கடந்த 10 09 2010 அன்று கைரளி (மலையாளம்) டிவியில் ஒரு விவாத நிகழ்ச்சி (நம்ம விஜய் டிவி நியா நானா மாதிரி) நிகழ்ச்சியின் பெயர் க்ராஸ் பையர் நிகழ்ச்சியின் அன்றைய விவாத தலைப்பு கேரளாவில் சமீபத்தில் புயல் கிளப்பிக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு ஊழல்
விவாதத்தின் ஒரு கட்டத்தில் லாட்டரி அனுமதிக்க வேண்டும் என்று அதன் விற்ப்பனையில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வந்த ஒருவர் தெரிவித்தார் அதற்க்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் பேசுகையில் லாட்டரிக்கு அனுமதி அளிக்கலாம் ஆனால் இதற்க்கு முன் நடிகர் ஜகதீஸ் தோன்றி லாட்டரி விற்ப்பனையை ஊக்குவித்தது போன்ற விளம்பரங்களை மறு பரிசீலனை செய்து (அப்ப கூட விளம்பரத்துக்கு தடை கோரவில்லை அவர்) விளம்பரங்கள் மக்கள் மனதில் அதீத ஆசைகளை விதைக்காவண்ணம் செய்ய வேண்டும் என்றார் அந்த இடத்தில்
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு சிறிய விளம்பர இடை வேளை விட்டார்
அந்த இடை வேளையில் ஒரு விளம்பரத்தில் ஒரு பள்ளி மாணவன் ஒரு இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியிடம் ஒரு பூவை பரிசளிக்கிறான் அவள் அதை தூக்கி எறிகிறாள் திரும்பவும் அவன் ஒரு கடிதம் குடுக்கிறான் அதையும் அவள் தூக்கி எறிகிறாள் பின் பள்ளிக்கூட வரண்டாவில் நிற்கும் அவன் அவள் வரும்போது ஒரு அழகிய நகை பெட்டியை திறந்து காட்டுகிறான் அதில் ஒரு மோதிரம் இருக்கிறது அதை பார்த்ததும் அவள் இம் முறை அவன் கரங்களை பற்றிக்கொண்டு பள்ளிக்கூட வராண்டாவில் நடக்கிறாள் அவர்கள் இருவரும் அவுட் ஓப் போகஸில் தெரிய திரையில்
சோன ஜுவல்லரி என எழுத்துக்கள் விரிகின்றன
எங்கே போய் கொண்டிருக்கிறோம் எதை கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது இந்த ஊடகங்கள்
நமக்கு என யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுதே இன்னொரு விளம்பரம்
இந்த முறை நடிகர் மாதவன் ஒரு டேபிளில் தன் மனைவிக்கு தன் கையால் சமைத்த உணவை பரிமாறுகிறார் அதில் உள்ள அன்பை நுகராமல் அதன் சுவை குறைவாக உள்ளது என அவள் அதை வெறுப்புடன் நிராகரிக்கிறாள் உடனே நடிகர் வேறொரு பாத்திரத்தை அவள் முன் வைக்கிறான் அவள் அதையும் மறுக்கவே அவன் அதை திறந்தது காட்டவே உள்ளே விலை உயர்ந்த்த நக்லஸ் அதை காணும் அவள் அவனை கட்டியனைக்கிறாள் உறவுகள் அனைத்தும் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மார்க்சின் வார்த்தைகள்
உயிர் பெற்றுக்கொண்டே இருக்கிறது ஒவ்வொரு முறையும்
நிச்சயமாக இவை தவறான முன்னுதாரணங்கள் தான்.
பதிலளிநீக்கு