வியாழன், 28 ஜூலை, 2011
வெல்லட்டும் மாணவர் போராட்டம்..
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டங்களை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களை திரட்டியும் போராடிவருகிறது. இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஒரு அவதூறு செய்தியை தினமணி வெளியிட்டு இருந்தது அதாவது பு ம இ முவினர் பள்ளிமானவர்களை வேனில் கடத்தி போராட வைக்கின்றனர் என்பதே அந்த அவதூறு. (மேலும் விபரங்களுக்கு http://www.vinavu.com/2011/07/27/media-lies/ ) இதில் விசேசம் என்னவென்றால் தினமலத்தின் செய்திகளையெல்லாம் புரிந்துகொண்டு அம்பலப்படுத்தும் தமிழனவாதிகளில் சிலரே தினமலமாக தினமணியும் மாறிவருவதை புரிந்துகொள்ளாமலோ அல்லது அறிந்தேவோ இந்த பொய்யை அப்படியே சமூகவலைத்தலங்களின் ஊடாக பரப்பியும் பு.ம.இ.முவை கொச்சைபடுத்தியும் எழுதிவருகின்றனர். பள்ளிமாணவர்கள் போராடுவது மிகப்பெரிய தவறாம்.ஆனால் வரலாறு வேறாக இருக்கிறது .
சிட்டகாங் வீரர்கள்! அறிவீர்களா?
1930 களில் இந்தியாவெங்கும் எதிரொலித்த பெயர்கள். பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆயுதம்தாங்கிய மழலை பட்டாளங்கள். இந்த வயதில் தேசப்பற்றா வியப்புகளுக்கு பதில் சொல்லினர் "தாயை நேசிக்க மீசை முளைக்கவேண்டிய தேவையில்லையே"
மழலைகள் கூடிப்பேசின விடுதலை வேண்டும் அதற்க்கு என்ன செய்யலாம்? காவி உடுத்தலாம் கதரும் உடுத்தலாம். பிரார்த்தனை பண்ணலாம் அனுமதி பெற்று அரசியல் பற்றி அமர்ந்தும் பேசலாம். சுதந்திரம் பெற இப்படிப்பட்ட சிந்தனைகள் சூறாவளியாக சுழண்டு கொண்டிருந்த காலத்தில் புரட்சிப்பாதையே விடுதலைப்பாதை. புரட்சி என்பது பிரார்தனையல்ல, அது ஒரு மாலைநேர விருந்தில் சங்கீதம் கேட்பதை போன்றதோ, நளினமானதோ நாகரீகமானதோ அல்ல. அது ஒரு பலத்க்கார நடவடிக்கை அதை நாம் தேர்ந்தெடுக்கவில்லை நமது எதிரியே தீர்மானிக்கிறான். என்று உணர்ந்த சிட்டகாங் நெருப்புக்குஞ்சுகள் "அதிகாரம் துப்பாக்கி முனையில் இருந்துதான் பிறக்கிறது" எனவே நாமும் துப்பாக்கி தூக்குவோம் அன்னை நாட்டுக்காக ஆயுதம் ஏந்துவோம். ஆயுத போராட்டமா என்றால் ஆயுதம் வேண்டாமா? எதிரிகளிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம்(கொல்லலாம்) என்று சிந்தித்து இருளில் கரைந்தது அந்த மழலை பட்டாளம்.
மறுநாள் காலை சிட்டகாங்கில் இருந்த ஆயுதக்கிடங்கு முற்றுகை இடப்படுகிறது.ஆயுதங்களை எடுத்துக்கொண்ட மழலைகள் ராணுவத்துடன் மோதுகின்றனர் மழலையர்.
பதினான்கே வயதுள்ள "டெகரா"தான் முதல் களப்பலி. (டெகரா என்றால் வங்கமொழியில் சிறுத்தை என்று பொருளாம்) .
டெகரா வீழ்ந்துவிட்டான் ஒருவன் கத்தினான் மற்றவன் பதிலளித்தான் "டெகரா வீழவில்லை அவன் நம்மில கலந்துவிட்டான்.நாம் வீழமாட்டோம் நாம் வீழும்போது சிட்டகாங் எழும். இந்திய எழும். பிரிடீஸ் ஆட்சி ஒழியும் வரை டெகரா நம்மில் கலந்துகொண்டே இருப்பான்" அவர்கள் எழுந்தார்கள் ஆவேசமாக தாக்கினார்கள். பத்து வயது முதல் பதினான்கே வயதுள்ள குழந்தைகளிடம் போருக்கென்ற பயிற்சி எடுத்த பிரிடீஸ் சிப்பிகள் பின்வாங்கி ஓடினர் என்பதே வரலாறு. எனவே வரலாற்றில் மாணவர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் போராடுவது என்பது ஒன்றும் புதுமையல்ல அது அவசியமும்கூட.
இசுரேலிய படைகளை எதிர்த்து வீரத்துடன் போராடிய லைலா கலேத்திடம் (உலக வரலாற்றி விமானம் கடத்திய ஒரே பெண் போராளி இவர் அதுவும் இரண்டு முறை http://mugavare.blogspot.com/2011/02/blog-post_23.html) ஆவணப்பட இயக்குனர் ஒருவர் கேட்க்கிறார் "குழந்தைகளுக்கும் கூட பயிற்சி அளிக்கிரீரே இதுதேவைதானா?" காலேத் பதிலளித்தார் "என்ன செய்ய எதிரிகள் குழந்தைகளையும் அல்லவா கொல்கின்றனர்" என்று
உண்மையில் பாதிப்புக்கு உள்ளாகும் வர்க்கம் என்ற முறையில் மாணவவர்கள் வர்க்கமாக ஒன்றிணைந்து போராடுவதே சரியானதாகும். இதுபோன்ற போராட்டங்களை ஆதரிப்பதும் ஊக்குவிப்பதின் மூலமுமே நாம் ஈழம் போன்ற பிரச்சனைக்களுக்கு மக்கள் போராட வரவில்லை எனும் புலம்பல்களை நிறுத்தி போராடி வெற்றியடைய முடியும். போராடும் விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை என்றோ தொழிலாளர்களுக்கு என்ன பிரச்சனை என்றோ அறிந்துகொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவும் அளிக்காமல் அவர்களின் போராட்டங்களை ஊக்குவித்து போராட்ட குணத்தை அவர்களின் இயற்க்கை குணமாக மாற்ற நாமும் ஊக்கியாக இல்லாமல். அவனை நேரடியாக பாதிக்காத ஈழம் போன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் அவர்கள் குரல் கொடுக்கவில்லையென்றும் அவர்கள் களத்துக்கு வரவில்லையென்றும் பொலம்புவது அபத்தமே அன்றி வேறென்ன?. சிட்டகாங் போல இன்றைய மாணவர்கள் போராடாததன் காரணம் மானாட மயிலாட போன்ற நிகழ்சிகள் மூலம் முதலாளித்துவ ஊடகங்கள் தங்களை பாதுகாத்துக்கொல்வதேயாகும். பெற்றோரும் அதுபோன்ற நிகழ்சிகளுக்கு தங்கள் குழந்தைகளை தயார் செய்வதுமேயாகும் எனவே அதையும் தாண்டி தங்கள் பிரச்சாரம் மூலமாக பள்ளிப்பிள்ளைகளை போராட வீதிக்கு கொண்டுவர முயலும் தோழர்களின் போராட்டத்தை ஊக்குவிப்போம் துணை நிற்ப்போம்.
