வெள்ளி, 20 மே, 2011

வானமெல்லாம் காவி


CALL THE DOG MAD AND SHOOT என்று  ஒரு ஆங்கிலப்பழமொழி உண்டு . அதைக்கொண்டுதான் RSS இன் சிந்தாந்தம் இசுலாமியர்களுக்கு எதிராக இயங்குகிறது . இந்த பழமொழியின் பொருள் இதுதான் ஒரு நாயை நாம் கல்லால் அடித்தால் வேடிக்கை பார்ப்பவர்கள் ஒரு வாயில்லா ஜீவனை போட்டு அடிக்கிரேயேடா பாவினு திட்டுவாங்க அதே அந்த நாய் வரும்பொழுது  அந்த நாயை காட்டி  பக்கத்து தெருவில நாலு பேரக்கடிச்சிருக்கு. முந்தாநாள் கூட மூனுபேரக்கடிச்சிருக்கு அதுக்கு வெறி பிடிச்சிருக்குன்னு ஒரு கதையா அவுத்துவிட்டா ஆகவேண்டியதை அங்கே குழுமியிருக்கும் பொதுமக்களே பார்த்துக்குவாங்க. இந்த தந்திரம் தான் CALL THE DOG MAD AND SHOOT . இந்த தந்திரத்தை இசுலாமியர்களுக்கு எதிராக காந்தி படுகொலை முதலே நிகழ்த்தி அதில் வெற்றியும் அடைந்து வருகிறார்கள் இந்த மாபாதகர்கள்.(கோவை இரத்தினபுரி அப்பாயி மன்றத்தில் ( DYFI ) மாணவர்களுக்கு  நடத்தப்பட்ட QUIZ ல் காந்தியை கொன்றது யார் என்ற கேள்விக்கு ஒருசில மாணவர்கள் முஸ்லீம்கள் என்றும் ஒரு சில  மாணவர்கள்  அல்லும்மா காரன் என்றும் பதில் எழுதியிருந்தனர்) 
இந்த தத்துவத்தின் அடிப்படயில் வெளிவநத்த ஏராளமான வெற்றிப்படங்களின் வரிசையில இப்போது வானம் இதற்க்கு முன் வந்த உன்னைப்போல் ஒருவன் போன்ற படங்களுக்கும் இந்த படத்திற்கும் ஒரு சின்ன வித்யாசம் உள்ளது அதுதான் பார்ப்பனியத்தின் உள்வாங்கி செரித்தல் எனும் யுக்தி. 
இதற்க்கு முன் வந்த படங்களில் அப்பட்டமாக இசுலாமியர்களை பயங்கரவாதிகளாகக்காட்டியது . அதை எல்லோரும் ஆதரிப்பதில்லை என தெரிந்ததும் . இந்து பாசிச்ட்டுகளையும் அவர்களின் சில போக்கிரித்தனங்களையும் முதலில் காட்டிவிட்டு . பின் இசுலாமிய பயங்கரவாதத்தை காட்டி இருக்கிறார் இதன் இயக்குனர் கிரிஷ். முன்பு இது போன்ற படங்களை சாடிய என் தோழியும் கூட இந்த திரைப்படத்தை அருமை என்று எழுதிகிறாள். இந்த இடத்தில்தான் இப்படம் முந்தயவற்றிளிருந்து மாறுபடுகிறது.
படத்தில் காவி பயங்கரவாதிகளை எப்பிடி காட்சிப்படுத்துகிறான். அவர்கள் சும்மா பேசிக்கொண்டிருக்கும் இரு ஆண் பெண்  நண்பர்களிடம் வந்து தாலியை கட்டவேண்டும் அல்லது ராக்கி கட்டவேண்டும் என்கின்றனர் . அப்போது அவர்களின் கையில் ஆயுதம் ஒன்றும் இல்லை. அதை அந்த நண்பர்கள் மறுக்கவே அங்கே சின்ன சண்டை நடக்குது இறுதியில் நாயகன் அவர்களை வென்று விடுகிறான். சரி இது உண்மையிலேயும் நடந்த நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களே. அதற்க்கு ராம் சேனாவும் பொறுப்பேற்று உள்ளனர் இங்கே தமிழ்நாட்டிலும் காவி மதவாத அமைப்புகள் இச்செயலை ஆதரிக்கின்றன.
