சனி, 24 ஜூலை, 2010
மலையாளியுடன் ஓர் உரையாடல்
என் தந்தையின் கண் புரை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சென்றிருந்தேன் அப்பொழுது தன தாயின் கண் புரை சிகிச்சைக்காக பாலக்காட்டிலிருந்து வந்திருந்த அப்பு என்ற மலையாளியுடன் நான் பேசிய அல்லது விவாதித்த விசயங்களை கண்டிப்பாக எழுதியே ஆகவேண்டும் என்று தோன்றியது.
இனி எங்கள் உரையாடல் உங்கள் பார்வைக்காக....
அவருக்கும் எனக்குமான அறிமுகமெல்லாம் முடிந்த பிறகு,
அப்பு:-மலையாளிகள் என்றாலே ஒருவித வெறுப்புடன் தான் பார்கிறீர்கள் இல்லையா?
நான்:-ஆம், பின்னே ஈழத்து போரின் பின்னடைவிற்கு நீங்கள் தானே காரணம்.
அப்பு:-எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்?
நான்:- சிவசங்கரன் மேனன் உங்க ஆளுத்தானே அவன் தானே ஈழத்திற்கு சென்று ஆலோசனைகள் வழங்கினான்
அப்பு:- ஆம், அவர் ஒரு மலயாளித்தான் தோழர்... மன்னிக்கவும் நான் உங்களை தோழர் என்று அழைக்கலாமா?
நான்:-ம்ம்ம்...
அப்பு:-அவர் மலையாளித்தான் ஆனால் மலையாளிகளின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல. மாறாக இந்தியாவின் அதிகாரவர்க்க பிரதிநிதி. அதில் எல்லா இந்தியதேசிய இனத்தவரும் உள்ளனர். அதுமட்டுமல்ல ஈழம், காஷ்மீர், பாலஸ்தீனம், ஈராக், இந்தியாவின் தண்ட காருண்யா காடுகள் போன்ற உலகின் அனைத்து ஆக்கிரமிப்பு போருக்கும் ஒரேயொரு பொதுக்காரணி தான் இருக்கிறது. முதலாளித்துவத்தின் முன்னேறிய வடிவமாகிய ஏகாதிபத்தியம் தான் அந்தக்காரணி. அது தன பாத்திரத்தை மறைக்க வெவ்வேறுக் காரணங்களை சொல்கிறது. உதாரணமாக ஈராக்கில் பயங்கர அழிவு ஆயுதங்கள் இருப்பதாக சொல்லி நியாயப்படுத்தியது. இன்னும் சிவசங்கரன் மேனன் அல்லாமல் உங்கள் ஊர் திருமாவளவனோ, மருத்துவர் ராமதாசோ அல்லது வைகோவோ அந்த பதவியில் இருந்தாலும் இதையேத்தான் செய்திருப்பர். இங்கு நான் ஒன்றை குரிப்புட்டே ஆகவேண்டும். இலங்கை சென்ற திருமாவிடம், இனவெறியன் ராஜபக்ஷே இப்படி சொன்னானாம், நல்ல வேலையாக போர்க்காலங்களில் நீங்கள் பிரபாகரனுடன் இல்லை, இருந்திருந்தால் இன்று இருந்திருக்கமாட்டீர்கள் என்று. அதற்க்கு புன்னகஎயமட்டுமே பதிலாகத்தந்தானாம் இந்த புரட்சி தமிழன். இப்பக்கூட வைகோவை பாருங்க, புலிகளை பற்றிய ஜெ.வின் விமர்சனத்திற்கும், அறிக்கைக்கும் மௌனம் காக்கிறது இந்த பீரங்கி. எனவே இவர்கள் தமிழர்கள் என்பதையும் தாண்டி, இவர்களின் சுயநல வர்க்க உணர்வே மேலோங்கி இருக்கிறது. இன்னொரு விஷயம், சிவசங்கரன் மேனன் ஒரு பயங்கரவாதி என்பதி எனக்கும் மாற்றுக்கருத்து இல்லைத்தான். ஆனால் அவனை மலையாளிகளின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தி பார்ப்பதாக இருந்தால், தாண்டோவாட காடுகளில், ப.சிதம்பரம் தலைமையில் இந்திய அரசு தொடுத்துள்ள உள்நாட்டு ஆக்கிரமிப்பு போருக்கு ப.சி. ஒரு தமிழன் என்பதால் அவரை தமிழர்களின் பிரதிநிதியாக பார்த்து தமிழர்களை குறை கூற முடியுமா ?