வெள்ளி, 20 மே, 2011
வானமெல்லாம் காவி
CALL THE DOG MAD AND SHOOT என்று ஒரு ஆங்கிலப்பழமொழி உண்டு . அதைக்கொண்டுதான் RSS இன் சிந்தாந்தம் இசுலாமியர்களுக்கு எதிராக இயங்குகிறது . இந்த பழமொழியின் பொருள் இதுதான் ஒரு நாயை நாம் கல்லால் அடித்தால் வேடிக்கை பார்ப்பவர்கள் ஒரு வாயில்லா ஜீவனை போட்டு அடிக்கிரேயேடா பாவினு திட்டுவாங்க அதே அந்த நாய் வரும்பொழுது அந்த நாயை காட்டி பக்கத்து தெருவில நாலு பேரக்கடிச்சிருக்கு. முந்தாநாள் கூட மூனுபேரக்கடிச்சிருக்கு அதுக்கு வெறி பிடிச்சிருக்குன்னு ஒரு கதையா அவுத்துவிட்டா ஆகவேண்டியதை அங்கே குழுமியிருக்கும் பொதுமக்களே பார்த்துக்குவாங்க. இந்த தந்திரம் தான் CALL THE DOG MAD AND SHOOT . இந்த தந்திரத்தை இசுலாமியர்களுக்கு எதிராக காந்தி படுகொலை முதலே நிகழ்த்தி அதில் வெற்றியும் அடைந்து வருகிறார்கள் இந்த மாபாதகர்கள்.(கோவை இரத்தினபுரி அப்பாயி மன்றத்தில் ( DYFI ) மாணவர்களுக்கு நடத்தப்பட்ட QUIZ ல் காந்தியை கொன்றது யார் என்ற கேள்விக்கு ஒருசில மாணவர்கள் முஸ்லீம்கள் என்றும் ஒரு சில மாணவர்கள் அல்லும்மா காரன் என்றும் பதில் எழுதியிருந்தனர்)
இந்த தத்துவத்தின் அடிப்படயில் வெளிவநத்த ஏராளமான வெற்றிப்படங்களின் வரிசையில இப்போது வானம் இதற்க்கு முன் வந்த உன்னைப்போல் ஒருவன் போன்ற படங்களுக்கும் இந்த படத்திற்கும் ஒரு சின்ன வித்யாசம் உள்ளது அதுதான் பார்ப்பனியத்தின் உள்வாங்கி செரித்தல் எனும் யுக்தி.
இதற்க்கு முன் வந்த படங்களில் அப்பட்டமாக இசுலாமியர்களை பயங்கரவாதிகளாகக் காட்டியது . அதை எல்லோரும் ஆதரிப்பதில்லை என தெரிந்ததும் . இந்து பாசிச்ட்டுகளையும் அவர்களின் சில போக்கிரித்தனங்களையும் முதலில் காட்டிவிட்டு . பின் இசுலாமிய பயங்கரவாதத்தை காட்டி இருக்கிறார் இதன் இயக்குனர் கிரிஷ். முன்பு இது போன்ற படங்களை சாடிய என் தோழியும் கூட இந்த திரைப்படத்தை அருமை என்று எழுதிகிறாள். இந்த இடத்தில்தான் இப்படம் முந்தயவற்றிளிருந்து மாறுபடுகிறது.
படத்தில் காவி பயங்கரவாதிகளை எப்பிடி காட்சிப்படுத்துகிறான். அவர்கள் சும்மா பேசிக்கொண்டிருக்கும் இரு ஆண் பெண் நண்பர்களிடம் வந்து தாலியை கட்டவேண்டும் அல்லது ராக்கி கட்டவேண்டும் என்கின்றனர் . அப்போது அவர்களின் கையில் ஆயுதம் ஒன்றும் இல்லை. அதை அந்த நண்பர்கள் மறுக்கவே அங்கே சின்ன சண்டை நடக்குது இறுதியில் நாயகன் அவர்களை வென்று விடுகிறான். சரி இது உண்மையிலேயும் நடந்த நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களே. அதற்க்கு ராம் சேனாவும் பொறுப்பேற்று உள்ளனர் இங்கே தமிழ்நாட்டிலும் காவி மதவாத அமைப்புகள் இச்செயலை ஆதரிக்கின்றன.
ஆனால் சிறுபான்மை சமூகத்தை காட்டும்பொழுதோ எப்படி காட்சிப்படுத்தப்படுகிறது. ஒரு இசுலாமிய குடும்பம் விநாயகர் சிலை ஊர்வலத்தை(நிஜத்தில் பொதுவாக நடக்கும் துலுக்கன வெட்டு துளுக்கட்சியை கட்டு போன்ற கோசங்கள் எல்லாம் இல்லாத ஊர்வலம்) கடக்கும் பொழுது மனைவியின் மீது கலர் பூசும் கயவனிடம் ஞாயம் கேட்க்க தாக்கப்படுகிறார். அப்போதும் ரத்தம் வரும் அளவெல்லாம் தாக்குதலின் தீவிரம் இல்லை .இங்கே காவல் துறை அதிகாரி வந்து சமரசம் செய்துவைத்து அதே சமயம் முஸ்லீம் அண்ணன் தம்பிகளை நீங்கள் எதுவும் செய்வீர்கள் என்று கூறி ஒரு அறை அறைந்து அனுப்பி வைக்கிறார்( கோவை குண்டு வெடிப்புக்கு காரணமான நவம்பார் படுகொலைகளில் போலிசுகாரர்களே அடிபட்ட துலுக்கணுக பெரியாசுபத்திரிக்கு வரானுகனு வயர்லஸ் இல் தகவல் கொடுத்ததை என்னவென்பது. காவலர்களே தங்கள் பைக்கிலிருந்து பெட்ரோல் எடுத்துக்கொடுத்து இசுலாமியர்களை அரசு மருத்துவமனையில் வைத்து எரித்ததும் அது ஜூ வீ யில் படமாக வெளிவந்ததும் இங்கே நினைவு கூறுவது நன்று) கைகலப்பில் தள்ளிவிடப்படும் இங்கே மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் அதாவது வேண்டுமென்றே தாக்கப்படாமல் எதார்த்தமாக கீழே விழும் கர்பிணி மனைவியின் கர்ப்பம் கலைகிறது அதை பார்த்து ஆத்திரப்படும் கணவனின் தம்பி தீவிரவாதியாக மாறுகிறான். பிறகு ஊருக்கு ஒரு பெயருடன் சுற்றுகிறான். கையில் பயங்கர ஆயதங்களுடன் மருத்துவமனையே தாக்குகிறான். முந்தய காட்சியில் காட்டப்பட்ட காவி பயங்கரவாதிகளைப்போல் ஒரு நாயகனால் வெள்ளப்படமுடிபனல்ல இந்த பயங்கரவாதி. என்பதுபோல் காட்சிப்படுத்தப்படுகின்றன சிறுபான்மையினரின் பகுதிகள்.
காவி பயங்கரவாதம்தான் இந்தியாவில் நடந்த பெரும்பான்மையான குண்டுவெடிப்புகளுக்கு காரணம் என்பதை கண்டறிந்ததுதான் கார்க்கரேவின் படுகொலைக்கே காரணம் என்பதை கர்க்கரேவின் மனைவி தெரிவித்த பிறகும் கர்க்கரேவின் சான்றுகளுக்கு பிறகும் அசிமானந்தாவின் வாக்குமூலத்திற்கு பிறகும் இன்னும் எத்துனை ஆண்டுகளுக்கு இந்திய சினிமாவில் இசுலாமியர்களுக்கு மட்டுமே குண்டு வைக்க தெரியுமோ தெரியவில்லை.
விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டதல்ல எந்த மதமும் இசமும் ஆனாலும் அது அவதூறாக இருந்து ஒரு பொது புத்தியை உறவாக்கி விடக்கூடாது என்பதே என் கருத்து .
இசுலாமிய நம்பிக்கை பற்றி விமர்சித்து நண்பரின் மறைபொருள் எனும் குறும்படத்தை கோவையில் வெளியிட்டு இருக்கிறோம் .
