சனி, 5 மார்ச், 2011

வெல்லட்டும் சட்டக்கல்லூரி மாணவர் போராட்டம்.


(5/3/2011 அன்று பொதுநல மாணவர் சங்கம் தலைமையில் மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் கலந்து கொண்டு பேசிய உரை )

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாவது நாளாக உள்ளிருப்புப்போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களையும் . அதை சற்றும் செவி சிக்காத இந்த செவிடர்களுக்கு கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே எனக்கு முன்னாடி பேசிய மாணவர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரினார் . ஒரு கமிஷன் அமைத்து விசாரியுங்கள் என்று . கமிஷன் எல்லாம் கூட அமைக்க தேவையில்லை இந்த கோவை நகர வீதிகளிலே கொஞ்சம் நடந்து பாருங்கள். அனைத்து மாணவர் சங்கங்களும் பேராசிரியை தாமிரை செல்வியின் சாதீய சிந்தனைகளுக்கு எதிராக போஸ்டர் போட்டுள்ளனர். சங்க பரிவாரங்களின் ABVP மட்டும் தமிரை செல்வியை ஆதரித்து போஸ்டர் போட்டுள்ளனர். மாலேகானில் குண்டுவைத்தவர்கள் சேர்ந்து மாணவ மனங்களில் நஞ்சு வைப்பவவளை ஆதரிக்கின்றன. இதிலிருந்தே தெரியவில்லையா இந்த பேராசிரியையின் உண்மை முகம். இன்று நாடாளும் மன்னருக்கு தெரியாத சங்க இலக்கியமில்லை. தன் மடிமீது வந்து விழுந்த புறாவுக்காக தன் தொடை சதையே அருத்துக்கொடுத்தானாம் துரத்தி வந்த வல்லூறுக்கு சிபி சக்கிரவர்த்தி மன்னன் . தொடை சதையெல்லாம் வேண்டாம் கொஞ்சம் செவி மட்டும் தாருங்கள் எங்கள் பிரச்னைக்கு என்பதே இன்றைய மாணவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இன்றைய மாணவர் நிலை எப்படி இருக்கிறது நம்ம நாட்டில். சென்னையில் கல்லூரி மாணவி திவ்யா நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறாள் . சடலமாக வீடு திரும்பிய மாணவி தன் சடலத்திற்கு தூக்கிட்டு கொல்கிறாள். கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியிலோ மதுரையிலிருந்து மெரிட்டில் படிக்கவந்த டூ வீலர் மெக்கானிக்கின் மகனோ மேட்டுக்குடி""குடிகார"" மாணவர்களால் மன்னிக்கவும் கொலைகார மாணவர்களால் ராக்கிங் செய்யப்பட்டு விடுதியின் மாடியிலிருந்து கீழே வீசி எறியப்பட்டு தன் வாழ்க்கையே இருண்டு கிடக்கிறான் . அதை வழக்காக பதியவே மிகக்கடுமையாக போராடவேண்டிவந்தது. அதன் பிறகே காவல் துறை முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்தது.சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டது மனுநீதி இன்று வசதியின் அடிப்படையில் கல்வி மறுக்கப்படுது புதிய மனுநீதி . பாரதி கூட இப்போதிருந்திருந்தால் ''காலை எழுந்தவுடன் படிப்பு'' - ''மாலை முழுதும் விளையாட்டு" எனும் தன் வரிகளை "மாலை முழுதும் போராட்டம்" என பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா என பாடியிருப்பான் அப்படி இருக்கு இன்றைய மாணவர்களின் நிலை.
சட்டக்கல்லூரியை பொறுத்தவரை மற்ற கல்லூரிகளுக்கும் இந்த கல்லூரிக்கும் ஒரு வித்யாசம் இருக்கு . மற்றகல்லூரி மாணவர்களை சாதீயை சொல்லி திட்டினால் உடனடியாக என்ன மாதிரி நடவடிக்கைக்கு போவது அல்லது சாதி சொல்லி திட்டினால் IPC யின் எந்த என்னில் என்ன சொல்கிறது சட்டம். போன்ற விவரங்கள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை . ஆனா சட்டக்கல்லூரியில் அந்த சட்டங்களை பயிற்றுவிக்கும் ஒரு பேராசிரியரே அதே சட்டத்தை பயிலும் மாணவர்களை சாதியின் பெயரால் இழிவு படுத்துகிறார் என்றால் அதன் உள்ளர்த்தம் என்ன அதை நாம் எப்படி விளங்கிக்கொள்வது . சட்டத்தை பயிற்ருவிக்கும் பேராசிரியை அந்த சட்டத்தையும் அதை பயிலும் மாணவர்களையும் மயிருக்கும் சமமாக மதிக்கவில்லை என்பதுதானே. எனவே மாணவர்களே அவர் மதிக்காத சட்டங்களை நாமும் மதிக்காமல் ஆகிவிடும் ஒரு நிலைக்கு இந்த அரசாங்கம் நம்மை தள்ளிவிடாமல் இருக்கட்டும். பத்தாவது நாளாக போராட்டம் தொடர்கிறது இந்த பத்தாவது நாள் என்பதே காலம் கடந்து விட்டதாகவே எண்ணுகிறேன் . இனியும் காலதாமதப்படுத்தினால் எங்கள் சட்டக்கல்லூரியிலிருந்தும் எகிப்தின் அஸ்மா மக்பூஸ்கள்
பிறப்பெடுத்துவிடும் அபாயம் இருக்கிறது என்று இந்த அரசை எச்சரித்துக்கொள்கிறேன்.
யாரும் தராத கைவிலங்குகளின் சாவியினிதேவையில்லை இத்துப்போய்க்கொண்டிருக்கின்றன பழங்காலத்து இரும்புகள் எனும் கவிதை வரிகளை மைப்பித்துக்கொண்டு இருக்கின்றன. துனிசியாவை தொடர்ந்து அரபுலகில் பரவிக்கொண்டிருக்கும் போராட்டங்கள். எனவே மாணவர்களே நீங்கள் நம்பிக்கை இழந்துவிடவேண்டாம். அந்த போராட்ட வரலாற்றில் இந்தியாவும் இடம் பிடிக்க புறக்கணிக்கப்படும் உங்கள் போராட்டம் கூட ஒரு விதையா இருக்கலாம். தட்டுங்கள் திறக்கப்படும் என்பது பழமொழி. அது பழமொழியாகே இருக்கிறது . திறக்காத கதவுகளையெல்லாம் தகர்த்தெறிவோம் எனும் புதுமொழி படைப்போம் என முடித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக