இந்தியாவைவிட்டு வாசல் வழி வெளியேறி பொடக்கால (கொள்ளிப்புரம்)வழிய நம்மை இன்றும் ஆள்வது இதுபோன்ற கம்பனிகளே. உதாரணமாக காட் ஒப்பந்தம் நாம் கட்சியை பாராமல் என்னதான் நல்லவனை தேர்ந்தெடுத்து அனுப்பினாலும் அவனால் பாராளுமன்றத்தில் பன்னாட்டுக்கம்பானிகளை பற்றிய கேள்விகளை அங்கே முன்வைக்கமுடியாது(இது காட் ஒப்பந்தத்தில் உள்ளது). அப்புறம் தமிழர் பிரச்சனை அதற்கும் இந்த கொள்கைகளே காரணம் ஈழ தோல்விக்கு காரணம் அந்தோணி அப்படின்னு சொல்லிட்டு வந்தோம் இப்போ என்ன நிலைமை அந்தோணிக்கு பதில் நம்ம தமிழன் ப.சிதம்பரம் சட்டீஸ்கர்ல மக்கள் கொல்லப்படுகிறார்கள் இது யாருடைய நலனுக்கு நடந்ததோ அதே நலனுக்குத்தான் ஈழமும் பலிகொள்ளப்பட்டது.அவ்வாறின்றி ஈழத்திற்கு மலையாளிகளையும் ஹிந்திக்காரர்களையும் குறை கூறினால் நமக்கு உடன்பாடில்லாமலே சிதம்பரம் நடத்தும் படுகொலைகளுக்கு தமிழர்களை குறைகூருவதுபோலாகும் . ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் கூட யாருடைய நன்மைக்கானது என்பதை நம்முடைய ஊடகங்கள் சொல்வதேயில்லை ஆ.ராசாவுக்கு பதில் நாளை அதே இடத்தில் ஹெச்.ராசா வரலாம் அனாலும் இந்த ஊழல் இதே வர்க்க நலனுக்கு வேறுவடிவில் நடந்தே தீரும் . நாம் போடாட்டி நம்ம வாக்க வேறொருத்தன் போட்டுருவான் என்னும் அறிவார்ந்த வாதங்கள் வைக்கிறார்கள் சிலர் நம் வாழ்வையே திருடிவிட்டவர்கள் நம் வாக்கை திருடுவது பற்றி நமக்கென்ன அக்கறை வேண்டிக்கிடக்கு. இறுதியாக தேர்தல் புறக்கணிப்பு என்பது வன்முறையல்ல ஜனநாயகத்தில் அதற்கும் இடமுண்டு (குடும்ப அடையாள அட்டை திருப்பிக்கொடுப்பது தேர்தல் புறக்கணிப்பு போன்ற எல்லா போராட்ட வடிவங்களும் நம் நாட்டிலேயே நடந்துள்ளது இதற்க்கு முன்பும்) எனவே தமிழர் இசுலாமியர் என்பதல்ல பிரச்சனை எந்த வர்க்கம் என்பதே பிரச்சனை எனவே உழைக்கும் வர்க்கமாக ஒரு மாற்றத்தை முன்னெடுப்போம் உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைவோம்