யுத்தம் செய் படத்தில் இசுலாமியர்களை கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று நண்பர் தமிழ் எழுதிய கருத்திலும் முரன்பட்டோம் காரணம் கோவை குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி பாட்சாவின் அக்கா மகனே ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு கொண்டு , கொலை செய்து இப்போது சிறையில் இருக்கிறான் எனவே ஒரு தனி நபருக்கு முஸ்லீம் பெயரை வைத்து படத்தில் சித்தரிப்பது என்பது வேறு ஆனால் ஒரு சமூகத்தை சித்தரிப்பது என்பது வேறு
எனவே வானமும் ஒரு காவி சிந்தனை படமே ... என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்
திங்கள், 7 மார்ச், 2011
உழைக்கும் மகளிர் தின விழா
பெண்புத்தி பின்புத்தி, ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை போன்ற ஆணாதிக்க பழமொழிகளுக்கெல்லாம் நம் சம காலத்தில் சாவுமணியடித்த அஸ்மா மக்பூசுக்கு முதலாவதாக வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம்.
மார்ச் 8 மகளிர்தினம் கொண்டாட தயாரகிக்கொண்டிருக்கின்றன பெரும் வர்த்தக நிறுவங்கள். மேட்டுக்குடி மகளிருக்கான விளையாட்டு நிகழ்சிகளை போட்டிபோட்டு அறிவித்து FLEX வைத்துள்ளனர் சில பெரும் ஜவுளி வர்த்தக நிறுவங்கள். அதிலொரு விளையாட்டு புதையலை தேடி (அதாவது காரில் சென்று தேடவேண்டும் சொந்தமாக கார் வைத்திருக்கும் பெண்கள்). மகளிர் தினத்தின் உண்மையான வரலாறே உண்மையில் நாம் தேடவேண்டிய புதையல. இன்று இவர்கள் கொண்டாடுவது போன்று ஓய்வு நேரத்தை போக்கிக்கொள்ள உருவானதல்ல மகளிர் தினம். ஓய்வின்றி உழைத்த மகளிர் தங்கள் களைப்பை போக்க ஓய்வு வேண்டி போராடி பெற்ற வெற்றியின் அடையாளமாக உருவாக்கப்பட்டதே மகளிர் தினம். மே 1 எப்படி உழைப்பாளர்கள் தினமோ அப்படிதான் மார்ச் 8 உழைக்கும் மகளிருக்கான தினம். 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பெண்கள் தங்கள் வீடுகளில் பஞ்சிலிருந்து நூலை திரித்துக்கொடுக்கும் வேலையே செய்துவந்தனர். அந்த நூலிலிருந்து துணி உற்பத்தி செய்வார்கள். இந்த துணி உற்பத்தி செய்யும் முறையில் பின்னர் இயந்திரம் புகுத்தப்படுகிறது. இயந்திரத்தின் உற்பத்தி வேகத்திற்கு ஈடுகொடுத்து நூல் உற்பத்தியை செய்ய முடியவில்லை பெண்களால். எனவே அவர்கள் இரவு பகல் பாராமல் அயராது உழைக்க வேண்டிய நிர்பந்தம் வருகிறது. அதன் பொருட்டு பல பெண்களுக்கு திருமணம் கூட தடைபெறுகிறது அதிலிருந்துதான் (SPINSTERS ) ஸ்பின்ஸ்டர்ஸ் (bachelor என்பதன் female version ) எனும் வார்த்தை பிறந்தது. அப்படி உற்பத்தியில் ஈடுபட்ட மகளிர். 10 மணிநேர வேலையும், சம உரிமையும் வேண்டி நியுயார்க் நகரத்தில் 1857 மார்ச் 8ல் அணிவகுப்பு மற்றும் மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் அவர்களை விரட்டி சிதறடித்தது. இரண்டு வருடத்திற்கு பிறகு இந்த பெண்கள் அதே மாதத்தில் முதல் தொழிற்சங்கத்தை துவங்கினர். 51 ஆண்டுகளுக்கு பிறகு 1908 அன்று நியுயார்க்கிலுள்ள தையல்துறையை சேர்ந்த "வாரி" சகோதரிகள் 1857 ல் நடந்த அணிவகுப்பை கவுரவுத்தும், வாக்குரிமை கோரிக்கையை முன்வைத்தும், குழந்தைகள் உழைப்பை சுரண்டுவது ஒழியவேண்டும் என வலியுறுத்தியும், பேரணி நடத்தினர். இதேபோல் "ட்ராயாங்கில் தொழிற்சாலை" நியுயார்க்கில் 1911 இல் 146 பெண்கள் தங்களையே தியாகமாக தந்த போராட்டம் . இவ்வாறு பல்வேறு அடக்குமுறைகளையும் தாண்டி பல்வேறு காலகட்டங்களில் பெண்களின் போராட்டம் தொடருந்துகொண்டேயிருந்தது.
"பெண்களின் இடம்" எனும் அற்ப சித்தாந்தங்கலையே வெட்க்கப்படவைத்த பெண்கள் அவர்கள்.
புகழ்பெற்ற லாரன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் வேலைநிறுத்தப் போராட்டத்தில் எங்களுக்கு "ரொட்டியுடன் ரோஜாவும் வேண்டும்'' என்ற பிரச்சார முழக்கத்துடன் பெண்கள் அணிவகுப்பு நடத்தினர்.
''அழகான நாளன்று நாங்கள் அணிவகுக்கும்போது
ஆயிரக்கணக்கான இருட்டு சமையலறைகளும்,
சாம்பல் நிறத்தில் ஓங்கி நின்ற இயந்திரங்களும்
ஒரு திடீர் சூரியனின் பிரகாசத்தால்
உணர்வுகள் பெருக்கெடுத்துப் பாடுகின்ற
எங்களை கேட்கின்ற மக்களுக்காக
பிரெட் அண்ட் ரோசஸ், பிரெட் அண்ட் ரோசஸ் !
நாங்கள் அணிவகுத்துக்கொண்டே
நல்ல நாட்களை கொண்டுவருவோம்
பெண்கள் எழுவதென்றால் இனமே எழுந்ததாக பொருள்
இனி அடிமைதனமும் இல்லை.
சோம்பேறிகளும் இல்லை.
ஒருவன் அமைதியாக இருக்குமிடத்தில்
பத்துபேர் மட்டுமே உழைப்பதுமில்லை.
இனி வாழ்வின் மகிழ்ச்சியை
பங்கிட்டுக்கொள்வதே இருக்கும் .
பிரெட் அண்ட் ரோசஸ், பிரெட் அண்ட் ரோசஸ் !
சர்வதேச பெண்கள் தின அணிவகுப்பை நடத்துபவர்கள் வேலைநிறுத்தக்காரர்களின் கீதமான "பிரெட் அண்ட் ரோசஸ்" என்ற பாடலை விரும்பிப்பாடுவார்கள்.
சர்வதேச மகளிர் தினம் அதிகார பூர்வ அரசு விடுமுறை தினமாக 1908 ல் அறிவிக்கப்பட்டது. அந்த வருடம் அமெரிக்காவில் வாக்குரிமை பிரச்சாரத்திற்க்காக சோசலிஸ்ட் கட்சி ஒரு தேசிய பெண்கள் குழுவை நியமித்தது. கூட்டத்திற்கு பிறகு ஒவ்வொரு வருடத்திலும் ஒரு நாளை சோசலிஸ்ட் கட்சி பெண்களின் வாக்குரிமைக்கான பிரச்சாரத்திற்க்காக ஒதுக்கவேண்டுமென்று குழு பரிந்துரைத்தது. வாக்குரிமையை வேலை செய்யும் பெண்கள் வரவேற்றனர்.