சிவசங்கர மேனனை முதலாளித்துவ பயங்கரவாதி என்றில்லாமல் மலையாளி என்ற அடையாளத்தில் பார்ப்பதாக இருந்தால் .விடுதலை புலிகளுக்கு ஏராளமான உதவிகள் செய்த எம் ஜி ராமச்சந்திர நாயரை எப்படி பார்ப்பது .தள்ளாத வயதிலும் ஈழத்தில் இலங்கை அரசு செய்தது இனப்படுகொலைதான் என்று தொடர்ந்து போராடி வருகிறாரே நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவரை எப்படி பார்ப்பது அய்யர் என்ற மலையாளி என்ற அல்லது மனிதஉரிமைப்போராளி என்றா?
நான்:-அதெல்லாம் சரி இப்போ எம்.டி.வாசுதேவநாயர் என்கிற மலையாள திரைக்கதை எழுத்தாளர் ஒரு பேட்டியில் ஈழம் பற்றிய கேள்விக்கு அதைப்பற்றிய வரலாறு எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறாரே. ஒரு கலைஞன் இப்படி இருக்கலாமா? களிஞனுக்கு சமூக அக்கறை வேண்டாமா?
அப்பு:-வாசுதேவன் நாயரை விடுங்க இங்குள்ள எத்தனை கலைஞர்களுக்கு ஈழ வரலாற்றில் அக்கறையும், அறிவும் உள்ளது. வராலாறு தெரிந்த கலைஞர்...களும் என்ன செய்தார்கள் என்று தெரியாதா?
வாசுதேவ நாயர் தனக்கு தெரியாத வரலாறை தனக்கு தெரியாது என்று ஒப்புக்கொண்டது ஒரு குறைந்த நல்லதுதான். உங்கள் கமலோ வரலாறை திரித்து 2002 இல் நடந்த குஜராத் கலவரத்திற்கு (உண்மையில் அது கலவரமே அல்ல இனப்படுகொலை) 1998லேயே கோவை குண்டு வெடிப்பை நிகழ்த்தி விட்டார்கள் என்று உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படத்தை எடுத்தாரல்லவா? அதுதான் சமூக பயங்கரவாதம். தொடர்ந்து அவர் மெல்லிய சிரிப்புடன் குஜாத்தியர்களை பழிவாங்க கோவை மக்களுக்கு குண்டாமா? ஆன்னால் ஒன்று தோழர்... ஒரு பிரபலம் என்ற முறையில், எம்.டி.வாசுதேவ நாயர் தெரிந்துக்கொள்ள முற்படாமல் இருப்பது தவறுதான். ஆனால் உங்களை ஒன்று கேட்க்கின்றேன் மலையாளிகளின் பிரச்சினையாகிய பிரவாசி மலையாளி பிரச்னையை இவ்வளவு பேசும் நீங்கள் உட்பட எத்தனை பேருக்கு தெரியும்? உங்களுக்கு ஒன்று தெரியுமா? இலங்கையில் மனித நேயமுள்ள சிங்களவர்கள் கூட இருந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் சிங்கள கொட்டிய அதாவது சிங்கள புலிகள் என்று சொல்லி சிறையில் அடைத்துள்ளனர்.
நான்:-அப்போ நடிகர் ஜெயராம் கறுத்த தமிழச்சி என்றது மலையாள திமிர் தானே? இல்லை அதையும் மறுப்பீர்களா?