ஆனால் சிறுபான்மை சமூகத்தை காட்டும்பொழுதோ எப்படி காட்சிப்படுத்தப்படுகிறது. ஒரு இசுலாமிய குடும்பம் விநாயகர் சிலை ஊர்வலத்தை(நிஜத்தில் பொதுவாக  நடக்கும் துலுக்கன வெட்டு துளுக்கட்சியை கட்டு போன்ற கோசங்கள் எல்லாம் இல்லாத ஊர்வலம்) கடக்கும் பொழுது மனைவியின் மீது கலர் பூசும் கயவனிடம் ஞாயம் கேட்க்க தாக்கப்படுகிறார். அப்போதும் ரத்தம் வரும் அளவெல்லாம் தாக்குதலின் தீவிரம் இல்லை .இங்கே காவல் துறை அதிகாரி வந்து சமரசம் செய்துவைத்து அதே சமயம் முஸ்லீம் அண்ணன் தம்பிகளை நீங்கள் எதுவும் செய்வீர்கள் என்று கூறி ஒரு அறை அறைந்து அனுப்பி வைக்கிறார்( கோவை குண்டு வெடிப்புக்கு காரணமான நவம்பார் படுகொலைகளில் போலிசுகாரர்களே அடிபட்ட துலுக்கணுக பெரியாசுபத்திரிக்கு வரானுகனு வயர்லஸ் இல் தகவல் கொடுத்ததை என்னவென்பதுகாவலர்களே தங்கள் பைக்கிலிருந்து பெட்ரோல் எடுத்துக்கொடுத்து இசுலாமியர்களை அரசு மருத்துவமனையில் வைத்து எரித்ததும் அது  ஜூ வீ யில் படமாக வெளிவந்ததும் இங்கே நினைவு கூறுவது நன்று)    கைகலப்பில் தள்ளிவிடப்படும் இங்கே மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் அதாவது வேண்டுமென்றே தாக்கப்படாமல் எதார்த்தமாக கீழே விழும் கர்பிணி மனைவியின் கர்ப்பம் கலைகிறது அதை பார்த்து ஆத்திரப்படும் கணவனின் தம்பி தீவிரவாதியாக மாறுகிறான். பிறகு ஊருக்கு ஒரு பெயருடன் சுற்றுகிறான். கையில் பயங்கர ஆயதங்களுடன் மருத்துவமனையே தாக்குகிறான். முந்தய காட்சியில் காட்டப்பட்ட காவி பயங்கரவாதிகளைப்போல் ஒரு நாயகனால் வெள்ளப்படமுடிபனல்ல இந்த பயங்கரவாதி. என்பதுபோல் காட்சிப்படுத்தப்படுகின்றன சிறுபான்மையினரின் பகுதிகள்.
காவி பயங்கரவாதம்தான் இந்தியாவில் நடந்த பெரும்பான்மையான குண்டுவெடிப்புகளுக்கு காரணம் என்பதை கண்டறிந்ததுதான்  கார்க்கரேவின் படுகொலைக்கே காரணம் என்பதை கர்க்கரேவின் மனைவி தெரிவித்த பிறகும் கர்க்கரேவின் சான்றுகளுக்கு பிறகும் அசிமானந்தாவின் வாக்குமூலத்திற்கு பிறகும் இன்னும் எத்துனை ஆண்டுகளுக்கு இந்திய சினிமாவில் இசுலாமியர்களுக்கு மட்டுமே குண்டு வைக்க தெரியுமோ தெரியவில்லை.
விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டதல்ல எந்த மதமும் இசமும் ஆனாலும் அது அவதூறாக இருந்து ஒரு பொது புத்தியை உறவாக்கி விடக்கூடாது என்பதே என் கருத்து .
இசுலாமிய நம்பிக்கை பற்றி விமர்சித்து நண்பரின் மறைபொருள் எனும் குறும்படத்தை கோவையில் வெளியிட்டு இருக்கிறோம் .
 யுத்தம் செய் படத்தில் இசுலாமியர்களை கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று நண்பர் தமிழ் எழுதிய கருத்திலும் முரன்பட்டோம் காரணம் கோவை குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி பாட்சாவின் அக்கா மகனே ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு கொண்டு , கொலை செய்து இப்போது சிறையில் இருக்கிறான் எனவே ஒரு தனி நபருக்கு முஸ்லீம் பெயரை வைத்து படத்தில் சித்தரிப்பது என்பது வேறு ஆனால் ஒரு சமூகத்தை சித்தரிப்பது என்பது வேறு 
எனவே வானமும் ஒரு காவி சிந்தனை படமே ...  என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்