1910 ல் சோசலிஸ்டுகளும்,பெண்ணியவாதிகளும் அமெரிக்க முழுதும் பெண்கள் தினத்தை கடைபிடித்தனர்.1910 மே மாதத்தில் நடந்த சோசலிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரஸ்சில் பிப்பிரவரி இறுதி ஞாயிற்றுக்கிழமையை சர்வதேச பெண்கள் தினமாக அறிவிக்க வேண்டுமென்று பெண்கள் தேசிய குழு பரிந்துரைத்தது. அதற்குப்பிறகு பெண்கள் தினத்தை சர்வதேச நிகழ்ச்சியாக அடையாளப்படுத்த வேண்டுமென்ற கருத்துடன் அதே வருடம் கொபன்ஹெகனில் நடந்த 2 வது சர்வதேச சோஷலிச பெண்கள் மாநாட்டில் பிரதிநிதிகளாக அவர்கள் கலந்துகொண்டனர்.பின்னர் ''கிளாரா ஜெட்கின்'' என்ற புகழ்பெற்ற கம்யுனிஸ்ட் தலைவி சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாட்டில்பெண்களுக்கு உலகம் முழுதும் வாக்குரிமையை பெற உதவுவதற்கு ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். அது மார்ச் 19 ஐ மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது. பின்னர் சில சதிகார அரசுகளின் திட்டப்படி மகளிர்தின எதிர்ப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டது.
இவ்வாறு மிக நீண்ட போராட்டம் மற்றும் பெண்களை திரட்டி பெண்களுக்கு எதிராகவே துரோகம் இளைத்தல் போன்ற அரசின் சதிச்செயல் ஆகிய எண்ணற்ற இன்னல்களையும் தாண்டிதான் இறுதியாக இன்றைய சர்வதேசிய மகளிர் தினம் மார்ச் 8 ல் உலகும் முழுவதும் கொண்டாடப்படுகிறது.மார்ச் 8 இதுவெறும் வார்த்தையல்ல பெண்கள் போராடிப்பெற்ற வெகுமதி. இந்த வரலாற்று உண்மையை பேர் அண்ட் லவ்லியும் இன்ன பிற முகப்பூச்சு அமிலங்களும் நம்மிடமிருந்து திருடிச்செல்ல அனுமதிக்காமல் கொண்டாடுவோம் ஒரு உண்மையான "உழைக்கும் மகளிர் தினமாக".
சனி, 5 மார்ச், 2011
இப்படியும் நடக்கிறது!
நன்றி : தினமணி
கேரளத்தைச் சேர்ந்த ராய் வர்கீஸ் என்பவர் எதற்காக ராஜஸ்தான் போனார், அவர் ஏன் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் இத்தனை ஆண்டுகளாக முறையான விசாரணை இல்லாமல் அடைபட்டுக் கிடந்தார் என்பதெல்லாம் புதிராக இருக்கின்றன. ஜெய்ப்பூர் சிறைச்சாலை ஆவணங்களின்படி அவரது பெயர் ஹிட்லர் பாபாகான் என்று காணப்படுகிறது. கைது செய்யப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏதாவது பெயர் தரப்பட வேண்டும் என்பதற்காகக் காவல்துறையில் வைக்கப்பட்ட கற்பனைப் பெயராகக்கூட இருக்கலாம் ஹிட்லர் பாபாகான் என்பது. 18 ஆண்டுகளும் நான்கு மாதங்களும் ராய் வர்கீஸ் என்கிற ஹிட்லர் பாபாகான் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் ஒரு விசாரணைக் கைதியாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுத் தனது வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். அவர் என்ன குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதே கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது கொலைக்குற்றம். வேடிக்கை என்னவென்றால் அப்படி ஒரு கொலை நடந்தது பற்றியேகூட அவருக்குத் தெரியாது என்பதுதான். ராய் வர்கீஸ் எப்போது புத்தி சுவாதீனத்தை இழந்தார் என்று யாருக்குமே தெளிவாகத் தெரியவில்லை. சித்தப்பிரமையுடையவர்களை மனநோய் மருத்துவமனைக்குச் சிறைச்சாலை நிர்வாகம் அனுப்ப வேண்டும் என்பதுதான் விதி, சட்டம். ஆனால், ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸ் பல ஆண்டுகளாக ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள தனிமைச் சிறையில்தான் அடைபட்டுக் கிடந்திருக்கிறார். தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் என்ன என்பதுகூடத் தெரியாத நிலையிலுள்ள ஒருவரை ஏன், எதற்காக இப்படித் தனிமைச் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்தது சிறைச்சாலை நிர்வாகம் என்பதற்குப் பதில் கிடையாது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலுள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக உள்ள சகோதரி மரியோலா, ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்குப் போதனை செய்வதற்காகவும், மனசாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதற்காகவும் சென்றிருந்தபோது, ஹிட்லர் பாபாகான் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்திருக்கிறார். இந்த வழக்கைப் பற்றியும், ஒரு மனநோய் பாதிக்கப்பட்ட மனிதர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவலத்தைப் பற்றியும் வெளியுலகுக்குத் தெரிவித்தவர் சகோதரி மரியோலாதான். கடந்த ஜனவரி 25-ம் தேதி ஜெய்ப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸýக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதுவும் எப்படி? ரூ. 50,000-க்கு உத்தரவாதமும், அவரைப் பாதுகாப்பதாக வாக்குறுதியும் எழுதி வாங்கிய பிறகுதான் 18 ஆண்டுகளாகத் தனிமைச் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த ராய் வர்கீஸ் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டார். இப்போது ராய் வர்கீஸ் கேரளத்திலுள்ள தனது சகோதரியின் பாதுகாப்பில் ஒரு மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 18 ஆண்டுகள் சிறைவாழ்வில் முழுமையாகப் பார்வையை இழந்துவிட்டிருக்கும் அந்த மனிதருக்குத் தன்னைப் பற்றியோ, தான் சிறையில் கழித்த நாள்களைப் பற்றியோ, இப்போது விடுதலையாகித் தனது சகோதரியுடன் இணைந்திருப்பது பற்றியோ எதுவுமே தெரியவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயம். யார் ஹிட்லர் பாபாகான்? அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலை வழக்குதான் என்ன? இனிமேல் அதைப்பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. உண்மையான கொலைகாரன் தப்பிவிட்டான். அப்பாவி நிரபராதி ஒருவர் செய்யாத குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து இப்போது மனநோயாளியாக ஊருக்கு அனுப்பப்பட்டு விட்டார். இதுபோல மேலும் 82 விசாரணைக் கைதிகள் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் இருப்பதாகவும், அவர்களுக்கும், தான் உதவப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார் சகோதரி மரியோலா. இது ஏதோ ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைக்காதீர்கள். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ராய் வர்கீஸ் போன்ற ஆயிரக்கணக்கான அப்பாவிகள் முறையான விசாரணைக்கு ஆண்டுக்கணக்காகக் காத்திருந்து தங்களது வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். சுமத்தப்பட்ட குற்றத்துக்கான அதிகபட்சத் தண்டனையில் பாதி நாள்களை சிறையில் கழித்திருந்தால், விசாரணைக் கைதியை சொந்த ஜாமீனில்விட வேண்டும் என்பது விதி. இந்திய சிறைச்சாலைகளில் உள்ள 80% கைதிகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களும், கல்வியறிவு இல்லாதவர்களும் என்பதால், இப்படி ஒரு விதி இருப்பதே பல விசாரணைக் கைதிகளுக்குத் தெரியவே நியாயமில்லை. இந்திய சிறைச்சாலைகளின் நிலைமையை எடுத்துக்கொண்டால், மனித உரிமை மீறலின் உச்சகட்டமே அதுவாகத்தான் இருக்கும். போக்குவரத்து நெரிசலைவிட மோசமான நெரிசல் இந்திய சிறைச்சாலைகளில்தான் காணப்படுகிறது. 2008 புள்ளிவிவரப்படி, இந்தியாவிலுள்ள மொத்தம் 1,356 சிறைச்சாலைகளில், 3,84,753 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை 2,97,777. ஏறத்தாழ 88 ஆயிரம் பேர் அதிகமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கைதிகள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருக்கின்றன என்பது ஒருபுறம். சிறைச்சாலை ஊழியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட 68,920-க்குப் பதிலாக 49,250தான் காணப்படுகிறது என்கிறது தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம். நீதிமன்றங்களின் நிலைமை அதைவிட மோசம். மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. பத்து லட்சம் மக்கள்தொகைக்குக் குறைந்தது 50 நீதிபதிகள்கூட இல்லாத நிலைமையில் வழக்குகளை விரைந்து முடித்து, விசாரணைக் கைதிகளுக்கு இறுதித் தீர்ப்பு வழங்குவது எப்படி? ராய் வர்கீஸýக்கு ஏற்பட்ட நிலைமை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். ஏதாவது வெளியூரில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தேக வழக்கில் அழைத்துச் செல்லப்பட்டு ஏதாவது பெயரில் விசாரணைக் கைதியாக்கப்படலாம். இதைப் பற்றி மக்கள் மன்றம் கவலைப்பட மறுக்கிறதே, அதுதான் கவலையளிக்கிறது!