புதன், 22 டிசம்பர், 2010

கீழ்வானம் சிவக்குது

உழைக்கும் மக்களின் தன்மான உணர்வு எத்தகையது என்பதற்கு உலக வங்கியில் இந்திய வாங்கியுள்ள கடனுக்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா 3500 ரூபாய்க்கு மேல் கடன் உண்டென்பதரிந்து அந்த தொகையை நாட்டு பிரதமருக்கு மணி ஆர்டர் எடுத்து அனுப்பிய திருச்சி கைவண்டி இழுக்கும் தொழிலாளியின் செயல் ஒன்றே சான்றாகும். மேலும் இனிமேல் இதுபோல் கடன் வாங்க வேண்டாம் என்றும் அப்படி வாங்கும் முன் தன்னிடம் கேட்டுவிடுமாரும் கடிதம் போட்டிருந்தாராம். இந்த பத்திரிகை செய்தியை படித்து விட்டு அந்த தொழிலாளியின் அறியாமையை எள்ளி நகையாடினர் மேட்டுக் குடி நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள். அந்த தொழிலாளியின் தன்மான உணர்வை அறிவு(!)ஜீவிகளுக்கு எடுத்து சொல்லி விளக்கியதும் மன்னிப்புக்கேட்டு விலகிக்கொண்டனர். இங்கே விஷயம் அதுவல்ல இப்பேர்ப்பட்ட தன்மையும் தன்மான உணர்வும் கொண்டது உழைக்கும் மக்களின் மனநிலை. இப்படி பட்ட மக்களையும் அவர்களின் மன நிலையையும் இதுவரை காயடித்து வந்த தொழிற்சங்கங்களுக்கு காயடித்துள்ளனர் கோவை NTC (பஞ்சாலை) தொழிலாளர்கள். கோவை நகரை உருவாக்கியதில் கோவையில் இருக்கும் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு முக்கிய பங்குண்டு இன்று இங்கே செயல் பட்டுக்கொண்டிருக்கும் கல்வி நிறுவங்கள், மருத்துவமனைகள் எல்லாமே பஞ்சாலை முதலாளிகள் பஞ்சாலையில் இருந்து பெற்ற இலாபத்தில் கட்டியதே. அதேபோல போராட்ட குணத்திலும் இந்த பஞ்சாலை தொழிலாளர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு ஸ்டேன்ஸ் மில் போராட்டமும் சின்னியம் பாளையம் தியாகிகளின் உயிர் தியாகமும் பறைசாற்றுகிறது எனினும் இப்படிப் பட்ட உழைக்கும் மக்களைத்தான் கடந்த காலங்களில் அனைத்து ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கமும் மடைமாற்றி ஏய்த்து வந்தன அவர்கள் தொழிலாளிகளின் போராட்ட குணத்தை மாற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுத்ததெல்லாம் நாமம் போராட்டம், கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டம் போன்றவைகளையே. இது போன்ற சூழலில் தான் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி கோவையில் செயல்படத்தொடங்கி கோவையில் உள்ள SRI எனும் நிறுவனத்தில் மிகப்பெரும் அடக்குமுறைகளை எல்லாம் சந்தித்து தன் போராட்ட குணத்தால் பல்வேறு சலுகைகளை தொழிலளர்களுக்கு பெற்றுத்தந்தது இதை பார்த்து பல்வேறு ஆலைகளில் பு ஜ தொ மு வின் கிளைகள் கட்ட தொழிலாளர்கள் ஆர்வப்பட்டு கோவையில் சில நிறுவனகளில் கிளைகளும் கட்டப்பட்டு தொழிலார்களுக்காகவே இயங்கிவருகிறது. இந்த சூழலில் தான் இதுவரை தேர்தலே நடக்காமல் இருந்த NTC மில்களில் தேர்தல் நடத்தவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கிட்டு வெற்றி கண்டது பு.ஜ.தொ.மு.வுடன் இணைக்கப்பட்ட கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கம சங்க பிரதிநிதிகளின் அயராத உழைப்பாலும் அவர்களின் எளிமையாலும் எளிதாகவே தொழிலாளர்கள் அவர்களை நோக்கி வருவது கண்டு பயந்த துரோக சங்கங்கள் பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் பொய் பிரச்சாரங்களையும் செய்து பார்த்தும் தேர்தலில் தொழிலாளர்கள் பெருவாரியாக வாக்களித்து சங்கத்தை இரண்டாம் இடத்தில் கொண்டுவந்தனர் சங்க கிளையே இல்லாத இடத்தில் கூட தொழிலாளர்கள் வாக்களித்துள்ளனர் கோவை பாட்டாளிகளின் வரலாறு மீண்டு(ம்) எழுதப்படுகிறது கீழ்வானம் சிவந்து விட்டது இனி பழைய விலங்குகளை கழட்டிவிட்டு புதிய சிறகுகளுடன் பறக்கலாம் வாழ்த்துக்கள்

