புதன், 23 பிப்ரவரி, 2011

மன்னித்துவிடுங்கள் முத்துக்குமாரர்களே.......


ஹாஸ்னி முபாரக் என்ற ஆட்சியாளனின் கொடுமை தாங்கமுடியாமல் நான்கு இளைஞர்கள் தங்கள் உடலுக்கு தீ வைத்து எரிந்து போனார்கள் எகிப்த்தில்
அந்த நெருப்பின் அரசியல் வெப்பத்தை உள்வாங்கி அதை அந்த தேசம் முழுதும் விதைத்தால் அஸ்மா மக்பூல் எனும் 26 வயது பெண். தன் தேசம் மாற்றம் காண ஏதாவது செய்யவேண்டும் என நினைத்த அவள் தன் பேஸ் புக்கில் ஒரு ஸ்டேடஸ் போட்டால் "தீக்குளித்த நான்கு இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்த தஹ்ரீக் சதுக்கத்துக்கு நான் செல்ல இருக்கிறேன் என்னைப்போல சிந்தனையுடைய  எவரும் வரலாம்" என்பதே அந்த ஸ்டேடஸ். இந்த  ஸ்டேடஸ் பார்த்து மூன்று இளைஞர்கள்தான் வந்திருந்தனாறாம் கூடவே காவல்துறையும். காவல்துறை அவர்களை கைது செய்து விசாரணை நடத்திவிட்டு எச்சரித்து அனுப்பியது.
திரும்பி வந்த அஸ்மா அச்சமடையவில்லை.அமைதியாகிவிடவில்லை. இம்முறை பேஸ் புக்கில் அவளே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டாள். அதில் "தங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால் இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் ஜனவரி 25 ஆம் தேதி நாம் போராட்டத்தில் குதிக்கவேண்டும் அன்று யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் தனியாக செல்வேன். தீ குளிப்பதற்காக அல்ல என்னை சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை நீங்கள் உங்களை ஆணாக கருதினால் வாருங்கள்" என்று ஆவேசமாகவும் "அல்லாஹுவை தவிர வேறு எந்த சக்த்திக்கும் அஞ்சாதீர்கள்" என நம்பிக்கையூட்டும் விதமாகவும் பேசியிருந்தால் .
ஜனவரி 26 ல் தேசத்தின் எல்லா திசைகளிலிருந்தும் தஹ்ரீக் சதுக்கத்தை தேடிவந்தனர் மக்கள்.
மக்கள் ஆம் மக்கள் மக்கள் மட்டுமே மாற்றத்தின் உந்து சக்தி என்று மாவோ சொன்னதை நிறைவேற்றிவிட்டே கலைந்து சென்றது அந்த மக்கள் கூட்டம் . ஊழல் ஒழியட்டும், குடும்ப ஆதிக்கம் முடியட்டும், முபாரக் பதவி விலகட்டும் என்பதற்கு மாற்றாக எந்தவித சமரச முயற்சிகளும் அந்த மக்கள் முன் எடுபடவேயில்லை.
முத்துக்குமரா அந்த எகிப்திய இளைஞர்கள் உன்போல ஆழமான மரணசாசனத்தையோ. அல்லது சடலத்தையே ஆயுதமாக்க நீ வழிகாட்டியதுபோலவோ ஒன்றும் செய்ததாக தெரியவில்லை. எனினும் அவன் விட்டுசென்ற நெருப்பு ஆட்சியாளர்களை பொசுக்கியது. இங்கு ஏன் அப்படி ஒரு நிலை வரவில்லை புவியியல்,நம்நாட்டின் வர்கத்தன்மை என்ற ஆராய்ச்சிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி எங்களுக்கு தெரியவருவதேல்லாம். ஒன்றே ஒன்றுதான் எகிப்து மக்களுக்கு எம்மக்கள் போன்று வாய்ஜாலம், வார்த்தை ஜாலம், உள்ள தன்னால தலைவர்கள் இல்லை என்பதே அங்கே மக்கள் தங்களை நம்பி வீதிக்குவந்தனர். இங்கோ ஓட்டுக்கு ஆதாயம் தேடும் தலைவர்களை நம்பியும் அவர்களின் சொல்லை நம்பியும் வீதிக்கு வருபவர்களாகவே இருக்கிறோம். உனது விசயத்தில் கூட உனது மரணசாசனத்தை மாணவர்களிடமும், மக்களிடமும் கொடுத்து இதுதான் இவனது இருதியாசை இனி ஆகவேண்டியதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லியிருந்தால் நிலைமாறியிருக்கும். மாறாக தலைவர்களிடம் சிக்குண்டு அனைபோடப்பட்டது உனது போராட்டம். இவ்வளவுக்கு பிறகும் தங்கள் தேர்தல் நலனுக்காக தலைவர்கள் தாங்கி பிடிக்கின்றனர் உனது புகைப்படத்தை. ஈழப் படுகொலைக்காக இரட்டைலைக்கு ஓட்டு கேட்ப்போரே தர்மபுரியில் நெருப்பில் மாண்டுபோன மாணவிகள் உன் உறவுகள் இல்லையா என நீ கேள்வி எழுப்புவது புரிகிறது. கொஞ்சம் அவகாசம் கொடு அதற்கும் பதில் தருவார்கள் தங்கள் வார்த்தை ஜாலத்தால். எங்கள் ரசிக குஞ்சுகள் அதற்கும் விசிலடிக்கும்.
எகிப்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் சாத்தியப்படும் . அதற்குள்ளாகவே உங்களுக்கான அடைக்கல தேசத்தை தேர்வு செய்துவைத்துக்கொள்ளுங்கள்.             .            