- தினமணி தலையங்கத்திலிருந்து...
நன்றி குருத்து http://socratesjr2007.blogspot.com/2011/02/blog-post_21.html
வெல்லட்டும் சட்டக்கல்லூரி மாணவர் போராட்டம்.
(5/3/2011 அன்று பொதுநல மாணவர் சங்கம் தலைமையில் மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் கலந்து கொண்டு பேசிய உரை )
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாவது நாளாக உள்ளிருப்புப்போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களையும் . அதை சற்றும் செவி சிக்காத இந்த செவிடர்களுக்கு கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே எனக்கு முன்னாடி பேசிய மாணவர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரினார் . ஒரு கமிஷன் அமைத்து விசாரியுங்கள் என்று . கமிஷன் எல்லாம் கூட அமைக்க தேவையில்லை இந்த கோவை நகர வீதிகளிலே கொஞ்சம் நடந்து பாருங்கள். அனைத்து மாணவர் சங்கங்களும் பேராசிரியை தாமிரை செல்வியின் சாதீய சிந்தனைகளுக்கு எதிராக போஸ்டர் போட்டுள்ளனர். சங்க பரிவாரங்களின் ABVP மட்டும் தமிரை செல்வியை ஆதரித்து போஸ்டர் போட்டுள்ளனர். மாலேகானில் குண்டுவைத்தவர்கள் சேர்ந்து மாணவ மனங்களில் நஞ்சு வைப்பவவளை ஆதரிக்கின்றன. இதிலிருந்தே தெரியவில்லையா இந்த பேராசிரியையின் உண்மை முகம். இன்று நாடாளும் மன்னருக்கு தெரியாத சங்க இலக்கியமில்லை. தன் மடிமீது வந்து விழுந்த புறாவுக்காக தன் தொடை சதையே அருத்துக்கொடுத்தானாம் துரத்தி வந்த வல்லூறுக்கு சிபி சக்கிரவர்த்தி மன்னன் . தொடை சதையெல்லாம் வேண்டாம் கொஞ்சம் செவி மட்டும் தாருங்கள் எங்கள் பிரச்னைக்கு என்பதே இன்றைய மாணவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இன்றைய மாணவர் நிலை எப்படி இருக்கிறது நம்ம நாட்டில். சென்னையில் கல்லூரி மாணவி திவ்யா நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறாள் . சடலமாக வீடு திரும்பிய மாணவி தன் சடலத்திற்கு தூக்கிட்டு கொல்கிறாள். கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியிலோ மதுரையிலிருந்து மெரிட்டில் படிக்கவந்த டூ வீலர் மெக்கானிக்கின் மகனோ மேட்டுக்குடி""குடிகார"" மாணவர்களால் மன்னிக்கவும் கொலைகார மாணவர்களால் ராக்கிங் செய்யப்பட்டு விடுதியின் மாடியிலிருந்து கீழே வீசி எறியப்பட்டு தன் வாழ்க்கையே இருண்டு கிடக்கிறான் . அதை வழக்காக பதியவே மிகக்கடுமையாக போராடவேண்டிவந்தது. அதன் பிறகே காவல் துறை முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்தது.சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டது மனுநீதி இன்று வசதியின் அடிப்படையில் கல்வி மறுக்கப்படுது புதிய மனுநீதி . பாரதி கூட இப்போதிருந்திருந்தால் ''காலை எழுந்தவுடன் படிப்பு'' - ''மாலை முழுதும் விளையாட்டு" எனும் தன் வரிகளை "மாலை முழுதும் போராட்டம்" என பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா என பாடியிருப்பான் அப்படி இருக்கு இன்றைய மாணவர்களின் நிலை.
சட்டக்கல்லூரியை பொறுத்தவரை மற்ற கல்லூரிகளுக்கும் இந்த கல்லூரிக்கும் ஒரு வித்யாசம் இருக்கு . மற்றகல்லூரி மாணவர்களை சாதீயை சொல்லி திட்டினால் உடனடியாக என்ன மாதிரி நடவடிக்கைக்கு போவது அல்லது சாதி சொல்லி திட்டினால் IPC யின் எந்த என்னில் என்ன சொல்கிறது சட்டம். போன்ற விவரங்கள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை . ஆனா சட்டக்கல்லூரியில் அந்த சட்டங்களை பயிற்றுவிக்கும் ஒரு பேராசிரியரே அதே சட்டத்தை பயிலும் மாணவர்களை சாதியின் பெயரால் இழிவு படுத்துகிறார் என்றால் அதன் உள்ளர்த்தம் என்ன அதை நாம் எப்படி விளங்கிக்கொள்வது . சட்டத்தை பயிற்ருவிக்கும் பேராசிரியை அந்த சட்டத்தையும் அதை பயிலும் மாணவர்களையும் மயிருக்கும் சமமாக மதிக்கவில்லை என்பதுதானே. எனவே மாணவர்களே அவர் மதிக்காத சட்டங்களை நாமும் மதிக்காமல் ஆகிவிடும் ஒரு நிலைக்கு இந்த அரசாங்கம் நம்மை தள்ளிவிடாமல் இருக்கட்டும். பத்தாவது நாளாக போராட்டம் தொடர்கிறது இந்த பத்தாவது நாள் என்பதே காலம் கடந்து விட்டதாகவே எண்ணுகிறேன் . இனியும் காலதாமதப்படுத்தினால் எங்கள் சட்டக்கல்லூரியிலிருந்தும் எகிப்தின் அஸ்மா மக்பூஸ்கள்
பிறப்பெடுத்துவிடும் அபாயம் இருக்கிறது என்று இந்த அரசை எச்சரித்துக்கொள்கிறேன்.
யாரும் தராத கைவிலங்குகளின் சாவியினிதேவையில்லை இத்துப்போய்க்கொண்டிருக்கின்றன பழங்காலத்து இரும்புகள் எனும் கவிதை வரிகளை மைப்பித்துக்கொண்டு இருக்கின்றன. துனிசியாவை தொடர்ந்து அரபுலகில் பரவிக்கொண்டிருக்கும் போராட்டங்கள். எனவே மாணவர்களே நீங்கள் நம்பிக்கை இழந்துவிடவேண்டாம். அந்த போராட்ட வரலாற்றில் இந்தியாவும் இடம் பிடிக்க புறக்கணிக்கப்படும் உங்கள் போராட்டம் கூட ஒரு விதையா இருக்கலாம். தட்டுங்கள் திறக்கப்படும் என்பது பழமொழி. அது பழமொழியாகே இருக்கிறது . திறக்காத கதவுகளையெல்லாம் தகர்த்தெறிவோம் எனும் புதுமொழி படைப்போம் என முடித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.