வெள்ளி, 22 அக்டோபர், 2010

காவல் துறையை புரிந்துகொள்ளுங்கள்

செப்டம்பர் 15 முதல் ஆந்திர மாநில காவல்துறை ஒரு கண்காட்சி நடத்தியுள்ளது
கண்காட்சியின் தலைப்பு "காவல் துறையை புரிந்துகொள்ளுங்கள்"
புரிந்து கொள்ளுங்கள் என்பதை நாம் எப்படி உச்சரிக்கிறோமோ அதற்க்கேற்றார்போல் அர்த்தமும் மாறும்
உண்மையில் அரசாங்கம் உத்தேசித்த அர்த்தம் என்ன என்று தெரியவில்லை
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு போலிசை பற்றி புரியவைக்கும் நிகழ்ச்சியும் நடத்தியுள்ளனர் பொறுப்புள்ள போலீஸ்காரர்கள் அதன்படி கடந்த 20 10 2010 அன்று மாணவர்கள் அந்த கண்காட்சியை சுற்றிப்பார்த்து வந்துள்ளனர் அவ்வாறு பார்த்துக்கொண்டே வந்த பள்ளி மாணவர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் stun gun எனும் வகைப்பட்ட இயந்திர துப்பாக்கியை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஒரு காவலர் அது செயல்படும் விதம் குறித்து செயல் முறை விளக்கம் செய்து காண்பித்துள்ளார் அதிலிருந்து தோட்டாக்கள் பாய்ந்து 2 மாணவர்கள் மரணித்துள்ளனர் எவ்வளவு அலட்சியம் இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பள்ளி மாணவர்கள் நிச்சயம் காவல்துறையை புரிந்துகொண்டிருப்பார்கள் காரணம் ரத்தமும் சத்யுமாக அந்த நிமிடம்வரை அவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சக மாணவர்களை கொண்டல்லவா நீங்கள் அவர்களுக்கு செயல்வழிக் கல்வி போதித்தீர் (உங்கள் ஆற்றலை காட்டவா எங்கள் மழலைகளை கொன்று போட்டீர்) எனவே உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டது
இந்த சம்பவத்திற்கு காரணமான போலீஸ்காரர் வெறும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அவளாவே இப்போது ஆந்திர மக்கள் உங்களை புரிந்துக்கொள்ள அவசரகதியில் ஒரு கண்காட்சி தேவைப்படுவதன் அவசியம் என்ன? அதன் அரசியல் உள்நோக்கம் என்ன? ஆந்திர மக்கள் மட்டுமல்ல காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் அரங்கேற்றிக்கொண்டுதான் இருக்கிறீர்கள் கண்காட்சிகளை நாங்களும் உங்களை புரிந்து கொண்டுதான் இருக்கிறோம்