5 கருத்துகள்:

  1. முத்து குமார் இறந்த போது அவன் சாவை ஏளனம் செய்தவர்கள் கூட நம்முடன் இருந்தார்கள். அ(ஆ)தி மு க ஆட்சி வந்தாலும் வரட்டும், நாம் இந்த நயவஞ்சகர்களை ஓட்டு மூலம் பழி வாங்கியே தீரனும் . ஜெயலலிதா இந்த முறை தமிழ் ஈன தலைவன் கருணாவை சிறை வாசம் செய்தாலும் அல்லது சிரத்தேசம் செய்தாலும் ரசிப்போம்.

    பதிலளிநீக்கு
  2. முத்து குமார் இறந்த போது அவன் சாவை ஏளனம் செய்தவர்கள் கூட நம்முடன் இருந்தார்கள். அ(ஆ)தி மு க ஆட்சி வந்தாலும் வரட்டும், நாம் இந்த நயவஞ்சகர்களை ஓட்டு மூலம் பழி வாங்கியே தீரனும் . ஜெயலலிதா இந்த முறை தமிழ் ஈன தலைவன் கருணாவை சிறை வாசம் செய்தாலும் அல்லது சிரத்தேசம் செய்தாலும் ரசிப்போம்.

    பதிலளிநீக்கு
  3. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. //முத்து குமார் இறந்த போது அவன் சாவை ஏளனம் செய்தவர்கள் கூட நம்முடன் இருந்தார்கள். அ(ஆ)தி மு க ஆட்சி வந்தாலும் வரட்டும், நாம் இந்த நயவஞ்சகர்களை ஓட்டு மூலம் பழி வாங்கியே தீரனும் . ஜெயலலிதா இந்த முறை தமிழ் ஈன தலைவன் கருணாவை சிறை வாசம் செய்தாலும் அல்லது சிரத்தேசம் செய்தாலும் ரசிப்போம்.//

    ஏன் இந்த கொலவேறி

    பதிலளிநீக்கு
  5. கருணாவென்று சொன்னது நம் பெருமைமிகு கருனாந்தியை

    பதிலளிநீக்கு