புதன், 2 மார்ச், 2011
ஊ........ழல்
ஊழல் இந்தவார்தையை பயன்படுத்தாத அரசியல்வாதிகலுமில்லை ஊழலை அனுபவிக்காத அரசியல்வாதிகலுமில்லை. இது எளிதாக எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடிகிறது . நாம் கவனிக்க தவறிய அல்லது முதலாளித்துவ ஊடகங்கள் திட்டமிட்டே மூடி மறைக்கும் மற்றொரு விஷயம் இருக்கிறது . அதாவது இந்த ஊழலால் அதிகமாக ஆதாயம் அடைவோர் யார் அல்லது இதுபோன்ற ஊழல்கள் யாருடைய நலன்சார்ந்து நடத்தப்படுகிறது என்பதே அந்த மறைக்கப்படும் உண்மை. அதிகார மாற்றம்(போலி சுதந்திரம்) நடந்துமுடிந்த பின்பு இந்தியாவில் நடந்த முதல் ஊழல் முந்த்ரா ஊழல். இதன் சாரம் என்ன முந்த்ரா எனும் ஒரு முதலாளியின் நலனுக்காக நடத்தப்பட்டதே இந்த ஊழல். நேருவின் மந்திரிசபையில் இருந்த T.T .K கிருஷ்ணமாச்சாரி என்பவரால் நடத்தப்பட்ட ஊழல் . அந்த ஊழலின் மதிப்பு ஒன்றேகால் கோடி . இந்த ஊழல் வெளியே வந்ததும் வெட்க்கித்தலைகுனிவதாக அறிவித்தார் அன்றைய பிரதமர் நேரு. அன்று அவர் அறிவிப்பிலாவது வெட்கித்தலைகுனிந்தார் இன்றோ ஊழலை கூட பகிரங்கமாக ஆதரித்து அதற்க்கு வக்காலத்து வாங்கிகிறார்கள் தலைவர்கள். இதெர்க்கெல்லாம் என்ன காரணம். மக்களாகிய நமது மௌனமே அவர்களுக்கு நாம் வழங்கும் சம்மதமாக அவர்கள் கருதிக்கொண்டதே உண்மையான காரணம். ஒன்னேகால் கோடியில் துவங்கிய முந்த்ரா ஊழல் படிப்படியாக வளர்ந்து இன்றைய ஸ்பெக்ட்ரம் 1 ,70 ,000 கோடியை தொட்டது எப்படி. ஒவ்வொரு ஆட்சியிலும் ஒரு வரலாறு காணாத ஊழல். முந்த்ரா ஊழல் தொடங்கி ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை பலனடைந்ததும் ஊழல் அம்பலப்படுத்தியதும் முதலாளிகளே . தனக்கு கிடைக்காத சலுகைகள் தன் சக போட்டியாளருக்கு கிடைப்பதால் எழுந்த ஆத்திரமே வயிற்ரெரிச்சலே இந்த ஊழல்கள் அம்பலமாவதர்க்கு காரணமாகிறது. பின் இந்த ஆட்சியின் வரலாறு காணாத ஊழலை தேர்தலுக்கு பயன்படுத்தி தனக்கு தோதான ஆட்களையும் ஆட்சியையும் கொண்டுவந்து தனக்கான ஆதாய நலன்களை அரசின் திட்டமாகவே நிறைவேற்றிவிடுவது. நாமும் ஒவ்வொருமுறையும் இவர்களால் ஊழல் வரலாறு மாற்றப்ப்படும்பொழுது இதற்க்கு முந்தய ஊழலே பரவாஇல்லை எனவே அவர்களுக்கே வாக்களிப்போம் என்று இருந்துவிடுகிறோம் .இவர்களுக்கும் மக்களை பற்றி என்ன எண்ணம் இருக்கு . எனவே ஒவ்வொருமுறையும் நமது மௌனம் மட்டுமே நமெக்கெதிரான ஆயுதமாக நமேக்கே பயன்படுத்தப்படுகிறது . எல்லா அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு முறையும் ஊழலுக்கு எதிராக நம்மை அணிதிரள சொல்லி மாற்று கட்சிக்கு அதாவது சென்றமுறை ஊழல் புரிந்தவர்களுக்கு வாக்களிக்க பாதை காட்டுகின்றனர். மாறாக இம்முறை நாம் நம் மௌனங்களை உடைத்தெறிந்துவிட்டு அணிதிரள்வோம் இந்த ஊழலுக்கு எதிராக. எப்படி மீண்டும் ஒரு ஊழல்வாதியை தேர்ந்தெடுப்பதர்க்காக அல்லாமல் ஊழல் நம்மிடமிருந்து ஆட்டயப்போட்ட சொத்துக்களை பறித்தெடுப்போம் எனும் முழக்கத்தை எந்த அரசியல் கட்சி முன்வைக்குமோ அந்த அரசியல் கட்சியுடன் . அணிதிரள்வோம் பறித்தெடுப்போம்.
முந்த்ரா முதல் ஸ்பெக்ட்ரம் வரை நடந்த அனைத்து ஊழல்களும் உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள் என சொல்லிக்கொள்ளும் அம்பானி போன்ற முதலாளிகளின் திட்டப்படியே நடந்ததாகும். அம்பானி, நுஸ்லிவாடியா , டாட்ட , போன்ற பெரும் முதலாளி (பணமுதலைகளின்) வியாபார போட்டியே இந்த ஊழல்கள் அம்பலமாக காரணமுமாகும்.
முதலாளிகளின் நலன் சார்ந்தே ஊழல்கல் நடத்தப்படுகிறது என்பதை அறிய இந்த சுட்டியை பார்க்கவும்
http://www.vinavu.com/2011/01/06/the-telecom-scam/
http://www.vinavu.com/2011/01/04/a-spectrum-of-corporate-criminals/
முந்த்ரா முதல் ஸ்பெக்ட்ரம் வரை நடந்த அனைத்து ஊழல்களும் உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள் என சொல்லிக்கொள்ளும் அம்பானி போன்ற முதலாளிகளின் திட்டப்படியே நடந்ததாகும். அம்பானி, நுஸ்லிவாடியா , டாட்ட , போன்ற பெரும் முதலாளி (பணமுதலைகளின்) வியாபார போட்டியே இந்த ஊழல்கள் அம்பலமாக காரணமுமாகும்.
முதலாளிகளின் நலன் சார்ந்தே ஊழல்கல் நடத்தப்படுகிறது என்பதை அறிய இந்த சுட்டியை பார்க்கவும்
http://www.vinavu.com/2011/01/06/the-telecom-scam/
http://www.vinavu.com/2011/01/04/a-spectrum-of-corporate-criminals/
புதன், 23 பிப்ரவரி, 2011
மன்னித்துவிடுங்கள் முத்துக்குமாரர்களே.......
ஹாஸ்னி முபாரக் என்ற ஆட்சியாளனின் கொடுமை தாங்கமுடியாமல் நான்கு இளைஞர்கள் தங்கள் உடலுக்கு தீ வைத்து எரிந்து போனார்கள் எகிப்த்தில்
அந்த நெருப்பின் அரசியல் வெப்பத்தை உள்வாங்கி அதை அந்த தேசம் முழுதும் விதைத்தால் அஸ்மா மக்பூல் எனும் 26 வயது பெண். தன் தேசம் மாற்றம் காண ஏதாவது செய்யவேண்டும் என நினைத்த அவள் தன் பேஸ் புக்கில் ஒரு ஸ்டேடஸ் போட்டால் "தீக்குளித்த நான்கு இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்த தஹ்ரீக் சதுக்கத்துக்கு நான் செல்ல இருக்கிறேன் என்னைப்போல சிந்தனையுடைய எவரும் வரலாம்" என்பதே அந்த ஸ்டேடஸ். இந்த ஸ்டேடஸ் பார்த்து மூன்று இளைஞர்கள்தான் வந்திருந்தனாறாம் கூடவே காவல்துறையும். காவல்துறை அவர்களை கைது செய்து விசாரணை நடத்திவிட்டு எச்சரித்து அனுப்பியது.
