வியாழன், 28 ஜூலை, 2011
வெல்லட்டும் மாணவர் போராட்டம்..
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டங்களை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களை திரட்டியும் போராடிவருகிறது. இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஒரு அவதூறு செய்தியை தினமணி வெளியிட்டு இருந்தது அதாவது பு ம இ முவினர் பள்ளிமானவர்களை வேனில் கடத்தி போராட வைக்கின்றனர் என்பதே அந்த அவதூறு. (மேலும் விபரங்களுக்கு http://www.vinavu.com/2011/07/27/media-lies/ ) இதில் விசேசம் என்னவென்றால் தினமலத்தின் செய்திகளையெல்லாம் புரிந்துகொண்டு அம்பலப்படுத்தும் தமிழனவாதிகளில் சிலரே தினமலமாக தினமணியும் மாறிவருவதை புரிந்துகொள்ளாமலோ அல்லது அறிந்தேவோ இந்த பொய்யை அப்படியே சமூகவலைத்தலங்களின் ஊடாக பரப்பியும் பு.ம.இ.முவை கொச்சைபடுத்தியும் எழுதிவருகின்றனர். பள்ளிமாணவர்கள் போராடுவது மிகப்பெரிய தவறாம்.ஆனால் வரலாறு வேறாக இருக்கிறது .
சிட்டகாங் வீரர்கள்! அறிவீர்களா?
1930 களில் இந்தியாவெங்கும் எதிரொலித்த பெயர்கள். பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆயுதம்தாங்கிய மழலை பட்டாளங்கள். இந்த வயதில் தேசப்பற்றா வியப்புகளுக்கு பதில் சொல்லினர் "தாயை நேசிக்க மீசை முளைக்கவேண்டிய தேவையில்லையே"
மழலைகள் கூடிப்பேசின விடுதலை வேண்டும் அதற்க்கு என்ன செய்யலாம்? காவி உடுத்தலாம் கதரும் உடுத்தலாம். பிரார்த்தனை பண்ணலாம் அனுமதி பெற்று அரசியல் பற்றி அமர்ந்தும் பேசலாம். சுதந்திரம் பெற இப்படிப்பட்ட சிந்தனைகள் சூறாவளியாக சுழண்டு கொண்டிருந்த காலத்தில் புரட்சிப்பாதையே விடுதலைப்பாதை. புரட்சி என்பது பிரார்தனையல்ல, அது ஒரு மாலைநேர விருந்தில் சங்கீதம் கேட்பதை போன்றதோ, நளினமானதோ நாகரீகமானதோ அல்ல. அது ஒரு பலத்க்கார நடவடிக்கை அதை நாம் தேர்ந்தெடுக்கவில்லை நமது எதிரியே தீர்மானிக்கிறான். என்று உணர்ந்த சிட்டகாங் நெருப்புக்குஞ்சுகள் "அதிகாரம் துப்பாக்கி முனையில் இருந்துதான் பிறக்கிறது" எனவே நாமும் துப்பாக்கி தூக்குவோம் அன்னை நாட்டுக்காக ஆயுதம் ஏந்துவோம். ஆயுத போராட்டமா என்றால் ஆயுதம் வேண்டாமா? எதிரிகளிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம்(கொல்லலாம்) என்று சிந்தித்து இருளில் கரைந்தது அந்த மழலை பட்டாளம்.
மறுநாள் காலை சிட்டகாங்கில் இருந்த ஆயுதக்கிடங்கு முற்றுகை இடப்படுகிறது.ஆயுதங்களை எடுத்துக்கொண்ட மழலைகள் ராணுவத்துடன் மோதுகின்றனர் மழலையர்.
பதினான்கே வயதுள்ள "டெகரா"தான் முதல் களப்பலி. (டெகரா என்றால் வங்கமொழியில் சிறுத்தை என்று பொருளாம்) .
டெகரா வீழ்ந்துவிட்டான் ஒருவன் கத்தினான் மற்றவன் பதிலளித்தான் "டெகரா வீழவில்லை அவன் நம்மில கலந்துவிட்டான்.நாம் வீழமாட்டோம் நாம் வீழும்போது சிட்டகாங் எழும். இந்திய எழும். பிரிடீஸ் ஆட்சி ஒழியும் வரை டெகரா நம்மில் கலந்துகொண்டே இருப்பான்" அவர்கள் எழுந்தார்கள் ஆவேசமாக தாக்கினார்கள். பத்து வயது முதல் பதினான்கே வயதுள்ள குழந்தைகளிடம் போருக்கென்ற பயிற்சி எடுத்த பிரிடீஸ் சிப்பிகள் பின்வாங்கி ஓடினர் என்பதே வரலாறு. எனவே வரலாற்றில் மாணவர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் போராடுவது என்பது ஒன்றும் புதுமையல்ல அது அவசியமும்கூட.
இசுரேலிய படைகளை எதிர்த்து வீரத்துடன் போராடிய லைலா கலேத்திடம் (உலக வரலாற்றி விமானம் கடத்திய ஒரே பெண் போராளி இவர் அதுவும் இரண்டு முறை http://mugavare.blogspot.com/2011/02/blog-post_23.html) ஆவணப்பட இயக்குனர் ஒருவர் கேட்க்கிறார் "குழந்தைகளுக்கும் கூட பயிற்சி அளிக்கிரீரே இதுதேவைதானா?" காலேத் பதிலளித்தார் "என்ன செய்ய எதிரிகள் குழந்தைகளையும் அல்லவா கொல்கின்றனர்" என்று
உண்மையில் பாதிப்புக்கு உள்ளாகும் வர்க்கம் என்ற முறையில் மாணவவர்கள் வர்க்கமாக ஒன்றிணைந்து போராடுவதே சரியானதாகும். இதுபோன்ற போராட்டங்களை ஆதரிப்பதும் ஊக்குவிப்பதின் மூலமுமே நாம் ஈழம் போன்ற பிரச்சனைக்களுக்கு மக்கள் போராட வரவில்லை எனும் புலம்பல்களை நிறுத்தி போராடி வெற்றியடைய முடியும். போராடும் விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை என்றோ தொழிலாளர்களுக்கு என்ன பிரச்சனை என்றோ அறிந்துகொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவும் அளிக்காமல் அவர்களின் போராட்டங்களை ஊக்குவித்து போராட்ட குணத்தை அவர்களின் இயற்க்கை குணமாக மாற்ற நாமும் ஊக்கியாக இல்லாமல். அவனை நேரடியாக பாதிக்காத ஈழம் போன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் அவர்கள் குரல் கொடுக்கவில்லையென்றும் அவர்கள் களத்துக்கு வரவில்லையென்றும் பொலம்புவது அபத்தமே அன்றி வேறென்ன?. சிட்டகாங் போல இன்றைய மாணவர்கள் போராடாததன் காரணம் மானாட மயிலாட போன்ற நிகழ்சிகள் மூலம் முதலாளித்துவ ஊடகங்கள் தங்களை பாதுகாத்துக்கொல்வதேயாகும். பெற்றோரும் அதுபோன்ற நிகழ்சிகளுக்கு தங்கள் குழந்தைகளை தயார் செய்வதுமேயாகும் எனவே அதையும் தாண்டி தங்கள் பிரச்சாரம் மூலமாக பள்ளிப்பிள்ளைகளை போராட வீதிக்கு கொண்டுவர முயலும் தோழர்களின் போராட்டத்தை ஊக்குவிப்போம் துணை நிற்ப்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)