மீண்டும் ஊடகங்களில் கிரிக்கெட் சூதாட்ட செய்திகள் இம் முறை அடிபடும் பெயர்கள் பாகிஸ்தானியர்களாது என்பதால் கொஞ்சம் சந்தோசம் கொள்ளலாம் நம் தேச பக்தர்கள்
இருந்தாலும் ரயிலிலும் பஸ்சிலும் திரையரங்குகளிலும் டீ கடைகளிலும் எல்லாம் மிகுந்த வருத்ததுடனும் கிரிக்கெட்டின் வரலாற்று?!... ஆதாரத்துடனும் அலசப்படுகிறது
அவ்வாறு என்னிடம் வருத்தப்பட்ட ஒரு உழைப்பாளி (கலாசி தொழிலாளி )நான் எவ்வித ரீயாக்சனும் காட்டாதது கண்டு என்னிடம் போதுமான அளவு பொது அறிவு இல்லை என்று வருத்தப்பட்டார் கிரிக்கெட்டை தெரிந்துகொள்ள சொன்னார் தெரிந்து கொண்டால் ஒரு மேச்சை கூட விடாமல் பார்ப்பாய் என்றார்
94 முதல் 96 ஆம் ஆண்டுவரை கோவை சபர்பன் மேனிலைப்பள்ளியில் கிரிக்கெட் டீமில் நான் வேகப்பந்து வீச்சாளன் மேலும் பள்ளியில் ஆனந்தா ஹோவ்சின் கேப்டன் அப்பொழுதெல்லாம் வீட்டில் இருப்பதே இல்லை என்று என் தந்தையின் கையிலிருந்து வாங்கிய அடிகளின் தழும்புகள் இன்னும் இருக்கிறது என் முதுகிலும் முழங்காலிலும்
(அதுல பாதி அடி வாங்கிருந்தா கூட திருந்திருப்பாணுக இந்த கிரிக்கெட் சூதாடிகள் )
சில சமயம் கூட விளையாட பசங்க வரமாட்டாங்க காரணம் அவங்க போய் வேர ஆளுக (அத இந்த கிரிக்கெட் வீரனுக )வெளையடரத பார்க்க போயிருவானுக அப்பொழுதெல்லாம் ஒத்த ஸ்டம்ப நட்டு வச்சு தனியவே பந்து வீசீட்டு இருப்பேன் (இப்போ புரிஞ்சாத நான் வேக பந்து வீச்சாலனாதன் ரகசியம் ) ஒரு கட்டத்துல டிவில கிரிக்கெட் போட்டங்கன்ன மறுநாள் பள்ளிக்கூடம் பூரா முதல் நாள் பார்த்த மேச்ச பத்திதான் பேசிகிட்டு இருப்பானுக வாத்தியார் உட்பட. எங்க இனிமேலும் கிரிக்கெட்ட பார்க்காம இருந்த்தொமுன்னா நம்மள கிறுக்கனுக லிஸ்ட்ல சேர்த்து ஆஸ்பிடலுக்கு அனுப்பிருவாங்கலோனு பயம் வந்துருச்சு அதனால நானும் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சிட்டேன் நம்ம ஏறிய ஆட்டோ ஸ்டாண்டுல அதுக்கப்புறம் நாமதான் ஹீரோ இத்தன நாள் கிரிக்கெட் பாக்கலயேனு வருத்தப்பட்ட தருணங்கள் அவை
இப்படியாக கழிந்து கொண்டிருந்தது வாழ்க்கை. அப்போதான் வந்தது அந்த சந்தோஷ செய்தி டிஸ்ட்ரிக் டீமுக்கு ஆள் செலக்ட் பண்றாங்களாம் சரின்னு போய் கலந்துகிட்டா
உள்ளுக்குள்ள ஒரே படபடப்பு அப்புறம் பார்த்தா பள்ளிக்கூடத்துல நம்மளவிட சுமாரா விளையாடற பயபுள்ளைகளா நிக்கறாங்க நிம்மதியும் தைரியமும் ஒரு சேர உள்ள வந்துருச்சு ஒருவழியா பவ்லிங் டெஸ்ட் வெச்சாங்க நல்லா பண்ணுனதா எல்லாரும் பாராட்டுனாங்க எனக்கு அடுத்ததா ஸ்ரீராமும் ஓரளவிற்கு பண்ணுனதா சொன்னாங்க எல்லாம் முடிந்தது எங்களை லைனா நிக்க வெச்சாங்க ஒவ்வொருத்தர் கிட்டேயும் அப்பா என்னவா இருக்காருன்னு கேட்டுட்டு இருந்தாங்க ஸ்ரீராமின் பதில் பேங்க் மேனேஜர் எனது பதில் கூலி தொழிலாளி ஸ்ரீராம் செலக்ட் நான் ரிஜெக்ட் காரணமும் புரியவில்லை கிரிக்கெட்டும் புரியவில்லை உண்மைதான் மேலே கலாசி தொழிலாளி சொல்லியது போல கிரிக்கெட் புரியவில்லை தான் எனக்கு.
நான் சின்ன பையனா இருக்கும் போது டென்னிஸ் விளையாடறவங்கள பாத்து சொல்லுவாங்க அதெல்லாம் பணக்கார வெளையாட்டுன்னு.
இப்போது கிரிக்கெட்டும் பணக்கார வெளையாட்டு தான். இவ்வளவு ஊழலுக்கு பிறகும் இப்போது tvல தலைக்கு (தோனிக்கு) விசில் அடிங்கன்னு iplக்காக ஒளிபரப்பாயிட்டு இருக்கு ஒரு விளம்பரம்.
நல்ல அடிங்க விசில்லு விசிலின் அளவு கூடினால் வீரர்கள் ஆடை மறுவடிவமைப்பு செய்து (சூப்பர்மேன் போல்) உள்ளாடையிலும் பன்னாட்டு குளிர்பானத்தின் விளம்பரத்தில் பணம் பார்க்கலாம்.
அட்டாகசம். அருமை.
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்கு