திரும்பி வந்த அஸ்மா அச்சமடையவில்லை.அமைதியாகிவிடவில்லை. இம்முறை பேஸ் புக்கில் அவளே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டாள். அதில் "தங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால் இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் ஜனவரி 25 ஆம் தேதி நாம் போராட்டத்தில் குதிக்கவேண்டும் அன்று யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் தனியாக செல்வேன். தீ குளிப்பதற்காக அல்ல என்னை சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை நீங்கள் உங்களை ஆணாக கருதினால் வாருங்கள்" என்று ஆவேசமாகவும் "அல்லாஹுவை தவிர வேறு எந்த சக்த்திக்கும் அஞ்சாதீர்கள்" என நம்பிக்கையூட்டும் விதமாகவும் பேசியிருந்தால் .
ஜனவரி 26 ல் தேசத்தின் எல்லா திசைகளிலிருந்தும் தஹ்ரீக் சதுக்கத்தை தேடிவந்தனர் மக்கள்.
மக்கள் ஆம் மக்கள் மக்கள் மட்டுமே மாற்றத்தின் உந்து சக்தி என்று மாவோ சொன்னதை நிறைவேற்றிவிட்டே கலைந்து சென்றது அந்த மக்கள் கூட்டம் . ஊழல் ஒழியட்டும், குடும்ப ஆதிக்கம் முடியட்டும், முபாரக் பதவி விலகட்டும் என்பதற்கு மாற்றாக எந்தவித சமரச முயற்சிகளும் அந்த மக்கள் முன் எடுபடவேயில்லை.
முத்துக்குமரா அந்த எகிப்திய இளைஞர்கள் உன்போல ஆழமான மரணசாசனத்தையோ. அல்லது சடலத்தையே ஆயுதமாக்க நீ வழிகாட்டியதுபோலவோ ஒன்றும் செய்ததாக தெரியவில்லை. எனினும் அவன் விட்டுசென்ற நெருப்பு ஆட்சியாளர்களை பொசுக்கியது. இங்கு ஏன் அப்படி ஒரு நிலை வரவில்லை புவியியல்,நம்நாட்டின் வர்கத்தன்மை என்ற ஆராய்ச்சிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி எங்களுக்கு தெரியவருவதேல்லாம். ஒன்றே ஒன்றுதான் எகிப்து மக்களுக்கு எம்மக்கள் போன்று வாய்ஜாலம், வார்த்தை ஜாலம், உள்ள தன்னால தலைவர்கள் இல்லை என்பதே அங்கே மக்கள் தங்களை நம்பி வீதிக்குவந்தனர். இங்கோ ஓட்டுக்கு ஆதாயம் தேடும் தலைவர்களை நம்பியும் அவர்களின் சொல்லை நம்பியும் வீதிக்கு வருபவர்களாகவே இருக்கிறோம். உனது விசயத்தில் கூட உனது மரணசாசனத்தை மாணவர்களிடமும், மக்களிடமும் கொடுத்து இதுதான் இவனது இருதியாசை இனி ஆகவேண்டியதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லியிருந்தால் நிலைமாறியிருக்கும். மாறாக தலைவர்களிடம் சிக்குண்டு அனைபோடப்பட்டது உனது போராட்டம். இவ்வளவுக்கு பிறகும் தங்கள் தேர்தல் நலனுக்காக தலைவர்கள் தாங்கி பிடிக்கின்றனர் உனது புகைப்படத்தை. ஈழப் படுகொலைக்காக இரட்டைலைக்கு ஓட்டு கேட்ப்போரே தர்மபுரியில் நெருப்பில் மாண்டுபோன மாணவிகள் உன் உறவுகள் இல்லையா என நீ கேள்வி எழுப்புவது புரிகிறது. கொஞ்சம் அவகாசம் கொடு அதற்கும் பதில் தருவார்கள் தங்கள் வார்த்தை ஜாலத்தால். எங்கள் ரசிக குஞ்சுகள் அதற்கும் விசிலடிக்கும்.
எகிப்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் சாத்தியப்படும் . அதற்குள்ளாகவே உங்களுக்கான அடைக்கல தேசத்தை தேர்வு செய்துவைத்துக்கொள்ளுங்கள். .
மக்கள் ஆம் மக்கள் மக்கள் மட்டுமே மாற்றத்தின் உந்து சக்தி என்று மாவோ சொன்னதை நிறைவேற்றிவிட்டே கலைந்து சென்றது அந்த மக்கள் கூட்டம் . ஊழல் ஒழியட்டும், குடும்ப ஆதிக்கம் முடியட்டும், முபாரக் பதவி விலகட்டும் என்பதற்கு மாற்றாக எந்தவித சமரச முயற்சிகளும் அந்த மக்கள் முன் எடுபடவேயில்லை.
முத்துக்குமரா அந்த எகிப்திய இளைஞர்கள் உன்போல ஆழமான மரணசாசனத்தையோ. அல்லது சடலத்தையே ஆயுதமாக்க நீ வழிகாட்டியதுபோலவோ ஒன்றும் செய்ததாக தெரியவில்லை. எனினும் அவன் விட்டுசென்ற நெருப்பு ஆட்சியாளர்களை பொசுக்கியது. இங்கு ஏன் அப்படி ஒரு நிலை வரவில்லை புவியியல்,நம்நாட்டின் வர்கத்தன்மை என்ற ஆராய்ச்சிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி எங்களுக்கு தெரியவருவதேல்லாம். ஒன்றே ஒன்றுதான் எகிப்து மக்களுக்கு எம்மக்கள் போன்று வாய்ஜாலம், வார்த்தை ஜாலம், உள்ள தன்னால தலைவர்கள் இல்லை என்பதே அங்கே மக்கள் தங்களை நம்பி வீதிக்குவந்தனர். இங்கோ ஓட்டுக்கு ஆதாயம் தேடும் தலைவர்களை நம்பியும் அவர்களின் சொல்லை நம்பியும் வீதிக்கு வருபவர்களாகவே இருக்கிறோம். உனது விசயத்தில் கூட உனது மரணசாசனத்தை மாணவர்களிடமும், மக்களிடமும் கொடுத்து இதுதான் இவனது இருதியாசை இனி ஆகவேண்டியதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லியிருந்தால் நிலைமாறியிருக்கும். மாறாக தலைவர்களிடம் சிக்குண்டு அனைபோடப்பட்டது உனது போராட்டம். இவ்வளவுக்கு பிறகும் தங்கள் தேர்தல் நலனுக்காக தலைவர்கள் தாங்கி பிடிக்கின்றனர் உனது புகைப்படத்தை. ஈழப் படுகொலைக்காக இரட்டைலைக்கு ஓட்டு கேட்ப்போரே தர்மபுரியில் நெருப்பில் மாண்டுபோன மாணவிகள் உன் உறவுகள் இல்லையா என நீ கேள்வி எழுப்புவது புரிகிறது. கொஞ்சம் அவகாசம் கொடு அதற்கும் பதில் தருவார்கள் தங்கள் வார்த்தை ஜாலத்தால். எங்கள் ரசிக குஞ்சுகள் அதற்கும் விசிலடிக்கும்.
எகிப்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் சாத்தியப்படும் . அதற்குள்ளாகவே உங்களுக்கான அடைக்கல தேசத்தை தேர்வு செய்துவைத்துக்கொள்ளுங்கள். .