வியாழன், 14 அக்டோபர், 2010

பாலஸ்தீன்,காஷ்மீர் தமிழக முஸ்லீம்கள்





இன்று இந்த கட்டுரை பதிவேரிக்கொண்டிருக்கும் நேரத்தில் கூட பல சிறுவர்கள்,பெண்கள்,இளைஞர்கள் கல்லெறிந்து கொண்டிருக்கலாம் தங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் ராணுவங்களுக்கு எதிராக. அந்த உணர்வுக்கும் நெஞ்சுரிதிக்கும் ஒரு வீர வணக்கம். இந்த போராட்டத்தில் அவர்கள் வெற்றிபெற புரச்சிகர வாழ்த்துக்கள்.
பாலஸ்தீனிலும் காஷ்மீரிலும் ஏதோ முஸ்லீம் மத அடிப்படை வாதத்துக்காகதான் போராடுகின்றனர் என்பது போன்ற ஒரு மாயை இங்குள்ள முஸ்லீம்களிடையே நிலவுவதையும் அதை இசுலாமிய தலைமைகள் அப்படியே ஊட்டி வளர்ப்பதையும் காண்கிறேன்.
காஷ்மீரை பொறுத்தவரை இதுபோன்ற இசுலாமியர்களின் சிந்தனையை வைத்து அங்கு உண்மையிலேயே ஒரு மத மோதல் தான் நடந்துகொண்டிருக்கிறது என்று இந்துத்துவ சக்திகள் தங்கள் ஊடகங்கள்(இதற்க்கு உதாரணமாக நிறைய சினிமா மற்றும் செய்திகள் உள்ளன அத்தனையும் இட இடம்பத்தாது) மூலம் நிலை நிறுத்துகிறது அதில் வெற்றியும் பெற்றுள்ளது
என் 26 வயதுவரை நானும் பாலஸ்தீன விடுதலைபோரை ஒரு தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்த்திருந்தேன் பின் ஒரு முறை லைலா ஹலேத் (laila khaled )எனும் ஒரு ஆவணப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதை பார்த்த பிறகே பாலஸ்தீன் பற்றிய என் மதிப்பீடுகள் முழுதும் தவறானதே என் சமூகத்தின் தலைமை பீடத்தில் உள்ளவர்களும் எங்களுக்கு இந்த உண்மையை சொல்லாமல் மறைக்கின்றனர் என்றும் மறைப்பதன் அரசியலும் விளங்கியது.
இனி அந்த ஆவணப்படம் பற்றி;
ஆவணப்படம் லைலா ஹலேத் என்ற ஒரு போராளி பெண்மணியை பற்றியது.
அந்த பெண்தான் வரலாற்றில் முதல் முறை ஆகாய விமானத்தை கடத்தியவர் அதுவும் இருமுறை (இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் எகிப்ப்தில்) அந்த பெண் ஒரு நாத்திகவாதி (இறை மறுப்பாளர்) மேலும் அவர் சார்ந்திருக்கும் அமைப்பு தோழர்(ஆண்)அவருடன் கைகுலுக்கிறார் நீண்ட இடைவெளிக்குப்பின் அவரை சந்திக்கும் தோழர் பாசப்பூரிப்புடன் அவரை ஆரத்தழுவிக்கொள்கிறார் கன்னத்தில் முத்தமிடுகிறார் பின் ஹலேடிடம் கேட்ப்பார் இப்பவும் நி தொழுகாம்தான் இருக்கியா என்பர் ஹலேத் சற்றும் யோசிக்காமல் இல்லையென்பார் அந்த ஆவணப்பட இயக்குனர் அவரிடம் கேட்க்கும் கேள்விக்கெல்லாம் அற்ப்புதமாக பதிலளித்துக்கொண்டே வருகிறார் ஒரு இடத்தில் சிறுவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் அப்போது இயக்குனர் ஹலேத் இடம் சிறுவர்கள் போரிடுவது தவறில்லையா என வினவுவார் அதற்கவர் அவர்கள் சிறுவர்களையும்தான் கொள்கின்றனர் என பதிலளிப்பார்
பின் இருவரும் வீதியில் நடந்துவரும்பொழுது சில சிறுவர்கள் ஒரு ஹெலிகாப்டரின் மீது கல்லெறிந்துவிட்டு(கல் அவ்ளோதூரம் போய் தாக்கவில்லை)மீண்டும் பழையநிலைக்கே வந்து விளையாடிக்கொண்டிருப்பார் அவர்களில் ஒருவனிடம் இயக்குனர் ஏன் கல் எறிந்தீர்கள் எனும்போது அவன் அவர்கள் எங்களை ஏமாற்றி அடிமைபடுத்திவைத்துள்ளனர் அதற்கெதிராகவே கல் எறிந்தோம் என்று கூறிவிட்டு சைக்கிளிலில் ஏறி சென்றுவிடுவான்
இதிலிருந்து தெரிவது ஒன்றுதான் மதம் எனும் அடிப்படையிலோ அல்லது மத வெறியின் அடிப்படையிலோ அங்கெல்லாம் போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை மாறாக சுதந்திரம் வேண்டியும் அடிமை தலைகளை எதிர்த்துமே முன்னெடுக்கப்படுகிறது
போராட்டம் நடக்கும் பலஸ்தீனில் போராடுவது முஸ்லீம்கள் என்பதாலேயே அவ்வாறு பார்க்கப்படுகிறது
காஷ்மீரின் நிலையும் இதுவே பார்க்க ஜூ வியில் இந்த வார(13/10/2010)ம் மனித உரிமைப்போராளி சுகுமாரனின் கட்டுரை
இனியேனும் தமிழக முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் பாலஸ்தீனையும் காஷ்மீரையும் இங்குள்ள தலைவர்களையும்
இனியும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் அது காவி பயங்கரவாதிகளுக்கே சாதகமாகும்

காஷ்மீர்

பற்றி எரிகிறது பனி மலை

எரியூகியாக எங்கள் உணர்வு

நிறைந்து வழிகிறது எங்கள் குருதி

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்

ஒரு நாள் வெந்து பொசுங்கும் உங்கள் ஏகாதிபத்திய மோகம் 

அதுவரை அஞ்சாமல் தொடர்வோம்.....................

கல்லெறிதலும் கல்லறை செல்வதும்