அப்பு:-ம்ம்ம்... ஆனால் அதைக்கூட பொத்தம் பொதுவாக மலையாலத்திமிர் என்று சொல்லிவிட முடியாது. கரணம், இன்றும் கூட கேரளாவில் அடிமட்ட உடல் உழைப்பில் ஈடுபடுத்தப்படும், ஒடுக்குப்பட்ட சாதிகளாகிய, செரமன், பறையன், ஈழுவர் என்று அழைக்கப்படுபவர்கள் கறுத்த தோலுக்கு சொந்தக்காரர்கள் தான் எனவே இந்த மலையாளிகளுக்கு அவன் கருத்தில் உடன்பட முடியாது வேண்டுமானால் நீங்கள் அதை மலையாள பார்ப்பன திமிர் என்று வைத்துக்கொள்ளலாம்.
நான்:- இறுதியாக என்னதான் சொல்லவறீங்க
அப்பு:- நல்லது தோழரே குறைந்த பட்சம் இனியும் மலையாளிகளை கோரி கூறுவதை விட்டு இதன் பின்னணியில் இருக்கும் வர்கங்களின் பாத்திரத்தை அறிந்து கொள்ள முயற்சிப்போம். தமிழர்களின் வீரமும் சளைத்ததல்ல இதே கோவையில் ராணுவ வாகனத்தை வழிமறித்து தாக்குமளவிற்கு உணர்வும் வீரமும் உள்ளவர்கள் தான் தமிழர்கள். ஆனால் அந்த உணர்வு மேலும் வீரியமாக முன்னெடுக்கப் படாமல் தேர்தல் பாதையில் தீர்வு தேடி பார்ப்பன ஜெ. வெற்றி பெற்றால் ஈழத்தில் மாற்றம்வரும் என்று மடைமாற்றப்பட்டது தான் தவறு. மீண்டும் சொல்கிறேன் தமிழர்கள் வீரமான ஒரு மரபை கொண்டவர்கள் காரணம் நானும் ஒரு தமிழன் தான் சேலத்தை பூர்வீகமாக கொண்டது எங்கள் குடும்பம். என் தந்தையின் வேலை காரணமாக கொச்சியில் குடியேறியவர்கள் நாங்கள் என் தந்தை ஒரு துறைமுக தொழிலாளி. அவர் மரணத்திற்கு பிறகு நாங்கள் பாலக்காட்டுக்கு குடியேறிவிட்டோம். இதனாலேயே என்னால் இரண்டு தரப்பையும் அறிய முடிந்தது.
தோழரே நான் பேசியதில் ஏதும் பிழையிருந்தால் மன்னித்து விடுங்கள். விடைப்பெறுகிறேன் நன்றி...
தந்தையின் பார்வைக்கு மட்டுமல்ல எனது பார்வைக்கும் நல்ல சிகிச்சை கிடைத்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
nalla irukku
பதிலளிநீக்குமலையாளிகளின் மீதான அன்பின் மாற்றம் என்பது நமக்கு ஈழப்போரின் பின்னால் தான். ஆனால் காலம் காலமாக தமிழரின் மீது மலையாளிகளுக்கு இருக்கும் வெறுப்பும், வன்ம்மும், தாழ்வான பார்வையும் ஏன் என்று கேட்டீர்களா ?? அவர்களின் திரைப்படங்களில் கூட தமிழர்களை திட்டாமல் இருப்பதில்லையே.. அதை ஏன் என்று கேட்டீர்களா ?? தமிழர்களுக்கு மலையாளிகளின் மீது ஏற்பட்ட வெறுப்புக்கு காரணம் எனது இன அழிப்புக்கு துணை போனவன் என்பதால்.. ஜெயராம், ஆர்யா, பத்மப்ரியா போன்ற நடிகர்கள் தமிழால் தமிழனால் பிழைத்துக்கொண்டு தமிழனைப்பற்றியே அவதூறாகப் பேசுவதற்க்கு அடிப்படை காரணம் என்ன என்று அவர்களால் விளக்க முடியுமா ??
பதிலளிநீக்கு//தோழரே குறைந்த பட்சம் இனியும் மலையாளிகளை கோரி கூறுவதை விட்டு இதன் பின்னணியில் இருக்கும் வர்கங்களின் பாத்திரத்தை அறிந்து கொள்ள முயற்சிப்போம். //
பதிலளிநீக்குஇதுவல்லவா ஷோஷலிசத்தின் மகிமை.