கண்காட்சியின் தலைப்பு "காவல் துறையை புரிந்துகொள்ளுங்கள்"
புரிந்து கொள்ளுங்கள் என்பதை நாம் எப்படி உச்சரிக்கிறோமோ அதற்க்கேற்றார்போல் அர்த்தமும் மாறும்
உண்மையில் அரசாங்கம் உத்தேசித்த அர்த்தம் என்ன என்று தெரியவில்லை
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு போலிசை பற்றி புரியவைக்கும் நிகழ்ச்சியும் நடத்தியுள்ளனர் பொறுப்புள்ள போலீஸ்காரர்கள் அதன்படி கடந்த 20 10 2010 அன்று மாணவர்கள் அந்த கண்காட்சியை சுற்றிப்பார்த்து வந்துள்ளனர் அவ்வாறு பார்த்துக்கொண்டே வந்த பள்ளி மாணவர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் stun gun எனும் வகைப்பட்ட இயந்திர துப்பாக்கியை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஒரு காவலர் அது செயல்படும் விதம் குறித்து செயல் முறை விளக்கம் செய்து காண்பித்துள்ளார் அதிலிருந்து தோட்டாக்கள் பாய்ந்து 2 மாணவர்கள் மரணித்துள்ளனர் எவ்வளவு அலட்சியம் இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பள்ளி மாணவர்கள் நிச்சயம் காவல்துறையை புரிந்துகொண்டிருப்பார்கள் காரணம் ரத்தமும் சத்யுமாக அந்த நிமிடம்வரை அவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சக மாணவர்களை கொண்டல்லவா நீங்கள் அவர்களுக்கு செயல்வழிக் கல்வி போதித்தீர் (உங்கள் ஆற்றலை காட்டவா எங்கள் மழலைகளை கொன்று போட்டீர்) எனவே உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டது
இந்த சம்பவத்திற்கு காரணமான போலீஸ்காரர் வெறும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அவளாவே இப்போது ஆந்திர மக்கள் உங்களை புரிந்துக்கொள்ள அவசரகதியில் ஒரு கண்காட்சி தேவைப்படுவதன் அவசியம் என்ன? அதன் அரசியல் உள்நோக்கம் என்ன? ஆந்திர மக்கள் மட்டுமல்ல காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் அரங்கேற்றிக்கொண்டுதான் இருக்கிறீர்கள் கண்காட்சிகளை நாங்களும் உங்களை புரிந்து கொண்டுதான் இருக்கிறோம்
அருமை... அருமை...
பதிலளிநீக்குபிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் விலைவாசி குறைவு குற்றங்கள் குறைவு என அரசு கூறிக்கொண்டு இருகிறது. நீங்கள் மேற்குறிபிட செய்தியோடு கோவையை ஒப்பிட்டு ஆஹா ஆந்திர போலீசார் அப்பாவி மாணவர்களை அழித்து விட்டார்கள் . ஆனால் இங்கு நீதி உடனே செயல் பட்டு அராஜகர்களை தான் சுட்டு இருக்கிறது என கூறுவார்களோ ?
பதிலளிநீக்கு