புதன், 22 டிசம்பர், 2010
கீழ்வானம் சிவக்குது
உழைக்கும் மக்களின் தன்மான உணர்வு எத்தகையது என்பதற்கு உலக வங்கியில் இந்திய வாங்கியுள்ள கடனுக்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா 3500 ரூபாய்க்கு மேல் கடன் உண்டென்பதரிந்து அந்த தொகையை நாட்டு பிரதமருக்கு மணி ஆர்டர் எடுத்து அனுப்பிய திருச்சி கைவண்டி இழுக்கும் தொழிலாளியின் செயல் ஒன்றே சான்றாகும். மேலும் இனிமேல் இதுபோல் கடன் வாங்க வேண்டாம் என்றும் அப்படி வாங்கும் முன் தன்னிடம் கேட்டுவிடுமாரும் கடிதம் போட்டிருந்தாராம். இந்த பத்திரிகை செய்தியை படித்து விட்டு அந்த தொழிலாளியின் அறியாமையை எள்ளி நகையாடினர் மேட்டுக் குடி நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள். அந்த தொழிலாளியின் தன்மான உணர்வை அறிவு(!)ஜீவிகளுக்கு எடுத்து சொல்லி விளக்கியதும் மன்னிப்புக்கேட்டு விலகிக்கொண்டனர். இங்கே விஷயம் அதுவல்ல இப்பேர்ப்பட்ட தன்மையும் தன்மான உணர்வும் கொண்டது உழைக்கும் மக்களின் மனநிலை. இப்படி பட்ட மக்களையும் அவர்களின் மன நிலையையும் இதுவரை காயடித்து வந்த தொழிற்சங்கங்களுக்கு காயடித்துள்ளனர் கோவை NTC (பஞ்சாலை) தொழிலாளர்கள். கோவை நகரை உருவாக்கியதில் கோவையில் இருக்கும் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு முக்கிய பங்குண்டு இன்று இங்கே செயல் பட்டுக்கொண்டிருக்கும் கல்வி நிறுவங்கள், மருத்துவமனைகள் எல்லாமே பஞ்சாலை முதலாளிகள் பஞ்சாலையில் இருந்து பெற்ற இலாபத்தில் கட்டியதே. அதேபோல போராட்ட குணத்திலும் இந்த பஞ்சாலை தொழிலாளர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு ஸ்டேன்ஸ் மில் போராட்டமும் சின்னியம் பாளையம் தியாகிகளின் உயிர் தியாகமும் பறைசாற்றுகிறது எனினும் இப்படிப் பட்ட உழைக்கும் மக்களைத்தான் கடந்த காலங்களில் அனைத்து ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கமும் மடைமாற்றி ஏய்த்து வந்தன அவர்கள் தொழிலாளிகளின் போராட்ட குணத்தை மாற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுத்ததெல்லாம் நாமம் போராட்டம், கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டம் போன்றவைகளையே. இது போன்ற சூழலில் தான் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி கோவையில் செயல்படத்தொடங்கி கோவையில் உள்ள SRI எனும் நிறுவனத்தில் மிகப்பெரும் அடக்குமுறைகளை எல்லாம் சந்தித்து தன் போராட்ட குணத்தால் பல்வேறு சலுகைகளை தொழிலளர்களுக்கு பெற்றுத்தந்தது இதை பார்த்து பல்வேறு ஆலைகளில் பு ஜ தொ மு வின் கிளைகள் கட்ட தொழிலாளர்கள் ஆர்வப்பட்டு கோவையில் சில நிறுவனகளில் கிளைகளும் கட்டப்பட்டு தொழிலார்களுக்காகவே இயங்கிவருகிறது. இந்த சூழலில் தான் இதுவரை தேர்தலே நடக்காமல் இருந்த NTC மில்களில் தேர்தல் நடத்தவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கிட்டு வெற்றி கண்டது பு.ஜ.தொ.மு.வுடன் இணைக்கப்பட்ட கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கம சங்க பிரதிநிதிகளின் அயராத உழைப்பாலும் அவர்களின் எளிமையாலும் எளிதாகவே தொழிலாளர்கள் அவர்களை நோக்கி வருவது கண்டு பயந்த துரோக சங்கங்கள் பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் பொய் பிரச்சாரங்களையும் செய்து பார்த்தும் தேர்தலில் தொழிலாளர்கள் பெருவாரியாக வாக்களித்து சங்கத்தை இரண்டாம் இடத்தில் கொண்டுவந்தனர் சங்க கிளையே இல்லாத இடத்தில் கூட தொழிலாளர்கள் வாக்களித்துள்ளனர் கோவை பாட்டாளிகளின் வரலாறு மீண்டு(ம்) எழுதப்படுகிறது கீழ்வானம் சிவந்து விட்டது இனி பழைய விலங்குகளை கழட்டிவிட்டு புதிய சிறகுகளுடன் பறக்கலாம் வாழ்த்துக்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)