வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தேர்தல் வந்து தீர்ந்தது என்ன ?


தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது டீக்கடை, பேருந்து, பேஸ் புக், வலைப்பூக்கள் எங்கும் விவாதங்களும் யார் ஜெயிக்கப்போவது என்ற ஆரூடங்களும் பார்க்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருகிறது . டீ கடை விவாதத்திற்கும் பேஸ் புக் விவாதத்திற்கும் வித்யாசம் ஒன்றே டீ கடையில் விவாதிப்போர் அம்மா ஆட்சி வந்தா பணப்புழக்கம் உண்டாகும் வறுமை குறையும்கிறான் பேஸ் பூக்ல விவாதிப்போர் அம்மா ஆட்சி வந்தா மீனவர் துயர் தீரும்கிறான் .இங்கே ஜெயிப்பது யாராக இருந்தாலும் தோற்ப்பது நிச்சியம் மக்களாகிய நாமே. தமிழ் தேசியவாதிகளோ BJP வந்தாலும் பரவாஇல்லை காங்கிரஸ் வரவே கூடாது என்கிறார்கள் துரோகிக்கு எதிரியே மேல் என்று விளக்கம் சொல்லப்படுகிறது எனவே இரண்டுமே மக்களுக்கானதில்லை என்பதை இவர்களே மறுக்கவில்லை.இசுலாமியர்களோ காங்கிரஸ் வந்தாலும் பரவாஇல்லை BJP வரவே கூடாது என்கின்றனர் (காங்கிரசையும் BJP யையும் இங்கே தமிழகத்தில் திமுக ,ஆதிமுக கூட்டணி அடிப்படயில் பார்க்கின்றனர்) ஆனால் இந்த இரு கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு என்பதே காவியும் கதரும் தான் என்பதே உண்மை. BJP ஈழத்தில் துரோகமிழைத்துள்ளது காங்கிரசும் முஸ்லீம்களுக்கு துரோகமிழைத்துள்ளது (பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதே இவர்கள் ஆட்சியில்தான்). எனவே எதுவும் ஆளுபவரை பொருத்தல்ல ஆட்சிமுறையை பொறுத்தே. நாடகம் என்னவோ பழசுதான். நடிகர்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றனர். சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்ற கற்பனை ஒரு அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட போதும்கூட இந்த நாடகம் மக்களிடம் செல்லுபடியாகிக் கொண்டே இருக்கிறது. மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய அறியாமை நடிகர்களை புதுப்புது வேடம்கட்ட தூண்டிக்கொண்டே இருக்கிறது. இந்த அறியாமைல் மாட்டிக்கொண்ட நடுத்துதர வர்க்கமோ தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்றும் அதை அலட்சியம் செய்வது தேசவிரோதம் என்றும் சாடுகின்றனர் தேசமே இல்ல எங்கபோய் தேசவிரோதம்? நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளோ?!?! கட்சியை பார்க்காதீர்கள் வேட்ப்பாளரை பாருங்கள் என்று தங்கள்பங்குக்கு தேசப்பற்றை பறைசாட்டுகின்றனர் இவர்கள்மட்டுமா புரட்சியாளர்களின் புகைப்படங்களை மூலதனமாகக்கொண்டு கட்சி நடத்தும் பாராளுமன்ற புரட்சிக்கட்சியின் தலைவரும் கூட ஸ்பெக்ட்ரம் ஊழல் குழப்பம் குழாய்அடி சண்டை பாராளுமன்றத்தில் நடந்தபொழுது இதையே இப்படி சொன்னார் "நாம் நமக்குள் சண்டை இட்டுக்கொல்லாமல் பாராளுமன்றத்தை காக்கவேண்டும்" என்று . ஆனால் உண்மை என்ன கட்சியை பார்க்காமல் வேட்ப்பாளரை மட்டுமே பார்த்து என்னபயன் என்பதை சற்று அறிவுப்பூர்வமாக அவர்கள் நமக்கு விளக்கினால் தேவலை . முதலில் நம் பாராளுமன்றம் உருவானவிதமே ஆங்கிலேயரின்  கிழக்கிந்திய கம்பனியின் நலனுக்கானதுதனே .பிறகு மக்களின் போராட்டங்கள் வலுவடைவதை கண்டே பாராளுமன்றத்தில் எதிரகட்சிமுறையை கொண்டுவந்தார்கள் அதற்காக ஆக்டேவியஸ் ஹுயும் என்பவனால் உருவாக்கப்பட்டதே இன்று நம்மை ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி. அதன் பிறகு உலக வரலாற்றில் நிகழ்ந்த மாற்றங்களால் இந்தியாவைவிட்டு வாசல் வழி வெளியேறி பொடக்கால (கொள்ளிப்புரம்)வழிய நம்மை இன்றும் ஆள்வது இதுபோன்ற கம்பனிகளே. உதாரணமாக காட் ஒப்பந்தம் நாம் கட்சியை பாராமல் என்னதான் நல்லவனை தேர்ந்தெடுத்து அனுப்பினாலும் அவனால் பாராளுமன்றத்தில் பன்னாட்டுக்கம்பானிகளை பற்றிய கேள்விகளை அங்கே முன்வைக்கமுடியாது(இது காட் ஒப்பந்தத்தில் உள்ளது). அப்புறம் தமிழர் பிரச்சனை அதற்கும் இந்த கொள்கைகளே காரணம் ஈழ தோல்விக்கு காரணம் அந்தோணி அப்படின்னு சொல்லிட்டு வந்தோம் இப்போ என்ன நிலைமை அந்தோணிக்கு பதில் நம்ம தமிழன் ப.சிதம்பரம் சட்டீஸ்கர்ல மக்கள் கொல்லப்படுகிறார்கள் இது யாருடைய நலனுக்கு நடந்ததோ அதே நலனுக்குத்தான் ஈழமும் பலிகொள்ளப்பட்டது.அவ்வாறின்றி ஈழத்திற்கு மலையாளிகளையும் ஹிந்திக்காரர்களையும் குறை கூறினால் நமக்கு உடன்பாடில்லாமலே சிதம்பரம் நடத்தும் படுகொலைகளுக்கு தமிழர்களை குறைகூருவதுபோலாகும் . ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் கூட யாருடைய நன்மைக்கானது என்பதை நம்முடைய ஊடகங்கள் சொல்வதேயில்லை ஆ.ராசாவுக்கு பதில் நாளை அதே இடத்தில் ஹெச்.ராசா வரலாம் அனாலும் இந்த ஊழல் இதே வர்க்க நலனுக்கு வேறுவடிவில் நடந்தே தீரும் . நாம் போடாட்டி நம்ம வாக்க வேறொருத்தன் போட்டுருவான் என்னும் அறிவார்ந்த வாதங்கள் வைக்கிறார்கள் சிலர் நம் வாழ்வையே திருடிவிட்டவர்கள் நம் வாக்கை திருடுவது பற்றி நமக்கென்ன அக்கறை வேண்டிக்கிடக்கு. இறுதியாக தேர்தல் புறக்கணிப்பு என்பது வன்முறையல்ல ஜனநாயகத்தில் அதற்கும் இடமுண்டு (குடும்ப அடையாள அட்டை திருப்பிக்கொடுப்பது தேர்தல் புறக்கணிப்பு போன்ற எல்லா போராட்ட வடிவங்களும் நம் நாட்டிலேயே நடந்துள்ளது இதற்க்கு முன்பும்) எனவே தமிழர் இசுலாமியர் என்பதல்ல பிரச்சனை எந்த வர்க்கம் என்பதே பிரச்சனை எனவே உழைக்கும் வர்க்கமாக ஒரு மாற்றத்தை முன்னெடுப்போம் உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைவோம்