வெள்ளி, 4 பிப்ரவரி, 2011
தேர்தல் வந்து தீர்ந்தது என்ன ?
தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது டீக்கடை, பேருந்து, பேஸ் புக், வலைப்பூக்கள் எங்கும் விவாதங்களும் யார் ஜெயிக்கப்போவது என்ற ஆரூடங்களும் பார்க்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருகிறது . டீ கடை விவாதத்திற்கும் பேஸ் புக் விவாதத்திற்கும் வித்யாசம் ஒன்றே டீ கடையில் விவாதிப்போர் அம்மா ஆட்சி வந்தா பணப்புழக்கம் உண்டாகும் வறுமை குறையும்கிறான் பேஸ் பூக்ல விவாதிப்போர் அம்மா ஆட்சி வந்தா மீனவர் துயர் தீரும்கிறான் .இங்கே ஜெயிப்பது யாராக இருந்தாலும் தோற்ப்பது நிச்சியம் மக்களாகிய நாமே. தமிழ் தேசியவாதிகளோ BJP வந்தாலும் பரவாஇல்லை காங்கிரஸ் வரவே கூடாது என்கிறார்கள் துரோகிக்கு எதிரியே மேல் என்று விளக்கம் சொல்லப்படுகிறது எனவே இரண்டுமே மக்களுக்கானதில்லை என்பதை இவர்களே மறுக்கவில்லை.இசுலாமியர்களோ காங்கிரஸ் வந்தாலும் பரவாஇல்லை BJP வரவே கூடாது என்கின்றனர் (காங்கிரசையும் BJP யையும் இங்கே தமிழகத்தில் திமுக ,ஆதிமுக கூட்டணி அடிப்படயில் பார்க்கின்றனர்) ஆனால் இந்த இரு கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு என்பதே காவியும் கதரும் தான் என்பதே உண்மை. BJP ஈழத்தில் துரோகமிழைத்துள்ளது காங்கிரசும் முஸ்லீம்களுக்கு துரோகமிழைத்துள்ளது (பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதே இவர்கள் ஆட்சியில்தான்). எனவே எதுவும் ஆளுபவரை பொருத்தல்ல ஆட்சிமுறையை பொறுத்தே. நாடகம் என்னவோ பழசுதான். நடிகர்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றனர். சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்ற கற்பனை ஒரு அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட போதும்கூட இந்த நாடகம் மக்களிடம் செல்லுபடியாகிக் கொண்டே இருக்கிறது. மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய அறியாமை நடிகர்களை புதுப்புது வேடம்கட்ட தூண்டிக்கொண்டே இருக்கிறது. இந்த அறியாமைல் மாட்டிக்கொண்ட நடுத்துதர வர்க்கமோ தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்றும் அதை அலட்சியம் செய்வது தேசவிரோதம் என்றும் சாடுகின்றனர் தேசமே இல்ல எங்கபோய் தேசவிரோதம்? நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளோ?!?! கட்சியை பார்க்காதீர்கள் வேட்ப்பாளரை பாருங்கள் என்று தங்கள்பங்குக்கு தேசப்பற்றை பறைசாட்டுகின்றனர் இவர்கள்மட்டுமா புரட்சியாளர்களின் புகைப்படங்களை மூலதனமாகக்கொண்டு கட்சி நடத்தும் பாராளுமன்ற புரட்சிக்கட்சியின் தலைவரும் கூட ஸ்பெக்ட்ரம் ஊழல் குழப்பம் குழாய்அடி சண்டை பாராளுமன்றத்தில் நடந்தபொழுது இதையே இப்படி சொன்னார் "நாம் நமக்குள் சண்டை இட்டுக்கொல்லாமல் பாராளுமன்றத்தை காக்கவேண்டும்" என்று . ஆனால் உண்மை என்ன கட்சியை பார்க்காமல் வேட்ப்பாளரை மட்டுமே பார்த்து என்னபயன் என்பதை சற்று அறிவுப்பூர்வமாக அவர்கள் நமக்கு விளக்கினால் தேவலை . முதலில் நம் பாராளுமன்றம் உருவானவிதமே ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பனியின் நலனுக்கானதுதனே .பிறகு மக்களின் போராட்டங்கள் வலுவடைவதை கண்டே பாராளுமன்றத்தில் எதிரகட்சிமுறையை கொண்டுவந்தார்கள் அதற்காக ஆக்டேவியஸ் ஹுயும் என்பவனால் உருவாக்கப்பட்டதே இன்று நம்மை ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி. அதன் பிறகு உலக வரலாற்றில் நிகழ்ந்த மாற்றங்களால் இந்தியாவைவிட்டு வாசல் வழி வெளியேறி பொடக்கால (கொள்ளிப்புரம்)வழிய நம்மை இன்றும் ஆள்வது இதுபோன்ற கம்பனிகளே. உதாரணமாக காட் ஒப்பந்தம் நாம் கட்சியை பாராமல் என்னதான் நல்லவனை தேர்ந்தெடுத்து அனுப்பினாலும் அவனால் பாராளுமன்றத்தில் பன்னாட்டுக்கம்பானிகளை பற்றிய கேள்விகளை அங்கே முன்வைக்கமுடியாது(இது காட் ஒப்பந்தத்தில் உள்ளது). அப்புறம் தமிழர் பிரச்சனை அதற்கும் இந்த கொள்கைகளே காரணம் ஈழ தோல்விக்கு காரணம் அந்தோணி அப்படின்னு சொல்லிட்டு வந்தோம் இப்போ என்ன நிலைமை அந்தோணிக்கு பதில் நம்ம தமிழன் ப.சிதம்பரம் சட்டீஸ்கர்ல மக்கள் கொல்லப்படுகிறார்கள் இது யாருடைய நலனுக்கு நடந்ததோ அதே நலனுக்குத்தான் ஈழமும் பலிகொள்ளப்பட்டது.அவ்வாறின்றி ஈழத்திற்கு மலையாளிகளையும் ஹிந்திக்காரர்களையும் குறை கூறினால் நமக்கு உடன்பாடில்லாமலே சிதம்பரம் நடத்தும் படுகொலைகளுக்கு தமிழர்களை குறைகூருவதுபோலாகும் . ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் கூட யாருடைய நன்மைக்கானது என்பதை நம்முடைய ஊடகங்கள் சொல்வதேயில்லை ஆ.ராசாவுக்கு பதில் நாளை அதே இடத்தில் ஹெச்.ராசா வரலாம் அனாலும் இந்த ஊழல் இதே வர்க்க நலனுக்கு வேறுவடிவில் நடந்தே தீரும் . நாம் போடாட்டி நம்ம வாக்க வேறொருத்தன் போட்டுருவான் என்னும் அறிவார்ந்த வாதங்கள் வைக்கிறார்கள் சிலர் நம் வாழ்வையே திருடிவிட்டவர்கள் நம் வாக்கை திருடுவது பற்றி நமக்கென்ன அக்கறை வேண்டிக்கிடக்கு. இறுதியாக தேர்தல் புறக்கணிப்பு என்பது வன்முறையல்ல ஜனநாயகத்தில் அதற்கும் இடமுண்டு (குடும்ப அடையாள அட்டை திருப்பிக்கொடுப்பது தேர்தல் புறக்கணிப்பு போன்ற எல்லா போராட்ட வடிவங்களும் நம் நாட்டிலேயே நடந்துள்ளது இதற்க்கு முன்பும்) எனவே தமிழர் இசுலாமியர் என்பதல்ல பிரச்சனை எந்த வர்க்கம் என்பதே பிரச்சனை எனவே உழைக்கும் வர்க்கமாக ஒரு மாற்றத்தை முன்னெடுப்போம் உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைவோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)