2 கருத்துகள்:

  1. எனக்கு தெரிந்த ஒரே வழி 49 ஓ தான். எத்தனை முறை 49 ஓ போட்டதால் தேர்தல் வந்தாலும் இவனுங்க அடித்த கொள்ளையை விட கம்மியாகவே செலவாகும். தேர்தலில் நிற்கும் எந்த நாயும் யோக்கியனில்லை எனும் போது வேறென்ன செய்வது. ஜெயித்து வருபவனெல்லாம் அம்பானிக்கும் டாட்டாவுக்கும் காலை நக்கும் போது நாம் வேறே என்ன செய்யலாம்? ஒரு முறை 49 ஓ முயற்சித்துதான் பார்ப்போமே. எல்லோரும் .

    பதிலளிநீக்கு
  2. எத்துனை தேர்தல் வந்தென்ன நம்ம அவலங்கள் தீர்ந்ததா? கூறு அதை மாற்றும் பாதை வேறு நம் சம காலத்திலேயே இந்த ஆண்டில் (2011 ) மக்கள் புரட்சிகள் வெடித்துள்ளன துனிசியா அதை தொடர்ந்து எகிப்த்து அந்த வரலாற்று வரிசையில் நாம் நம்முடைய நாட்டுக்கும் இடமளிப்போம் .........

    பதிலளிநீக்கு